செவ்வாய், 4 மே, 2010
"13 போபியா" - இது வியாதியல்ல! புதிர்
ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிய நம்முடைய அர்த்தமற்ற பயமே "போபியா" என அழைக்கப்படுகிறது. நம் அனைவருக்குமே ஏதாவது சில விஷயங்களில் போபியா கண்டிப்பாக இருக்கிறது. அது எந்தெந்த விஷயங்களில் என்பது தான் ஒவ்வொரு ஆளுக்கும் மாறுபடுகிறது.
பல்லிக்கு பயப்படுவதில் ஆரம்பித்து பக்கத்து வீட்டுக்காரனுக்கு பயப்படுவது வரை எண்ணிலடங்கா போபியாக்கள் உள்ளன. என் பதிவைக் கண்டால் படிக்காமல் ஓடுபவர்களுக்கு கூட ஏதாவது ஒரு போபியா இருக்க வாய்ப்புண்டு!
இங்கிலாந்தில் வாழும் பலருக்கு ஒரு போபியா பரவலாக இருக்கிறது. அது 13 என்ற எண்ணின் மீதான பயம். 13-ஐ பேய்களுக்கான எண்ணாகவே பலர் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இங்கு கூட போன வருடம் மாதவன் நடித்த யாவரும் நலம் திரைப்படம் ஹிந்தியில் 13B என வெளிவந்தது.
ஆனால் 13 Phobia என்ற இந்த புதிர் விளையாட்டு கண்டிப்பாக எந்த ஒரு விதத்திலும் பயமுறுத்த போவதில்லை. அதிகம் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் உங்கள் மூளைக்கு கொஞ்ச நேரம் சுறுசுறுப்பாக வேலை கொடுக்கப் போகிறது அவ்வளவே.
மேலே உள்ளது போன்று 13 இன்முகங்கள் ( Smiley??) தோன்றுகின்றன. நீங்களும் கம்பியூட்டரும் மாறி மாறி அந்த முகங்களை கிளிக்கி மறைய செய்ய வேண்டும். இப்படி விளையாடும் போது 13-வது முகத்தை நீங்கள் கிளிக்கினால் அவுட். கம்ப்யூட்டர் கிளிக்கினால் ஹிட்!
ஒவ்வொரு முறை உங்கள் Turn வரும் போதும் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு முகங்களை மட்டும் கிளிக்கலாம். அடுத்த Turn கம்ப்யூட்டருடையது. நீங்கள் ஒரே ஒரு முகத்தை கிளிக்கி உங்கள் Turn-ஐ முடித்துக் கொள்ள விரும்பினால் அந்த முகத்தை இரண்டு முறை கிளிக்க வேண்டும். அவ்வளவே!
ஒரு வழியாக 13-வதை கிளிக்காமல் நீங்கள் தப்பினால் அடுத்த Level-ல் 26 இன்முகங்கள் காட்சியளிக்கின்றன. இந்த முறை 26-ஐ கிளிக்க கூடாது. விளையாட்டில் மொத்தம் இரண்டு Level தான்.
லின்க் : http://www.6to60.com/games/9684-13%20Phobia.html
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக