சனி, 1 மே, 2010

உங்களை சீட்டின் நுனிக்கு தள்ளிவிடும் தீயான விளையாட்டு




இப்பொழுதெல்லாம் வெளிவரும் படங்கள் கூட நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு வருவதில்லை. மாறாக நம்மை சீட்டை விட்டு எழுந்திருக்கவே செய்கின்றன. இன்னும் சில படங்கள் நம்மை தியேட்டரை விட்டே தலை தெறிக்க ஓட வைக்கின்றன. சமீபத்திய உதாரணம் "சு" வில் ஆரம்பிக்கும் ஒரு ராவான படம்.

ஆனால் ஒரு விளையாட்டில் இந்தளவு சுவாரஸ்யத்தை கொண்டு வர முடியும் என்று நெத்தியடியாக நிரூபித்த விளையாட்டு ஒன்று உண்டு. அது நான் சிறு வயதில் விளையாடிய Load runner. இந்த விளையாட்டை நான் விளையாடி கொண்டு இருக்கும் போது நான் ஜாய்ஸ்டிக்கை பிய்த்து விடுவேனோ என்று என் அம்மா ரொம்ப பயந்ததுண்டு.



பெரும்பாலான Arcade வகை விளையாட்டுகளில் விஜய் படம் மாதிரி டன் கணக்கில் வில்லன்கள் வந்து கொண்டே இருப்பார்கள். நாமும் அவர்களை ஜஸ்ட் லைக் தட் தலையில் மிதித்து தாண்டி போய்க்கொண்டே இருப்போம். சுவாரஸ்யம் ரொம்ப குறைவே. Load runner வேறுபடுவது இந்த விஷயத்தில் தான்.

இந்த விளையாட்டை தனித்துவப்படுத்துவது இதில் வரும் மூன்று அடங்காப்பிடாரி வில்லன்கள் தான். திரையில் அங்கும் இங்கும் சிதறி கிடக்கும் எல்லா மூட்டைகளையும் சேகரிப்பது தான் நம் வேலை. அதைச் செய்ய விடாமல் தடுப்பது வில்லன்கள் வேலை.

முக்கியமான விஷயம்(ஆப்பு) என்னவென்றால் உங்களால் வில்லனை கொல்ல முடியாது. அதைவிட முக்கியமான விஷயம் அவர்கள் உங்களை விட புத்திசாலிகள். நீங்கள் எந்த சந்து பொந்துக்குள் ஓடுவீர்கள்,ஒளிவீர்கள் என சரியாக கணித்து உங்களை கைமா பண்ணுவார்கள்.

விளையாட்டு ஆரம்பித்ததில் இருந்து வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதுமே அலுப்பு தராத விளையாட்டு. இந்த விளையாட்டின் Flash வடிவத்தை ரொம்ப காலமாக தேடி கடைசியாக வேறு ஒரு பெயரில் அதன் பக்கா ரீமேக் வடிவத்தை கண்டேன். அது Patty Panic Sponge Bob.



நீங்கள் ஒரு ஹாம்பெர்கர் செய்வதற்கான பொருட்கள் அனைத்தையும் மேலிருந்து கீழே தள்ளி விட வேண்டும். உங்களை அப்படி செய்யவிடாமல் விரட்டி விரட்டி வருகிறார்கள் வில்லன்கள். விளையாடுவதற்கு Arrow-கீகள் மட்டும் தான். உங்களிடம் பவர் இருக்கும் சமயங்களில் மட்டும் வில்லனை நோக்கி Space bar அழுத்தி தப்பிக்கலாம். கவனிக்க: இது வில்லனை கொஞ்ச நேரம் மட்டுமே நிப்பாட்டி வைக்கும்.

பழைய கிளாஸிக் Load runner விளையாட்டின் சுவாரஸ்யத்தை அப்படியே கொண்டு வந்திருக்கிறார்கள். நான் எட்டாவது Level-லில் வந்து சிக்கி இருக்கிறேன். மொத்தம் எத்தனை Level-னு யாராவது கண்டுபிடிச்சு பின்னூட்டம் போடுங்கப்பா!

லின்க் : http://www.6to60.com/games/9683-Patty%20Panic%20SpongeBob%20Game.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக