திங்கள், 10 மே, 2010
English பேசுற மகான்களே! உங்க Grammar சரிதானா?
இந்த பதிவை போட என்னை தூண்டிய என்னுடைய புதிய காலேஜ் வாத்தியார் **********-க்கு என் மனமார்ந்த நன்றிகள். ஏன்னா ஒரு மணி நேர வகுப்பில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் English-ஐ கொடுமைப் படுத்தி "நான் ஏன் பிறந்தேன்?" அப்படீங்கிற மாதிரி எதிர்மறையான சிந்தனைகள் எல்லாம் என் மனதில் வரவைத்திருக்கிறார்.
Woody Allen ஒரு படத்தில் தன் பால்ய கால வாத்தியார்களை பற்றி ஒரு விஷயம் சொல்வார். "I remember the staff at our public school. You know, we had a saying, that those who can't do teach, and those who can't teach, teach gym. And, those who couldn't do anything, I think, were assigned to our school.". எனக்கு அந்த காட்சி தான் அவருடைய வகுப்பில் ஞாபகம் வந்தது.
English தெரிந்தவர்களில் English-ஐ கடித்து மெல்லாமல் பேசுபவர்கள் எத்தனை பேர் என்று ஏதாவது Survey எடுத்தால் நன்றாக இருக்கும்.
என்னிடம் கேட்டால் ஆங்கில வழியில் படித்து வருபவர்களை விட தமிழ் வழியில் படிப்பவர்களே பின்னாளில் ஆங்கிலத்தை திருத்தமாக பேசுகிறார்கள். தமிழ் வழியில் படிப்பவர்களிடம் நாம் பேசுவது தவறாக இருக்குமோ என்ற பயம் எப்பொழுதும் கொஞ்சம் இருக்கும். அதனால் தான் அவர்கள் fluent - ஆக பேசாவிட்டாலும் அதிகமாக தவறில்லாமல் பேசுகிறார்கள்.
ஆங்கில வழியில் படித்த மேதாவிகளிடம் அபாரமான fluency இருக்கிறது. Fluency என்று நான் சொல்வது பேசுவதில் மட்டுமல்ல தவறுகள் விடுவதிலும் தான்! ஆனாலும் அதையும் ரொம்ப தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து பேசி நமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆங்கில அறிவையும் பதம் பார்க்கிறார்கள்.
அலுக்காமல் English-ல் பீட்டர் விடுகிற நமக்கு அந்த மொழியின் அடிப்படை இலக்கணம் சரியாக தெரிந்திருக்கிறதா என தெரிந்து கொள்ள ஒரு பரிட்சை தான் Grammar Ninja.
ஒரு வாக்கியம் கொடுத்து அதில் உள்ள Verbs,Nouns,Adverbs என்று எதையாவது காட்ட சொல்கிறார்கள். அந்த வார்த்தைகளை நீங்கள் மவுஸால் கிளிக்க வேண்டும். அவ்வளவே!
நீங்கள் தவறானதை கிளிக்கினால் அதை அப்பொழுதே சுட்டிக் காட்டுகிறார்கள். அதனால் நம்முடைய திறமையை பரிசோதிப்பதுடன் நம்முடைய தவறுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
லின்க் : http://www.6to60.com/games/7415-Grammar%20Ninja.html
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக