புதன், 31 மார்ச், 2010

நீங்க ஊரு உலகம் தெரிஞ்சவர் தானா? பரிசோதிச்சு பாருங்க



பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் சமூக அறிவியல் பாடம் படிக்கும் போது அவ்வப்போது மேப் குறிக்கும் படலம் வகுப்பில் தொடங்கும்.

என்றோ ஒரு நாள் கொலம்பஸ் கண்டுபிடித்த அமெரிக்காவை மேப்பில் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதும் மத்தியப் பிரதேசத்தை பூமியின் மையத்தில் கொண்டு குறிப்பதுமென அந்த இடமே ரணகளமாகும்.

ஆனால் நாலு கழுதை வயசான பிறகும்(சொல்லுகிறார்கள் ஊருக்குள்!) உலக / இந்திய மேப்பில் உள்ள முக்கியமான இடங்கள் கூட தெரியாமல் இருப்பது ரொம்ப சின்ன புள்ளதனமான விஷயம். அதற்காக சின்ன புள்ள மாதிரி அட்லஸை தேடி ஓடவும் நமக்கு கஷ்டமாக இருக்கும்.



"Map Making" என்ற இந்த விளையாட்டு குறைந்த நேரத்தில் உலகத்தில் உள்ள அல்லது இந்தியாவில் உள்ள மிக முக்கியமான இடங்களை அறிந்து கொள்ள உதவுகிறது.

விளையாட்டின் தொடக்கத்தில் தோன்றும் உலக மேப்பில் இந்தியாவை கிளிக்கி பெரிதாக்கி கொள்ளுங்கள்(இந்தியாவை கண்டுபிடிச்சிருவீங்கல்ல?). அப்புறம் இடது புறத்தில் பெயருடன் தெரியும் இந்தியாவின் முக்கிய பகுதிகளை சரியான இடத்தில் மவுஸால் Drag செய்து வையுங்கள்.

நீங்கள் தப்பான் இடத்தில் வைத்தால் அதுவே சரியான இடத்தை சிவப்பு வண்ணத்தில் காட்டுகிறது. நம்மை பரிசோதிப்பதுடன் நம் தவறுகளையும் திருத்திக் கொள்ளலாம்.

லின்க்: http://www.6to60.com/games/9638-Map%20Making.html

என்ன பண்றது! இதெல்லாம் நான் படிக்கிற காலத்திலேயே இருந்திருந்தா ஆண்டு பரிட்சையில் கிழக்கிந்தியாவை இந்தியாவுக்குள் குறித்து வைத்திருக்க மாட்டேன்.

செவ்வாய், 30 மார்ச், 2010

தினம் ஒரு முறை ஒரு தடவை ஒரு நிமிடம் இதை செய்யுங்கள்




நாள் முழுவதும் புத்துணர்வுடணும் சுறுசுறுப்பாகவும் இருக்க பெரியவர்கள் தினமும் காலை தியானம் செய்யச்சொல்வார்கள். ஒரே ஒரு நிமிடம் உங்களால் உங்கள் மனதை அலைபாயாமல் கட்டுப்படுத்த முடிந்தால் அது அந்த நாளையே உற்சாகமாக்கி விடும்.

நிற்க. இது தியானம் பற்றிய பதிவு அல்ல. ஆனால் தியானத்திற்கு நிகராக உங்களை ஒரு நிமிடத்தில் மூளையை உச்சகட்ட சுறுசுறுப்பு அடையச் செய்து விடுகிறது இந்த சவாலான விளையாட்டு.விளையாட்டின் பெயர் Click the Color Not the Word.



விளையாட்டின் பெயரே மொத்த விளையாட்டுக்கும் விளக்கம் தந்துவிட்டது! மேலே படத்தில் உள்ளது போல் ஒரு வார்த்தை நடுவில் தோன்றும். அந்த வார்த்தை எந்த நிறத்தில் இருக்கிறதோ அந்த வார்த்தையை கீழே கொடுத்திருக்கும் ஆறு வார்த்தைகளில் இருந்து கிளிக்க வேண்டும்.

அதாவது green என்ற வார்த்தை blue நிறத்தில் தோன்றினால் நீங்கள் கிளிக்க வேண்டியது blue தான் green அல்ல!! ஒரு கிளிக் பண்ண உங்களுக்கு கொடுக்கப்படும் நேரம் மூன்று வினாடிகள் மட்டுமே. ஒரு தடவை தப்பா கிளிக்கினால் திரும்ப முதல் Level-க்கே வந்துவிடுவீர்கள்.

சத்தியமாக ரொம்ப சுலபமான விஷயம் சார் இது. ஆனா ஒரே ஒரு நிமிடம் இதில் தாக்குப்பிடிக்க முடிந்தால் உங்க காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்.

லின்க் : http://www.6to60.com/games/5555-Click%20the%20Color%20Not%20the%20Word.html


புதன், 17 மார்ச், 2010

ஹசீ!!! உலகின் சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டு



நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பிரம்மாண்டமான விஷயங்களை விட நம்மை புன்முறுவல் செய்ய வைக்கும் சில எளிமையான விஷயங்கள் தான் நம் மனதில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துவிடுகின்றன.

Hasee Bounce என்ற இந்த விளையாட்டு நீங்கா புகழ் பெற்றதன் காரணமும் இது தான்.

  1. இந்த விளையாட்டின் எளிமை
  2. இதில் வரும் கார்ட்டூன் கேரக்டர்
  3. சிரிப்பை வரவழைக்கும் பின்னணி இசை(?!)


