திங்கள், 12 ஏப்ரல், 2010
திறமையை எடை போட - இயல்பாய் ஒரு இயற்பியல் புதிர்
உலகின் மிகச் சிறந்த இயற்பியல் புதிர் விளையாட்டுகளில் ஒன்றாக தன் பெயரை தக்க வைத்திருக்கும் Shrink It பற்றியது தான் இந்த பதிவு.
பொதுவாக இயற்பியல் புதிர் விளையாட்டுகள் மற்ற சாதாரண புதிர் விளையாட்டுகளைப் போல் இல்லாமல் மிகுந்த கவனத்துடன் அமைக்கப்பட்டிருக்கும். விளையாட்டுகளின் ஒவ்வொரு அசைவும் உண்மையில் நடப்பதைப் போன்றே ஒரு உணர்வைத் தருவதாக இருக்கும்.
இந்த விளையாட்டின் இலக்கு ஒரு வரிக்கதை தான். நீல வண்ண சிரிப்பழகனை(Smiley??) வெள்ளைப் பெட்டிக்குள் கொண்டு செல்ல வேண்டும். அவ்வளவே.
திரையில் தெரியும் எந்தவொரு பொருளையும் உங்களால் கீபோர்ட் மூலமாகவோ மவுஸ் மூலமாகவோ நகற்ற முடியாது. அப்புறம் எப்படி விளையாடுவது?
நீங்கள் ஒரு பொருளை ஒவ்வொரு முறை கிளிக்கும் போதும் அந்த பொருள் இருக்கும் அளவை விட கொஞ்சம் சிறிதாகிறது. பொருள் சிறிதாகும் போது உங்கள் சக்தியானது(MASS) அதிகரிக்கும். அதே மாதிரி ஒரு பொருளை Space bar அழுத்திக் கொண்டு கிளிக்கினால் பொருள் பெரிதாகும். இப்பொழுது உங்கள் சக்தி குறையும். கவனிக்க : உங்களிடம் சக்தி(MASS) இருக்கும் போது மட்டுமே பொருளை பெரியதாக்க முடியும்.
இப்படியாக இருக்கும் பொருட்களை சிறிதாக்கியோ அல்லது பெரிதாக்கியோ சிரிப்பழகனை வெள்ளைப் பெட்டிக்கு கொண்டு செல்ல வேண்டும். விளையாட்டின் முதல் சில Level-களை தாண்டுவது கஷ்டம் இல்லை. அதன் பின் வரும் Level-களை தாண்டுவது சுலபம் இல்லை.
லின்க் : http://www.6to60.com/games/9642-Shrink%20It.html
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in