செவ்வாய், 8 ஜூன், 2010

English - வார்த்தை வளம் வளர்க்க . . .






ஒரு மொழியை நாம் சரளமாக பேசும் திறமை, அந்த மொழியில் நாம் தெரிந்து வைத்திருக்கும் மற்றும் தினசரி உபயோகப்படுத்தும் வார்த்தைகளின் எண்ணிக்கையை பொறுத்தது.

English கிளாஸ் போனீங்கன்னா Vocabulary power என்று சொல்வார்கள். அதாவது வார்த்தை வளம். English வார்த்தைகளை நினைவு கொள்ள உதவும் பல விளையாட்டுகளில் ஒரு தனித்துவமான விளையாட்டு தான் இந்த Wordz.


திரையில் சில அர்த்தமற்ற வார்த்தைகள் இருக்கும். அந்த வார்த்தைகளில் இருக்கும் வெள்ளை நிற எழுத்துகளை மட்டும் கவனியுங்கள். அந்த எழுத்துகளை மட்டும் நீங்கள் இடம் மாற்ற முடியும்.

இரண்டு வெள்ளை நிற எழுத்துகளை மவுஸால் கிளிக்கும் போது அவை இரண்டும் மாறிக்கொள்ளும். இவ்வாறு எழுத்துகளை இடம்மாற்றி அர்த்தமுள்ள வார்த்தைகளை உருவாக்க வேண்டும்.

அடுத்தடுத்த Level-களில் அதிகமான வெள்ளை நிற எழுத்துகள் தோன்றி நமக்கு சவால் விடுகின்றன. நிறைய words தெரிந்து கொள்ள உதவுகிறது இந்த Wordz.

லின்க் : http://www.6to60.com/games/1224-Wordz.html

திங்கள், 7 ஜூன், 2010

ப்ளீஸ்! என்னை கொஞ்சம் காப்பாத்துங்களேன் : சிக்கன்



எப்படி இருந்த நான் . . .



இப்படி ஆயிட்டேன்!




இன்னிக்கு தேதி வரைக்கும் நாம் தின்று தீர்த்த கிலோ கணக்கான சிக்கன்களுக்கு ஒரு சின்ன பிராயச்சித்தம் செய்யலாம்.

Rescue a Chicken அப்படீங்கிற பெயரிலேயே ஒரு விளையாட்டு இருக்கு.



ஒரு ஊரில் ஒரு கோழி இருக்கிறது. அந்த கோழிக்கு ஒரு பிள்ளை இருக்கிறது. இல்லை இல்லை . . . மூன்று பிள்ளைகள் இருக்கின்றன. மூன்று பேருக்கும் உயரம்னாலே பயம்.

இந்த மூன்று கோழிகளும் ஏதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்திருக்கும். அதை சரியாக கூட்டுக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்ப்பது தான் நம் வேலை.

அங்கங்கே இருக்கும் மஞ்சள் நிற வைக்கோல்களை கிளிக்கினால் அவை மறைந்து போகும். வேறு எந்த பொருளையும் நம்மால் எதுவும் செய்ய முடியாது. இதை விளையாட மவுஸே போதுமானது.

கதை தான் சிறுபிள்ளைத்தனமானது. ஆனால் விளையாட்டு அவ்வளவு சுலபமல்ல.

மொத்தம் 42 Level-கள். எல்லாமே வித விதமான இயற்பியல் புதிர்கள். விளையாடி முடிப்பதற்குள் "கோழியே சமைக்க வேணாம்!" என கத்தத் தான் போகிறீர்கள்.

லின்க் : http://www.6to60.com/games/9701-Rescue%20a%20Chicken.html

வெள்ளி, 21 மே, 2010

உயிர் நண்பன் Vs குட்டி ராட்சஷி - கலக்கல்





சில ஜாலியான சினிமாக்கள் வரும் போது friends-ஸோட சேர்ந்து போங்கப்பா என சொல்வதுண்டு. ஏன்னா அந்த படங்களை தனியாக பார்ப்பதை விட சேர்ந்து பார்க்கும் போது இன்னும் பல மடங்கு உற்சாகமாக இருக்கும். சேர்ந்து சிரிக்கிறதுங்கிறதே ஒரு ஆரோக்கியமான விஷயம் தானே?

அந்த மாதிரி நீங்க friends-ஸோட சேர்ந்து உட்கார்ந்து ஜாலியாக விளையாட ஒரு கலக்கல் விளையாட்டை இங்க அறிமுகப்படுத்துறேன்.

விளையாட்டின் பெயரே "A Friend In Need" தான்.

சின்ன பிள்ளையாக இருக்கிறப்ப Monkey Catch அப்படீன்னு ஒரு விளையாட்டு அடிக்கடி விளையாண்டிருக்கிறோம். ஞாபகம் இருக்கிறதா? அப்படியே கீழே இருக்கும் படத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே ஒரு Flash Back போங்கள்.



ரைட்! மூன்று பேர் சேர்ந்து விளையாடும் விளையாட்டு அது. உதாரணத்திற்கு மூன்று பேரின் பெயர்கள் A,B,C என வைத்துக் கொள்வோம். இதில் A-யும் C-யும் எதிரெதிரே இருக்க B மட்டும் நட்ட நடுவில் இருப்பார். அவர் தான் Monkey.

A தன் கையில் இருக்கும் பந்தை சரியாக C-ஐ நோக்கி எறிவார். அதே மாதிரி C அதை Catch பிடித்து A-ஐ நோக்கி எறிவார். நடுவில் இருக்கும் B கைக்கு பந்து கிடைத்து விடாமல் இருவரும் மாறி மாறி எறிய வேண்டும்.

ஓகே. இப்ப எதுக்கு வேலை வெட்டியில்லாம இந்த கதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கேன்னு கேட்டீங்கன்னா . . . இந்த கதையும் நாம பார்க்கப் போகிற விளையாட்டின் கருவும் ஒரே மாதிரி தான்.



உங்களுடைய உயிர் நண்பருடைய நீல வண்ணக்குழந்தையை ஒரு குட்டி அடங்காப்பிடாரி ராட்சஷியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

இரண்டு நண்பர்கள் எதிரெதிரே நிற்கிறார்கள். நடுவில் இருப்பது குட்டி ராட்சஸி. குட்டி ராட்சஷி யார் கையில் குழந்தை இருக்கிறதோ அவர்களை துரத்து துரத்தென்று துரத்துகிறாள்.

குட்டி ராட்சஷி ரொம்ப பக்கத்தில வர்றதுக்கு முன்னாடி குழந்தையை இன்னொரு பக்கம் தூக்கிப் போட்றணும். அவ்வளவே!. ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை. ஏன்னு நீங்க விளையாடறப்ப தெரியும்!

இதை விளையாட மவுஸே போதுமானது. தூக்கிப் போடறதுக்கு மவுஸை கிளிக்கினால் போதும். மொத்தம் மூணு வகையான Speeds இருக்கிறது. மவுஸை எங்கே வைத்து கிளிக் பண்றீங்களோ அதுக்கேத்த மாதிரி Speed வரும்.

லின்க் : http://www.6to60.com/games/9698-A%20Friend%20In%20Need.html

ரொம்ப ஜாலியான விளையாட்டு இது. எவ்வளவு நேரம் சமாளிக்கிறீங்களோ அது தான் உங்க Score. விளையாடி பார்த்து Score-ஐ பின்னூட்டம் போடுங்களேன்.

வியாழன், 20 மே, 2010

பொழுதுபோக்கு : கரண்ட் கம்பத்தில் ஒரு திகு திகு ஓட்டப்பந்தயம்




"ரொம்ப போரடிக்குது. நேரம் ஓடவே மாட்டேங்குது. என்ன சார் பண்ணலாம் ?"

ஓடுங்க.

"ஹ்ம்ம்ம். ரொம்ப்ப்ப்ப நல்ல ஐடியா. சரி. எங்க ஓடுறது?"

கரண்ட் கம்பத்தில.

"யோவ்!"

அட நிஜ கரண்ட் கம்பத்தில இல்லைங்க. நான் சொன்னது Bugs on a Wire என்ற ஆன்லைன் விளையாட்டுல.

"ஆரம்பிச்சிட்டான்யா! சரி எவ்வளவு நேரம் ஓடிக்கிட்டே இருக்கிறது?"

உங்களால எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க முடியுதோ அவ்வளவு நேரம் தான்.



"ஏன் அவ்வளவு கஷ்டமா?"

ஒரு நிமிடம் நீங்க தாக்குப்பிடிச்சா உங்களுக்கு இந்த வருடத்தின் சிறந்த ஒடுகாலி விருது தரலாமுண்ணு இருக்கேன்.

"கொல்றானே . . . சரி. எப்படி விளையாடுறது?"

மொத்தம் நாலு கம்பி இருக்குது. நீங்க ஏதாவது ஒரு கம்பி மேலே ஓடுறீங்க. Left பக்கம் போக Left Arrow அமுக்குங்க.

"Right பக்கம் போக Right Arrow-வாண்ணா?"

ஆமாங்கண்ணா.

"சரி. நான் மட்டும் தான் தனியா ஓடணுமா?"

ஏன்? கூட யாராவது அழகா வந்தா தான் ஓடுவீங்களோ?

"ஓகே. கூல். கூல்."

நம்ம ஓடும் போது வழியில அங்க இங்க காக்கா உட்கார்ந்திருக்கும்.

"அதை சாப்பிடணுமா?"

இல்ல இல்ல. அதுதான் உங்களை சாப்பிடும். அதுட்ட இருந்து தப்பிக்க தான் நான் சொன்ன Left Arrow, Right Arrow.

"ஓகே. போதும். லின்க் கிடைக்குமா?"

இதோ : http://www.6to60.com/games/4564-Bug%20On%20A%20Wire.html

"விளையாடிட்டு வரேன். அதுசரி . . .ரொம்ப நாளா ஒரு சந்தேகம். இந்த மாதிரியெல்லாம் பதிவு போடணும்னு உனக்கு யாருய்யா சொல்லிக் கொடுத்தா?"

(செஞ்சுரி அடித்த சச்சினை போல நிமிர்ந்து மேலே வானத்தை பார்க்கிறேன்.)

செவ்வாய், 18 மே, 2010

மூன்று கோடுகள் புதிர் - எளிமையானது, தலை சிறந்தது




எப்பொழுதும் ஒரே மாதிரியான வேலையே பார்த்து பார்த்து சோர்வடைந்திருக்கும் உங்கள் மூளைக்கு கொஞ்ச நேரம் செமையாக தீனி போட ஒரு நுட்பமான புதிர்.

ஒவ்வொரு Level-லிலும் திரையில் ஏதாவது சில பொருட்கள் மேற்கண்டவாறு இருக்கும். நீங்கள் மூன்று கோடுகள் வரைய வேண்டும். அந்த மூன்று கோடுகள் திரையை ஐந்து பாகங்களாக பிரிக்க வேண்டும்.

முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அந்த ஐந்து பாகங்களும் சமமாக பிரிந்திருக்க வேண்டும். அதாவது மேலே பத்து முகங்கள் இருக்கிறது. நீங்கள் பிரித்து மேய்ந்த (?!) பின் ஐந்து பாகங்களிலும் இரண்டிரண்டு முகங்கள் இருக்க வேண்டும்.

அதே மாதிரி நீங்கள் போடும் கோடு எந்த பொருளின் மேலேயும் விழக்கூடாது. முதல் நான்கு Level-களில் மட்டும் ஐந்து பாகங்களாக பிரிக்க வேண்டும். மீதி Level-களில் நான்கு பாகங்களாக பிரித்தாலே போதுமானது.

விளையாட மவுஸ் மட்டுமே போதுமானது. முதல் நான்கு Level-களை தாண்டினாலே நீங்க பெரிய ஆள் தான் பாஸ்!

லின்க் : http://www.6to60.com/games/9697-3%20Line%20Riddle.html

திங்கள், 17 மே, 2010

ஒரு சவால் - பதிவைத் திற புத்துணர்ச்சி வரட்டும்




உங்கள் கண் முன்னால் ஒன்று தெரிகிறதே அதைத் தானே நீங்கள் பார்க்கிறீர்கள்?

ஆம் என்பது உங்கள் பதிலாக இருந்தால் இந்த Mind Reader என்ற விளையாட்டை விளையாடி உங்கள் பதிலை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இந்த விளையாட்டின் கரு "யார் மனசுல யாரு?" என்பதே. விஜய் டிவி நிகழ்ச்சியை நினைவு கூராதீர்கள். அது இது இல்லை.

திரையில் தோன்றும் ஒவ்வொரு முகமும் ஏதாவது ஒரு வடிவத்தை நினைத்துக் கொண்டே இருக்கிறது. அது அதனுடைய நெற்றிப் பொட்டில் தெரிகிறது. இது ஒவ்வொரு நொடியும் தொடர்ந்து மாறுகிறது.

இந்த கூட்டத்தில் ஒரு முகம் மட்டும் Mind Reader ஆக இருக்கும். அது எந்த முகம் என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும்.



உதாரணத்திற்கு மேற்காணும் படத்தை எடுத்துக் கொள்க. இதில் PROFESSOR இப்பொழுது "X" எனும் வடிவத்தை நினைக்கிறார். அடுத்த நொடியில் GRANNY அதே "X" வடிவத்தை நினைக்கிறார். அதே மாதிரி அடுத்த நொடியில் PROFESSOR முக்கோணத்தை நினைக்க அதற்கடுத்த நொடியில் GRANNY அதே முக்கோணத்தை நினைக்கிறார்.

அப்படியானால் GRANNY தான் இங்கே Mind Reader. அவர் PROFESSOR -ன் மனதை படிக்கிறார். விடை கண்டுபிடித்தவுடன். அதை கீழே திரையில் உள்ள இரண்டு பெட்டிகளில் தேர்வு செய்ய வேண்டும். அதாவது உதாரணத்திற்கு "GRANNY IS READING PROFESSOR'S MIND" என்று வருமாறு தேர்வு செய்து விட்டு வலது கீழ் ஓரத்தில் உள்ள Check-க்கை கிளிக்கினால் உங்கள் விடை சரிதானா என தெரிந்து கொள்ளலாம்.

அடுத்தடுத்த Level-களில் முகங்களின் எண்ணிக்கையும் அவற்றின் வேகமும் அதிகரிக்கும். கண்ணையும் மனதையும் ரிலாக்ஸாக வைத்துக் கொண்டு கவனமாக விளையாடினால் கொஞ்ச நேரம் தாக்குப்பிடிக்கலாம்.

லின்க் : http://www.6to60.com/games/9696-Mind%20Reader.html

All the Best

வாங்க! செத்து செத்து விளையாடலாம்





ஒருநாள் ஏதோ ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள். எங்கேயாவது விழுந்து செத்து போயிட்டா என்ன? என்ற மாதிரியான எண்ண ஓட்டத்தில் இருக்கிறீர்கள். அந்த சூழ்நிலையில் உங்க மனதை ரிலாக்ஸ் பண்ணுகிற ஒரு கலக்கல் ஜாலி புதிர் விளையாட்டு தான் Super Karoshi.

எல்லா விளையாட்டுகளையும் போல ஒரு ஹீரோ இருக்கிறார். Arrow கீகள் பயன்படுத்தி ஓடலாம், தாவலாம். சில பல தடைகளை தாண்டினால் விளையாட்டின் இறுதியில் ஒரு கதவு இருக்கிறது.


நிற்க. அந்த கதவு அடுத்த Level-க்கு போவதற்கல்ல. அது Exit கதவு. அப்படின்னா அடுத்த Level-க்கு போறதுக்கு நீங்க என்ன பண்ணணும்? ஜஸ்ட் தற்கொலை பண்ணணும் அவ்வளவே.(இங்கயுமா?)

விளையாட்டில் உள்ள முற்களால் செய்தால் ஆப்பு போன்ற அமைப்பு எங்கே இருக்குன்னு பார்த்து அதில் ஏறி உட்கார வேண்டும். அவ்வளவே.



Level ஏற ஏற எப்படி தற்கொலை பண்றதுன்னு ரூம் போட்டு யோசிக்க வேண்டியதிருக்கும். அது எப்படின்னு விளையாடி பார்த்துக்கங்க . . . விளையாட்டு தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே The end-ன்னு வரும். உடனே அவசரப்பட்டு முடிஞ்சிருச்சுன்னு நினைச்சிராதீங்க. அதுவும் ஒரு Level தான்.

யாராலும் வாழ்கையில் இரண்டு தடவை செய்ய முடியாத விஷயம் ஒன்று இருக்கிறது. அது தற்கொலை. ஆனா இந்த விளையாட்டில் அதையும் பல தடவை கிரியேட்டிவிட்டியுடன் பண்ணி மகிழலாம்.

லின்க் : http://www.6to60.com/games/9692-Super%20Karoshi.html


திங்கள், 10 மே, 2010

English பேசுற மகான்களே! உங்க Grammar சரிதானா?




இந்த பதிவை போட என்னை தூண்டிய என்னுடைய புதிய காலேஜ் வாத்தியார் **********-க்கு என் மனமார்ந்த நன்றிகள். ஏன்னா ஒரு மணி நேர வகுப்பில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் English-ஐ கொடுமைப் படுத்தி "நான் ஏன் பிறந்தேன்?" அப்படீங்கிற மாதிரி எதிர்மறையான சிந்தனைகள் எல்லாம் என் மனதில் வரவைத்திருக்கிறார்.

Woody Allen ஒரு படத்தில் தன் பால்ய கால வாத்தியார்களை பற்றி ஒரு விஷயம் சொல்வார். "I remember the staff at our public school. You know, we had a saying, that those who can't do teach, and those who can't teach, teach gym. And, those who couldn't do anything, I think, were assigned to our school.". எனக்கு அந்த காட்சி தான் அவருடைய வகுப்பில் ஞாபகம் வந்தது.

English தெரிந்தவர்களில் English-ஐ கடித்து மெல்லாமல் பேசுபவர்கள் எத்தனை பேர் என்று ஏதாவது Survey எடுத்தால் நன்றாக இருக்கும்.

என்னிடம் கேட்டால் ஆங்கில வழியில் படித்து வருபவர்களை விட தமிழ் வழியில் படிப்பவர்களே பின்னாளில் ஆங்கிலத்தை திருத்தமாக பேசுகிறார்கள். தமிழ் வழியில் படிப்பவர்களிடம் நாம் பேசுவது தவறாக இருக்குமோ என்ற பயம் எப்பொழுதும் கொஞ்சம் இருக்கும். அதனால் தான் அவர்கள் fluent - ஆக பேசாவிட்டாலும் அதிகமாக தவறில்லாமல் பேசுகிறார்கள்.

ஆங்கில வழியில் படித்த மேதாவிகளிடம் அபாரமான fluency இருக்கிறது. Fluency என்று நான் சொல்வது பேசுவதில் மட்டுமல்ல தவறுகள் விடுவதிலும் தான்! ஆனாலும் அதையும் ரொம்ப தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து பேசி நமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆங்கில அறிவையும் பதம் பார்க்கிறார்கள்.

அலுக்காமல் English-ல் பீட்டர் விடுகிற நமக்கு அந்த மொழியின் அடிப்படை இலக்கணம் சரியாக தெரிந்திருக்கிறதா என தெரிந்து கொள்ள ஒரு பரிட்சை தான் Grammar Ninja.



ஒரு வாக்கியம் கொடுத்து அதில் உள்ள Verbs,Nouns,Adverbs என்று எதையாவது காட்ட சொல்கிறார்கள். அந்த வார்த்தைகளை நீங்கள் மவுஸால் கிளிக்க வேண்டும். அவ்வளவே!

நீங்கள் தவறானதை கிளிக்கினால் அதை அப்பொழுதே சுட்டிக் காட்டுகிறார்கள். அதனால் நம்முடைய திறமையை பரிசோதிப்பதுடன் நம்முடைய தவறுகளையும் தெரிந்து கொள்ளலாம்.

லின்க் : http://www.6to60.com/games/7415-Grammar%20Ninja.html


வெள்ளி, 7 மே, 2010

::நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு::போர் வியூகம் அமைத்தல்::






ஒரு நியூட்டன் விதி :


"ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் ஆற்றலை ஒரு வடிவில் இருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றலாம்."

மனிதர்களின் விருப்பங்களும் ரசனைகளும் கூட இதே போலத்தான் போலிருக்கிறது. காலம் எவ்வளவு மாறினாலும் சில விஷயங்கள் மீதான நம் ஆர்வம் புதிய விதமான வடிவங்களில் அப்படியே தொடர்கிறது.

இந்த நூற்றாண்டில் வெளிவந்த இணைய விளையாட்டுகளிலேயே ஜாம்பவானாகத் திகழும் Desktop Tower Defense பற்றிய ஒரு அலசல் தான் இந்த பதிவு.

ஆல்கஹாலைப் போல ஒரு மனிதனை அடிமையாகச் செய்யும் தன்மையை இந்த விளையாட்டு கொண்டிருக்கிறது என்று விமர்சிக்கிறார்கள் சில உளவியலாளர்கள். நான் கூட ஆபிஸில் Tea டயத்தில் கூட எந்திரிக்காமல் உட்கார்ந்து விளையாடி கொண்டிருப்பேன்.
(தம்பி! டீ இன்னும் வரலை)


அப்படி என்ன இந்த விளையாட்டில் இருக்கிறது?

குழந்தைகள் கூட எளிதாக புரிந்துகொள்ளும் தன்மையுடன் இருப்பதும் , அதீத புத்திசாலித்தனமான வடிவமைப்பும், போர் மீதான தனி மனிதனின் ஆர்வமும் தான்.

போர் என்றவுடன் ரத்தத்தை நினைவு கூராதீர்கள். இந்த விளையாட்டில் அது துளியும் இல்லை.

Desktop Tower Defense -ன் கரு : உங்கள் கோட்டைக்குள் கொத்து கொத்தாக எதிரிகள் படையெடுக்கிறார்கள். ஒவ்வொரு படையும் ஒவ்வொரு வகையான பலத்தன்மை கொண்டது. அந்த எதிரிப் படை கோட்டையின் மறுபக்கத்தை அடைய விடாமல் அவர்களின் கதையை முடிக்க வேண்டும்.

சரி. இந்த விளையாட்டில் உங்களின் வேலை என்ன?

துப்பாக்கியெடுத்து டுப் டுப்பென்று சுட வேண்டும் என்று நினைத்தீர்களானால் ரொம்ப தப்பு. உங்களின் வேலை ஒரு சரியான போர் வியூகத்தை உடனுக்குடன் அமைத்துக் கொண்டே இருப்பது தான். சுடுவதையெல்லாம் அவர்கள் பார்த்து கொள்வார்கள்.

போர் வியூகம் அமைக்க உங்களிடம் பல வகையான பீரங்கிகள் இருக்கின்றன. ஒவ்வொரு பீரங்கியும் குறிப்பிட்ட சிறப்பம்சங்கள் கொண்டதாக இருக்கும். அவை எல்லாவற்றையும் இங்கே சொல்ல ஆரம்பித்தால் இந்த நூற்றாண்டின் நீளமான பதிவாக இந்த பதிவு மாறி விடும் அபாயம் இருக்கிறது. நிற்க.

முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு பீரங்கியும் ஒரு குறிப்பிட்ட தங்க டாலர்கள் மதிப்பு கொண்டது. தங்கத்திற்கு எங்கே போவது? நீங்க எங்கேயும் போக வேண்டாம். விளையாட்டு தொடங்கும் போதே உங்களிடம் 80 டாலர்கள் இருக்கும். விளையாட்டில் எதிரி படைகளை அழிக்க அழிக்க உங்களின் டாலர் மதிப்பு ஏறிக் கொண்டே செல்லும். உங்களின் கையிருப்பை திரையின் மேல் பகுதியில் மஞ்சள் நிறத்தில் காணலாம்.

அதே மாதிரி உங்களிடம் இருந்து எத்தனை பேர் தப்பித்து போகிறார்கள் என்பதை மேலே சிவப்பு வண்ணத்தில் காணலாம்.



எப்படி விளையாடுவது?

  • விளையாட்டு தொடங்கும் போது Easy, Medium, Hard, Challenge என தோன்றும் பொழுது Easy என்று தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். (உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்.)
  • வலது பக்கம் இருக்கும் பீரங்கிகளில் ஒன்றை கிளிக்கி தேர்ந்தெடுக்கவும். பின்னர் நம்முடைய களத்தில் தேவையான இடத்தில் வைத்து கிளிக்கினால் பீரங்கியை அந்த இடத்தில் வைக்கலாம்.
  • சில நேரங்களில் ஒரு பீரங்கியின் மேல் அதே பீரங்கியை வைக்கலாம். இதனால் அதனுடைய வீரியம் அதிகரிக்கும்.
  • உங்களின் கையிருப்பு டாலர்களை கணக்கில் கொண்டு எவ்வளவு சக்தியான பீரங்கிகளை கிளிக்குவது என முடிவு செய்ய வேண்டும்.
  • அதே மாதிரி வெளியே செல்லும் பாதையை அடைக்கும் வகையில் உங்களால் எந்த இடத்திலும் பீரங்கிகளை அடுக்கி வைக்க முடியாது.

இந்த விளையாட்டை பொறுத்தவரை எவ்வளவு நேரம் களத்தில்(?!) தாக்குப் பிடிக்கிறீர்கள் என்பதில் தான் உங்கள் ஆளுமை அடங்கியிருக்கிறது. அதிக நேரம் விளையாட மகாபாரதத்தில் வரும் சக்கர வியூகம் மாதிரியான விஷயங்கள் எல்லாம் பண்ண வேண்டியதிருக்கும்.

லின்க் : http://www.6to60.com/games/9690-Desktop%20Tower%20Defense.html

விளையாடி விட்டு உங்கள் அதிகபட்ச Score-ஐ இங்கு பகிர்ந்து கொள்ளுங்களேன்.

வியாழன், 6 மே, 2010

ஒரு பாலம்! ஒரு குடும்பம்! ஒரு புதிர்!




ஒரு வரலாற்று சிறப்பு மிக்க புதிர். உங்கள் கையில் இருக்கும் நேரத்தை எவ்வளவு திறம்பட பயன்படுத்த முடியும் என்பது தான் இந்த புதிரின் அடிப்படை கரு.

இந்த புதிரின் கதை இது தான்.

ஒரு நாள் இரவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் ஒரு மலையில் மாட்டிக் கொள்கிறார்கள். கையில் இருப்பது ஒரே ஒரு விளக்கு. அதை வைத்து அனைவரும் ஒரு பாலத்தை கடந்தாக வேண்டும்.

இன்னும் மீதமிருப்பது 30 நிமிடங்கள் தான். 30 நிமிடத்திற்குள் மொத்த குடும்பத்தையும் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு கொண்டு சொல்ல வேண்டும். அவ்வளவே!

ஒரு நேரத்தில் அதிகபட்சம் இரண்டு பேர் தான் பாலத்தில் செல்ல முடியும். குடும்பத்தில் ஒவ்வொரும் பாலத்தை கடக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி நேரம் எடுத்துக் கொள்வார்கள்.

அது எவ்வளவு நிமிடங்கள் என்பது ஒரு ஆளின் பக்கத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.இரண்டு பேர் நடக்கும் போது இருவரில் யார் குறைவான வேகம் கொண்டவர்களோ அந்த வேகத்தில் தான் இருவரும் நடப்பார்கள்.

அதே மாதிரி இருவரில் ஒருவர் நிச்சயமாக விளக்கு வைத்திருக்க வேண்டும். அதாவது இருவர் பாலத்தின் எதிர்ப்புறத்தை அடைந்த பின் ஒருவர் மீண்டும் திரும்பி வர வேண்டும்.

பாலத்தை கடக்க 30 நிமிடங்கள் தேவைப்பட்டாலும் இந்த புதிரை அவழ்க்க ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே ஆகும். முயற்சி பண்ணி பாருங்கள்.

லின்க் : http://www.6to60.com/games/9688-Bridge%20Crossing.html

வங்கி தேர்வு / Aptitude தேர்வு எதாவது ஒன்றுக்கு தயாராகிறீர்களா?




இந்த பதிவின் தலைப்புக்கு ஆம் என்பது உங்கள் பதிலாக இருந்தால் உங்களுக்காகத்தான் இந்த பதிவு.

IT வேலைக்கு தேவையான பரிட்சையானாலும் அல்லது எந்த ஒரு முக்கியமான அரசு பணிக்கான தேர்வுக்கு நீங்கள் சென்றாலும் உங்களுக்கு வைக்கப்படும் Aptitude தேர்வில் நீங்கள் சந்தித்தே ஆக வேண்டிய ஒரு கேள்வி வகை உண்டு.

ஒரு நான்கைந்து கட்டங்கள் கொடுத்திருப்பார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு குட்டி வரைபடம் இருக்கும். அந்த வரைபடங்களை கவனித்தால் அவைகளுக்கு இடையே ஏதாவது ஒரு வகையில் தொடர்பு (relation) இருக்கும். அதை கண்டுபிடித்து இந்த வரிசையில் கடைசியாக வரும் வரைபடத்தை கண்டுபிடிக்க வேண்டும்.

சிலர் பரிட்சையிலேயே இந்த வகை கேள்விகள் தான் சுலபமான கேள்விகள் என சொல்வார்கள். இன்னும் சிலர் இதை தாண்டினா பெரிய கண்டம் தாண்டின மாதிரி என்றும் சொல்வதுண்டு.

இதில் உங்களுடைய IQ level எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள தான் இந்த IQ Test.




மொத்தம் 39 கேள்விகள். இருப்பது 40 நிமிடங்கள். வரைபடங்களை வைத்து பல வகையான கேள்விகளை தேர்ந்தெடுத்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். பதில்களை கிளிக் பண்ணி முடித்து Submit-ஐ கிளிக்கினால் நீங்கள் எடுத்த மதிப்பெண்ணும் அந்த மதிப்பெண் எந்த IQ Level-ல் இருக்கிறது என்றும் உடனே காணலாம்.

லின்க் : http://www.6to60.com/games/9687-IQ%20Test.html

இந்த தேர்வுக்கு 40 நிமிடங்கள் என்பது அதிகம் தான். ஆனாலும் ரொம்ப வேகமாக விளையாட வேண்டாம்! அவ்வப்பொழுது கொஞ்சம் கண்களுக்கு ஓய்வு கொடுத்து தொடருங்கள். இல்லையேல் இருபது கேள்விகள் தாண்டிய பின் கண்கள் களைப்படைந்து எல்லா படங்களும் ஒரே மாதிரியே இருப்பது போல் உணர்வீர்கள்.

All The Best.

புதன், 5 மே, 2010

உங்கள் மனதை படிக்கும் ஒரு அதிசய விளையாட்டு!!!




"Mind reading" அப்படீன்னு ஒரு சமாச்சாரம் உண்டு. புத்தகம் படிக்கிற மாதிரி சிலர் சர்வ சாதாரணமாக நம் மூளையை அப்படியே படிப்பார்கள்.

ஏதாவது ஒன்றை நினைக்க சொல்லிவிட்டு சம்பந்தமில்லாமல் ஏதாவது சில கேள்விகள் கேட்டு கடைசியில் நம் மனதில் நினைத்ததை பளிச்சென்று பெயருடன் சொல்வார்கள். நாமும் சொல்ல முடியாத ஆச்சர்யத்துடனும் கொஞ்சம் சந்தேகத்துடனும் அவர்களைப் பார்த்து கொட்ட கொட்ட முழிப்போம்.

இது ஒரு பக்கம் இருக்க ஒரு இணைய விளையாட்டு என்னை எந்த கேள்வியும் கேட்காமல் என் மனதில் நினைத்ததை அப்படியே காட்டியது. சத்தியமாக அதிர்ந்து போனேன். இந்த விளையாட்டின் பின்னணியை நாம் அப்புறம் பார்க்கலாம்.

முதல்ல நீங்க பார்க்க வேண்டியது இந்த லின்க் :

http://www.6to60.com/games/9686-Phychic.html

நீங்கள் பண்ண வேண்டியது :

  • ஒரு இரண்டிலக்க எண்ணை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். (Ex : 23)
  • அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். கிடைக்கும் எண்ணை நினைவில் கொள்ளவும் ( ஏ : 2+3 = 5)
  • இப்பொழுது நீங்கள் நினைத்த எண்ணில் இருந்து உங்களுக்கு கிடைத்த எண்ணை கழிக்கவும் (23 - 5).
  • இப்பொழுது கடைசியாக ஒரு எண் கிடைத்திருக்கிறதா? இந்த எண்ணுக்கு நேரே திரையில் தெரியும் வடிவத்தை உற்று நோக்குங்கள் . . .
  • இப்பொழுது திரையில் உள்ள பெரிய நீல வண்ண பட்டனை கிளிக்குங்கள்.
மேலே சொன்ன விஷயங்களை நான் சரியா பண்ணியதால் நான் நினைத்த வடிவம் அப்படியே திரையில் தெரிந்தது.

இது என்னடா கொடுமையா இருக்கு! பட்ட பகல்ல, அதுவும் ஆபிஸ் டயத்துல(?!), ரெண்டு கண்ணையும் திறந்துட்டு விளையாடும் போதே நம்மை இப்படி மடையனாக்கப் பாக்குறாய்ங்களே! என ரொம்ப நொந்து போயிட்டேன்.

இதன் பின்னாடி உள்ள லாஜிக்கை இணையத்தில் மேய்ந்து கண்டுபிடித்த பின் தான் மனம் ஆறுதலாச்சு! அதை நாளைக்கு பின்னூட்டமா போடுறேன். விவரம் தெரிஞ்ச ஆள் எனக்கு முன்னாடியே பின்னூட்டம் போடலாம் . . .

அனைவரும் பொழுதுபோக்க ஒரு Worthy யான விளையாட்டு




இணைய விளையாட்டுகள் எல்லாம் குழந்தைகளுக்கானது என்று யார் சொன்னது? குழந்தைகளை கவரும் அம்சங்களுடன் அவை வடிவமைக்கப்பட்டாலும் பல விளையாட்டுகள் பெரியவர்களையும் ஈர்க்கும் விதமாகவும் மணிக்கணக்காக விளையாட வைக்கும் விதமாகவும் இருக்கின்றன.

ஒரு சிறந்த உதாரணம் Roly Poly Cannon.

நம்மிடம் ஒரே ஒரு பீரங்கியும் எண்ணிலடங்கா குண்டுகளும் இருக்கின்றன. அதை வைத்து அங்கும் இங்கும் ஒளிந்திருக்கும் விநோதமான எதிரிகளை சுட்டு வீழ்த்த வேண்டும். அவ்வளவே!

இதை விளையாட மவுஸே போதுமானது.மவுஸால் திசையை தேர்வு செய்யலாம். மவுஸ் குறியை எவ்வளவு தூரத்தில் வைக்கிறீர்களோ அவ்வளவு வேகமாக குண்டு செல்லும்.

சாதாரண Shooting வகை விளையாட்டைப் போல தொடங்கி ஒரு சுவாரஸ்யமான புதிர் விளையாட்டாக மாறுகிறது. எங்கு குண்டு போடுவது? எந்த வரிசையில் குண்டு போடுவது? என பல வகையிலும் நம்மை சிந்திக்க வைக்கிறது. ஒவ்வொரு Level-லிலும் வரும் வித்தியாசமான முக வில்லன்கள் விளையாட்டை இன்னும் சுவாரஸ்யப்படுத்துகிறார்கள்.

லின்க் : http://www.6to60.com/games/9651-Roly%20Poly%20Cannon%202.html

செவ்வாய், 4 மே, 2010

பல்லாங்குழியை இணையத்தில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்




நம்முடைய பேரப் பிள்ளையை பள்ளியில் விட செல்லும் போது அங்கே நம்முடன் பள்ளியில் படித்த பால்ய கால நண்பனை அங்கே சந்திக்க நேர்ந்தால் எப்படி ஒரு அதிர்ச்சி நமக்கு உண்டாகுமோ கிட்டத்தட்ட அந்த மாதிரி ஒரு அதிர்ச்சியை இன்று அடைந்தேன்.

அதிர்ச்சிக்கு காரணம் Mancala என்ற இணைய விளையாட்டு. சோழிகளுக்கு பதில் ஜெம்ஸ் - களை உபயோகப்படுத்தியிருந்த அந்த விளையாட்டு அப்படியே பல்லாங்குழி தான்!

நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளை இணையத்தில் கொண்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் அவ்வப்பொழுது யோசிப்பதுண்டு. ஆனால் வேறு ஒரு பெயரில் அப்படியே பல்லாங்குழியின் ஐடியாவை சுட்டு பயன்படுத்தியிருக்கும் அந்த புத்திசாலி யார் என்று தெரியவில்லை.

பல்லாங்குழி நம்முடைய முன்னோர்களின் கண்டுபிடிப்பாகவே இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். எது எப்படியோ . . . விளையாட வழி இருந்தால் விளையாட வேண்டியது தானே!

பல்லாங்குழி விளையாடுவது எப்படி என்று சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். விளையாடி பார்த்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

லின்க் : http://www.6to60.com/games/9685-Mancala.html


"13 போபியா" - இது வியாதியல்ல! புதிர்





ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிய நம்முடைய அர்த்தமற்ற பயமே "போபியா" என அழைக்கப்படுகிறது. நம் அனைவருக்குமே ஏதாவது சில விஷயங்களில் போபியா கண்டிப்பாக இருக்கிறது. அது எந்தெந்த விஷயங்களில் என்பது தான் ஒவ்வொரு ஆளுக்கும் மாறுபடுகிறது.

பல்லிக்கு பயப்படுவதில் ஆரம்பித்து பக்கத்து வீட்டுக்காரனுக்கு பயப்படுவது வரை எண்ணிலடங்கா போபியாக்கள் உள்ளன. என் பதிவைக் கண்டால் படிக்காமல் ஓடுபவர்களுக்கு கூட ஏதாவது ஒரு போபியா இருக்க வாய்ப்புண்டு!

இங்கிலாந்தில் வாழும் பலருக்கு ஒரு போபியா பரவலாக இருக்கிறது. அது 13 என்ற எண்ணின் மீதான பயம். 13-ஐ பேய்களுக்கான எண்ணாகவே பலர் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இங்கு கூட போன வருடம் மாதவன் நடித்த யாவரும் நலம் திரைப்படம் ஹிந்தியில் 13B என வெளிவந்தது.

ஆனால் 13 Phobia என்ற இந்த புதிர் விளையாட்டு கண்டிப்பாக எந்த ஒரு விதத்திலும் பயமுறுத்த போவதில்லை. அதிகம் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் உங்கள் மூளைக்கு கொஞ்ச நேரம் சுறுசுறுப்பாக வேலை கொடுக்கப் போகிறது அவ்வளவே.



மேலே உள்ளது போன்று 13 இன்முகங்கள் ( Smiley??) தோன்றுகின்றன. நீங்களும் கம்பியூட்டரும் மாறி மாறி அந்த முகங்களை கிளிக்கி மறைய செய்ய வேண்டும். இப்படி விளையாடும் போது 13-வது முகத்தை நீங்கள் கிளிக்கினால் அவுட். கம்ப்யூட்டர் கிளிக்கினால் ஹிட்!

ஒவ்வொரு முறை உங்கள் Turn வரும் போதும் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு முகங்களை மட்டும் கிளிக்கலாம். அடுத்த Turn கம்ப்யூட்டருடையது. நீங்கள் ஒரே ஒரு முகத்தை கிளிக்கி உங்கள் Turn-ஐ முடித்துக் கொள்ள விரும்பினால் அந்த முகத்தை இரண்டு முறை கிளிக்க வேண்டும். அவ்வளவே!

ஒரு வழியாக 13-வதை கிளிக்காமல் நீங்கள் தப்பினால் அடுத்த Level-ல் 26 இன்முகங்கள் காட்சியளிக்கின்றன. இந்த முறை 26-ஐ கிளிக்க கூடாது. விளையாட்டில் மொத்தம் இரண்டு Level தான்.

லின்க் : http://www.6to60.com/games/9684-13%20Phobia.html


சனி, 1 மே, 2010

உங்களை சீட்டின் நுனிக்கு தள்ளிவிடும் தீயான விளையாட்டு




இப்பொழுதெல்லாம் வெளிவரும் படங்கள் கூட நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு வருவதில்லை. மாறாக நம்மை சீட்டை விட்டு எழுந்திருக்கவே செய்கின்றன. இன்னும் சில படங்கள் நம்மை தியேட்டரை விட்டே தலை தெறிக்க ஓட வைக்கின்றன. சமீபத்திய உதாரணம் "சு" வில் ஆரம்பிக்கும் ஒரு ராவான படம்.

ஆனால் ஒரு விளையாட்டில் இந்தளவு சுவாரஸ்யத்தை கொண்டு வர முடியும் என்று நெத்தியடியாக நிரூபித்த விளையாட்டு ஒன்று உண்டு. அது நான் சிறு வயதில் விளையாடிய Load runner. இந்த விளையாட்டை நான் விளையாடி கொண்டு இருக்கும் போது நான் ஜாய்ஸ்டிக்கை பிய்த்து விடுவேனோ என்று என் அம்மா ரொம்ப பயந்ததுண்டு.



பெரும்பாலான Arcade வகை விளையாட்டுகளில் விஜய் படம் மாதிரி டன் கணக்கில் வில்லன்கள் வந்து கொண்டே இருப்பார்கள். நாமும் அவர்களை ஜஸ்ட் லைக் தட் தலையில் மிதித்து தாண்டி போய்க்கொண்டே இருப்போம். சுவாரஸ்யம் ரொம்ப குறைவே. Load runner வேறுபடுவது இந்த விஷயத்தில் தான்.

இந்த விளையாட்டை தனித்துவப்படுத்துவது இதில் வரும் மூன்று அடங்காப்பிடாரி வில்லன்கள் தான். திரையில் அங்கும் இங்கும் சிதறி கிடக்கும் எல்லா மூட்டைகளையும் சேகரிப்பது தான் நம் வேலை. அதைச் செய்ய விடாமல் தடுப்பது வில்லன்கள் வேலை.

முக்கியமான விஷயம்(ஆப்பு) என்னவென்றால் உங்களால் வில்லனை கொல்ல முடியாது. அதைவிட முக்கியமான விஷயம் அவர்கள் உங்களை விட புத்திசாலிகள். நீங்கள் எந்த சந்து பொந்துக்குள் ஓடுவீர்கள்,ஒளிவீர்கள் என சரியாக கணித்து உங்களை கைமா பண்ணுவார்கள்.

விளையாட்டு ஆரம்பித்ததில் இருந்து வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதுமே அலுப்பு தராத விளையாட்டு. இந்த விளையாட்டின் Flash வடிவத்தை ரொம்ப காலமாக தேடி கடைசியாக வேறு ஒரு பெயரில் அதன் பக்கா ரீமேக் வடிவத்தை கண்டேன். அது Patty Panic Sponge Bob.



நீங்கள் ஒரு ஹாம்பெர்கர் செய்வதற்கான பொருட்கள் அனைத்தையும் மேலிருந்து கீழே தள்ளி விட வேண்டும். உங்களை அப்படி செய்யவிடாமல் விரட்டி விரட்டி வருகிறார்கள் வில்லன்கள். விளையாடுவதற்கு Arrow-கீகள் மட்டும் தான். உங்களிடம் பவர் இருக்கும் சமயங்களில் மட்டும் வில்லனை நோக்கி Space bar அழுத்தி தப்பிக்கலாம். கவனிக்க: இது வில்லனை கொஞ்ச நேரம் மட்டுமே நிப்பாட்டி வைக்கும்.

பழைய கிளாஸிக் Load runner விளையாட்டின் சுவாரஸ்யத்தை அப்படியே கொண்டு வந்திருக்கிறார்கள். நான் எட்டாவது Level-லில் வந்து சிக்கி இருக்கிறேன். மொத்தம் எத்தனை Level-னு யாராவது கண்டுபிடிச்சு பின்னூட்டம் போடுங்கப்பா!

லின்க் : http://www.6to60.com/games/9683-Patty%20Panic%20SpongeBob%20Game.html

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

நிறங்களை பற்றிய உங்கள் அறிவு சரியானது தானா? - பரிட்சை




சிவப்பு, பச்சை மற்றும் நீல வண்ணங்களை நிறக்குருடு உள்ளவர்களைத் தவிர்த்து நம் அனைவராலும் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இந்த வண்ணங்களின் கலவையில் உண்டாகும் பல வண்ணங்களை பற்றிய அறிவு பலருக்கு குறைவே. உதாரணம் மெஜந்தா, சியான், பிரவுன் முதலியன.

சில நேரம் இந்த வண்ணங்களை நாம் அறிந்திருந்தாலும் அவை எந்த வண்ணங்களின் கலவையால் உண்டானது என்பது பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம்.

பற்பல வண்ணங்களை விளையாட்டாக தெரிந்து கொள்ள உதவுகிறது இந்த Chroma.

விளையாட்டின் பின்னணியில் ஏதோ ஒரு வண்ணம் தெரிகிறது. அந்த வண்ணத்தை மையத்தில் உள்ள வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும். மைய வட்டத்தில் எத்தனை வண்ணங்கள் கலக்க வேண்டும் என்ற எண்ணும் இருக்கிறது.

அதைச் சுற்றி உள்ள பல்வேறு நிற வட்டங்களில் இருந்து சரியான நிற வட்டங்களை மவுஸால் drag செய்து நடுவில் விட வேண்டும். அவ்வளவே!

லின்க் : http://www.6to60.com/games/9682-Chroma.html

ஒரு ரொமான்ஸ் புதிர் - இந்த காதலர்களை சேர்த்து வையுங்கள்!





பிரிந்திருக்கும் இரு காதலர் கரடிகளை சேர்த்துவைக்கும் ஒரு புதிர் விளையாட்டு தான் Dude Bear Love Adventure.

இந்த காதலர்களை சேர்த்து வைக்க நீங்கள் நாடோடிகள் பாணியில் எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டியதில்லை. கொஞ்சம் கம்ப்யூட்டர் அறிவும் கொஞ்சம் லாஜிக்கல் திங்கிங் திறமையும் இருந்தாலே போதும்.

விளையாட்டு தொடங்கும் போது இரு கரடிகளும் இரு வேறு இடங்களில் உட்கார்ந்திருக்கும். இவை தவிர அங்கும் இங்கும் சில இதயங்களும் கிடக்கின்றன. கரடி எல்லா இதயங்களையும் சேகரித்து விட்டு இன்னொரு கரடியை அடைய வேண்டும். அவ்வளவே!



நாம் பார்க்கும் பொருட்களில் மென்மையான பொருட்களும் கடினமான பொருட்களும் கலந்திருக்கின்றன.மென்மையான பொருட்களை கிளிக்கினால் அவை மறைந்து போகும். சரியான பொருட்களை தேர்ந்தெடுத்து சரியான வரிசையில் கிளிக்குவதன் மூலம் மட்டுமே இரு கரடிகளையும் சேர்க்க முடியும்.

லின்க் : http://www.6to60.com/games/9681-Dude%20Bear%20Love%20Adventure.html

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

உங்களின் துப்பறியும் திறன் எவ்வளவு? - பரிட்சை





Sherlock holmes புத்தகம் முதல் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வரை துப்பறியும் கருவை மையமாக கொண்ட விஷயங்கள் நம்மை அப்படியே கட்டிப்போடும் திறன் படைத்தவை.

துப்பறியும் வேலை பார்ப்பதற்கு தேவைப்படும் விஷயங்களில் முக்கியமான ஒன்று அதீத கவனக் கூர்மை. சரித்திரப் புகழ் பெற்ற பல துப்பறியும் நிபுணர்கள் இந்த விஷயத்தில் பார்த்ததை அப்படியே மனதில் பதிய வைத்துக் கொள்ளும் ஆற்றல்(Photographic memory) பெற்றிருந்தனர்.

நம்முடைய கவனக் கூர்மை எவ்வளவு தூரம் இருக்கிறது என சோதித்துப் பார்க்க உதவுகிறது இந்த Scene memory.



ஒரு சில வினாடிகளுக்கு மட்டும் உங்கள் கண்முன்னால் ஒரு இடம் காண்பிக்கப் படுகிறது. அந்த இடத்தில் எங்கு வேண்டுமானாலும் எத்தனை பொருட்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். அவற்றை உடனே மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

நேர அவகாசம் முடிந்தவுடன் திரும்பவும் திரையில் தோன்றும் இடத்தில் சில பொருட்கள் மறைந்து போயிருக்கலாம் அல்லது புதிதாக பொருள் ஏதாவது முளைத்திருக்கலாம். அது எந்தெந்த இடங்கள் என்பதை மட்டும் மவுஸால் கிளிக்கி சுட்டிக் காட்ட வேண்டும். அவ்வளவே!

உங்கள் துப்பறியும் திறமையை நீங்கள் இதன் மூலம் சரியாகவே எடை போட முடியும்.

லின்க்: http://www.6to60.com/games/9677-Scene%20Memory.html

வியாழன், 22 ஏப்ரல், 2010

எடை போடுவதன் மூலம் உங்கள் திறமையை எடை போடலாம்





உங்களுடைய லாஜிக்கல் திங்கிங் திறமையை பரிசோதிக்க / வளர்க்க உங்களிடம் இப்பொழுது ஒரு ஐந்து நிமிடம் இருக்குமானால் உங்களுக்காகத்தான் இந்த பதிவு.

ஏதாவது ஒரு பாடத்தை அதிகமாக படிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு தேவையானது ஓப்பிடும் திறமை. பக்கம் பக்கமாக தொடர்ந்து படிப்பது கண்களுக்கும் மூளைக்கும் சோர்வை மட்டுமே எப்பொழுதும் தரும்.

அதே விஷயத்தை மற்றொரு விஷயத்துடன் ஒப்பிட்டு படிக்கும் பொழுது புரிதல் அதிகமாவதுடன் அந்த விஷயம் நம் மனதில் ஆழமாக பதிந்தும் போகும்.


Seasaw logic என்ற இந்த விளையாட்டு உங்களுடைய ஒப்பிட்டு புரிந்து கொள்ளும் திறமை எவ்வளவு என தெரிந்து கொள்ள உதவுகிறது.

ஒவ்வொரு Level-களிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தராசுகள் திரையில் தோன்றும். ஒவ்வொரு தராசின் இருபுறமும் வெவ்வேறு வடிவங்களில் எடைக்கற்கள் இருக்கின்றன. அவற்றை வைத்துக் கொண்டு இருப்பதிலேயே எந்த எடைக்கல் அதிக எடை கொண்டது என கண்டுபிடித்து அதே வடிவத்தில் கீழே உள்ள கல்லை கிளிக்க வேண்டும். அவ்வளவே.

மொத்தம் 20 Level-கள் தான். ஏழாவது Level-க்கு அப்புறம் விளையாட்டு சூடு பிடிக்கிறது. ஐந்து நிமிடங்களில் மொத்த விளையாட்டையும் முடித்து விடலாம்.

லின்க் : http://www.6to60.com/games/9676-Seesaw%20logic.html

2 நிமிடம் போதும்.நாடுகளின் கொடிகளை அறிந்து கொள்ளுங்கள்




இன்னும் ஒரு பத்து வருடங்களுக்கு பின்னர் நம்முடைய வீட்டு குழந்தைகள் எல்லாம் புத்தகங்களை எல்லாம் தூக்கிப் போட்டு விட்டு இணைய விளையாட்டுகள் மூலம் மட்டுமே கல்வி கற்கப் போகிறார்கள் என நினைக்கிறேன்.

கல்வி சம்பந்தமாக வரும் இந்த சிறு இணைய விளையாட்டுகள் மிக சுவாரஸ்யமாகவும் நமக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டி விடும் வகையிலும் உள்ளன.


World Flags Quiz என்ற இந்த விளையாட்டு உலகில் உள்ள அனைத்து முக்கிய நாடுகளின் தேசிய கொடிகளை அறிந்து கொள்ள உதவுகிறது. இடது பக்கம் தோன்றும் தேசியக்கொடி எந்த நாட்டை சேர்ந்தது என்று வலது பக்கம் உள்ள நான்கு நாடுகளில் இருந்து ஒன்றை பத்து வினாடிகளுக்குள் தேர்வு செய்ய வேண்டும்.

தப்பானதை கிளிக்கினால் உடனே சரியான நாட்டை அப்போதே காட்டுவது ரொம்ப சிறப்பு. அது சரி. இந்த பதிவில் முதல் படத்தில் இருக்கும் கொடி யாருடையதுன்னு சொல்லுங்க பார்ப்போம்!

லின்க் : http://www.6to60.com/games/9675-World%20Flags%20Quiz.html


புதன், 21 ஏப்ரல், 2010

ரஜினிக்கும் கமலுக்கும் பிடித்த விளையாட்டு - NO COMMENT !!!





தான் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக கையில் மாட்டுவரை எல்லாம் படுத்தி எடுக்கும் துறை ஒன்று உண்டென்றால் அது கண்டிப்பாக பத்திரிக்கைத் துறை தான். "நாங்கல்லாம் பிரஸ் தெரியும்ல" என இவர்கள் செய்யும் அலும்பல் சொல்லி மாளாது.

சாதாரணமாய் உலா வருவபவர்களை பிரபலமாக்கி விடுவதும் அவர்கள் பிரபலமான பின் அவர்களை கண்ட நேரங்களில் மைக்கும் கேமராவுமாக துரத்துவதும் ஏதாவது டீல் ஒத்து வரவில்லையென்றால் கடைசி பக்க கிசுகிசுவில் கிழித்து தொங்க போடுவதும் தினசரி நடப்பு.

சரி.உலகத்தில் ஒரு நாள் பத்திரிக்கைகாரர்களுக்கு ஒரு செய்தியுமே கிடைக்காமல் போனால்? உலகத்தில் பிரபலங்களே இல்லாமல் போக ஆரம்பித்தால்?



வேறு வழியில்லாமல் பத்திரிக்கை காரர்கள் சாதாரண குடிமகன்களை துரத்த ஆரம்பித்தால்? இந்த ஐடியாவில் உதயமான ஒரு மன அழுத்ததை குறைக்கும் விளையாட்டு தான் No Comment.

நகரத்தின் நடுவில் நின்று கொண்டு இருக்கிறீர்கள். நாலாபுறத்தில் இருந்தும் பத்திரிக்கைகாரர்கள் உங்கள் மீது படை எடுக்கிறார்கள். அவர்களிடம் இருந்து உங்களால் அதிகபட்சம் எவ்வளவு நேரம் தப்பித்து தாக்குப்பிடிக்க முடிகிறது என்பதில் தான் உங்கள் திறமை அடங்கி இருக்கிறது.

நான்கு புறமும் நகர்வதற்கும் நான்கு புறமும் தட்டுகளை தூக்கி போடுவதற்கும் நான்கு Arrow-கீகள் மற்றும் W,A,S,D கீகளை பயன்படுத்தவும். தப்பித் தவறி அவர்களிடம் நீங்கள் மாட்டினால் விடாமல் கீகளை அழுத்தி No Comment என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால் விளையாட்டு முடிந்து விடும். மறுநாள் பேப்பரின் முதல் பக்கத்தில் நீங்கள் வந்து விடுவீர்கள்.Game Over.



ரஜினிக்கும் கமலுக்கும் இந்த விளையாட்டு மிகவும் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஏன் விஜய்க்கு கூட(சைலன்ஸ்!). நீங்களும் பிரபல பதிவராக இருந்தால் தினசரி விடாமல் இப்போதே விளையாட ஆரம்பித்து விடுங்கள்.

லின்க் : http://www.6to60.com/games/9674-No%20Comment.html


செவ்வாய், 20 ஏப்ரல், 2010

கோபத்தில் பெண் தோழிகள் : ஒரு ஜாலி டைம் பாஸ்






உலகம் முழுவதும் இன்று நேரடியாகவும் சில இடங்களில் மறைமுகமாகவும் பின்னி எடுக்கும் விஷயம் ஒன்று உண்டு. அது ரீமிக்ஸ் கலாசாரம். புதிய மொந்தையில் பழைய கள் என்று சொல்லலாம்.

ரொம்ப காலத்துக்கு முன்னாடியே ஏதாவது ஒரு விஷயத்தில் நம் முன்னோர்கள் பழம் தின்று கொட்டை போட்டிருப்பார்கள். கால மாற்றத்தில் அந்த விஷயம் கொஞ்சம் வழக்கொழிந்து போயிருக்கும். அதை எவனாவது ஒரு அதிமேதாவி நிகழ்காலத்திற்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் அங்கும் இங்கும் பாலிஸ் பண்ணி வெளியிட்டால் அது சூப்பர் ஹிட்!

இன்று தமிழ் ரீமிக்ஸ் பாடல்கள் தமிழையும் தமிழ்நாட்டையும் படுத்திக் கொண்டிருப்பதை குறிப்பிடாமல் விட முடியாது. ரீமிக்ஸ் பாடல்கள் கவர்ந்த ரசிகர்களின் எண்ணிக்கையை விட வாங்கிக் கட்டிக் கொண்ட வசவுகள் தான் அதிகம்.

ஆனால் ரீமிக்ஸ்களால் தினமும் வளர்ந்து கொண்டே போகும் விஷயம் ஒன்று உண்டு. அது இணைய விளையாட்டுகள் தான். ஒரு விளையாட்டு இணையத்தில் ஹிட்டடித்து விட்டால் அவ்வளவு தான். அதே கருவை வைத்து வெவ்வேறு மாதிரியாக நூற்றுக் கணக்கான விளையாட்டுகள் இணையமெங்கும் உலா வர தொடங்கி விடும்.


அந்த வகையில் பைத்தியம் பிடித்தாற்போல் தொடர்ந்து விளையாட வைக்கும் அரதப் பழைய விளையாட்டான Galaxy-யின் கருவை மையமாக வைத்து இப்பொழுது உலா வரும் பல விளையாட்டுகளில் ஒரு ஜாலி ரகளை விளையாட்டு தான் Angry girlfriend.

ஒரு சாலையில் நீங்கள் நிற்கிறீர்கள். உங்களுக்கு முன்னால் குமரிகள் முதல் கிழவிகள் வரை பலரும் எதிரே வருகிறார்கள். அவர்களுக்கு Arrow கீகளை அழுத்தி கவனமாக வழிவிடுங்கள். நடு நடுவே திடீரென்று உங்கள் மேல் கோபமாக இருக்கும் உங்கள் பெண் தோழிகள் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஓடி வருகிறார்கள். அவர்களுக்கு மட்டும் Spacebar அழுத்தி குண்டு போடுங்கள். அவ்வளவே.

பல நேரங்களில் உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கவும்(?!) இந்த விளையாட்டை நீங்கள் விளையாடலாம்.

லின்க் : http://www.6to60.com/games/9673-Angry%20Girlfriend.html


திங்கள், 12 ஏப்ரல், 2010

திறமையை எடை போட - இயல்பாய் ஒரு இயற்பியல் புதிர்





உலகின் மிகச் சிறந்த இயற்பியல் புதிர் விளையாட்டுகளில் ஒன்றாக தன் பெயரை தக்க வைத்திருக்கும் Shrink It பற்றியது தான் இந்த பதிவு.

பொதுவாக இயற்பியல் புதிர் விளையாட்டுகள் மற்ற சாதாரண புதிர் விளையாட்டுகளைப் போல் இல்லாமல் மிகுந்த கவனத்துடன் அமைக்கப்பட்டிருக்கும். விளையாட்டுகளின் ஒவ்வொரு அசைவும் உண்மையில் நடப்பதைப் போன்றே ஒரு உணர்வைத் தருவதாக இருக்கும்.

இந்த விளையாட்டின் இலக்கு ஒரு வரிக்கதை தான். நீல வண்ண சிரிப்பழகனை(Smiley??) வெள்ளைப் பெட்டிக்குள் கொண்டு செல்ல வேண்டும். அவ்வளவே.


திரையில் தெரியும் எந்தவொரு பொருளையும் உங்களால் கீபோர்ட் மூலமாகவோ மவுஸ் மூலமாகவோ நகற்ற முடியாது. அப்புறம் எப்படி விளையாடுவது?

நீங்கள் ஒரு பொருளை ஒவ்வொரு முறை கிளிக்கும் போதும் அந்த பொருள் இருக்கும் அளவை விட கொஞ்சம் சிறிதாகிறது. பொருள் சிறிதாகும் போது உங்கள் சக்தியானது(MASS) அதிகரிக்கும். அதே மாதிரி ஒரு பொருளை Space bar அழுத்திக் கொண்டு கிளிக்கினால் பொருள் பெரிதாகும். இப்பொழுது உங்கள் சக்தி குறையும். கவனிக்க : உங்களிடம் சக்தி(MASS) இருக்கும் போது மட்டுமே பொருளை பெரியதாக்க முடியும்.

இப்படியாக இருக்கும் பொருட்களை சிறிதாக்கியோ அல்லது பெரிதாக்கியோ சிரிப்பழகனை வெள்ளைப் பெட்டிக்கு கொண்டு செல்ல வேண்டும். விளையாட்டின் முதல் சில Level-களை தாண்டுவது கஷ்டம் இல்லை. அதன் பின் வரும் Level-களை தாண்டுவது சுலபம் இல்லை.

லின்க் : http://www.6to60.com/games/9642-Shrink%20It.html


வெள்ளி, 9 ஏப்ரல், 2010

இது சிரிக்க வைக்கும் மாத்திரை - நான் கியாரண்டி




முன்குறிப்பு

இந்த மாத்திரைகளுக்கு Expiry Date எல்லாம் கிடையாது.

நடுகுறிப்பு(?!)

மணிக்கணக்காக உங்களை அப்படியே addict செய்யும் தன்மை கொண்ட ஒரு சின்ன விளையாட்டு தான் இந்த Happy pill.

திரையில் அங்கும் இங்கும் சில உம்மண்ணா மூஞ்சிகள் உள்ளன. உங்கள் கையில் இருப்பது ஒரே ஒரு மாத்திரை தான்.அந்த மாத்திரையை சரியாக ஏதாவது ஒரு இடத்தில் இருந்து குறிபார்த்து விட்டுவிடுங்கள். அந்த மாத்திரை திரையில் உள்ள அத்தனை முகங்கள் மீதும் படவேண்டும்.அவ்வளவே.



மாத்திரை பட்டவுடன் புன்னகை புரிகின்றன முகங்கள். ஏன்னா அது Happy pill. மாத்திரை மீண்டும் அதே முகத்தின் மேல் பட்டால் இன்னும் நன்றாக பல்லை இளிக்கின்றன. அடுத்தமுறை பட்டால் நாக்கு வெளியே தள்ளி செத்து விடும். ஜாக்கிரதை.

லின்க் : http://www.6to60.com/games/9641-Happy%20pill.html

பின்குறிப்பு

பிடிச்சிருந்தா பின்னூட்டம் போடுங்க.