மேலே படத்தில் உள்ளது போல் இரண்டு குண்டு நண்பர்கள் எதிரெதிரே இருக்கின்றனர். மவுஸை அழுத்துவதன் மூலம் ஒரு குண்டு நண்பரை கீழே தள்ளி விடலாம். உடனே அது சீஸா-வில் குதிக்க மற்றொரு குண்டு நபர் இப்போது மேலே சென்று விடுவார். அவ்வளவு தான் விளையாட்டே!

தொடர்ந்து வரும் பழங்களை மாறி மாறி பிடிக்க வேண்டும். இடையிடையே வரும் வினோத உருவங்களை தவிர்க்கவும். அவ்வப்போது வரும் "H" "a" "s" "e" எழுத்துகளை தவறாமல் பிடிக்க வேண்டும்.பிடிக்காவிட்டால் என்ன ஆகிறது என்று நீங்களே பாருங்களேன்.

லின்க்: http://www.6to60.com/games/9631-Hasee%20Bounce.html


வெள்ளி, 12 மார்ச், 2010

ஒரு கிளாஸிக் புதிர் - உங்க மூளையை Refresh செய்வதற்கு!




உங்களிடம் ஒரு நிமிடமும் ஒரு மூளையும் இருந்தால் போதும். ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பல வடிவங்களில் நம்மை துரத்தும் ஆடு-நரி-முட்டைகோஸ் புதிருக்கு நிச்சயம் உங்களால் விடை சொல்ல முடியும். Flash வடிவத்தில் இருக்கும் இந்த புதிருக்கு விடை கண்டுபிடிக்க ஒருவருக்கு ஆகும் அதிக பட்ச நேரமே ஒரு நிமிடம் தான்.

இனி புதிர்.

ஆற்றின் ஒரு கரையில் ஒரு ஆடு,ஒரு நரி மற்றும் ஒரு முட்டைகோஸ் இருக்கிறது. இந்த மூன்றையும் பத்திரமாக மறு கரையில் சேர்க்க வேண்டும். ஒரு சமயத்தில் ஏதாவது ஒன்றை மட்டுமே உங்களால் படகில் வைக்கவும் மறுகரைக்கு கொண்டு செல்லவும் முடியும்.இதில் என்ன சிரமம், ஒவ்வொன்றாக மூன்றையும் வரிசையாக கொண்டு சென்று விடலாமே என நீங்கள் நினைத்தால் முக்கியமான டுவிஸ்ட் அடுத்த பாராவில்.

நீங்கள் பக்கத்தில் இல்லாவிட்டால்(அதாவது மறுகரையில் இருந்தால்) ஆடு முட்டைக்கோஸை விழுங்கி விடும். நரி ஆட்டை விழுங்கி விடும். இந்த மாதிரி எதுவும் நடக்காமல் சரியான வழியில் மூன்றையும் கரை சேர்ப்பதில் தான் உங்கள் திறமை அடங்கி இருக்கிறது.




படத்தில் உள்ளது போல் நீங்கள் ஒரு கரையில் முதலில் இருப்பீர்கள். மேலே உள்ள மூன்று வட்டங்களில் ஒன்றை மவுஸால் கிளிக்குவதன் மூலம் மூன்றில் ஏதாவது ஒன்றை படகில் ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியும். அதே மாதிரி Go வை அழுத்துவதன் மூலம் படகை இடம் வலமாக இரு கரைக்கும் கொண்டு சொல்ல முடியும்.

உங்களால் எவ்வளவு குறைந்த நேரத்தில் மற்றும் எவ்வளவு குறைந்த முயற்சிகளில் புதிரை அவிழ்க்க முடிகிறது என பரிட்சீத்து பாருங்களேன்.

லின்க் : http://www.6to60.com/games/8830-Wolf,%20Sheep%20and%20Cabbag.html

வியாழன், 11 மார்ச், 2010

உங்க BOSS-ஐ அடித்து துவைத்து காயப்போட 19 வழிகள்




நீங்களே ஒரு BOSS-ஆக இருக்கும் பட்சத்தில் இங்கேயே ஓடிவிடுங்கள். பதிவு உங்களுக்கானது அல்ல. மீறி படித்து மன உளைச்சலுக்கு ஆனால் கம்பெனி பொறுப்பேற்காது(யார் கம்பெனி?). மீதிப்பேர் தொடருங்கள்.

நமக்கும் நம்ம பாஸுக்கும் இடையிலான பாரம்பரிய உறவு டாம் & ஜெர்ரி தொடரைப் போல முடிவில்லாதது. இதில் யார் டாம் யார் ஜெர்ரி என்பது இடம், நேரம் மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து மாறக்கூடிய விஷயம். ஆனாலும் பல நேரங்களில் கைப்புள்ள மாதிரி சிக்குவது நாம் தான்.

நம்ம பாஸுக்கு மூடு சரியில்லைன்னா ஏதாவது ஒரு அட்டு காரணம் சொல்லி நம்மை திட்டி தீர்த்து அவருடைய கோபத்தை தணித்துக் கொள்ள அவருக்கு வழி இருக்கிறது.ஆனா நம்ம நிலைமை? சாவுகிராக்கின்னு வாயில் வந்தாலும் சார் ஓகே சார்-னு பம்ம வேண்டியது தான்.

உங்கள் தீராத கோபத்தை குறைக்க வழி செய்யும் ஒரு விவகாரமான விளையாட்டு தான் Dont Whack Your Boss.



உங்கள் அறைக்கு உங்கள் பாஸ் வருகிறார். கையில் இருக்கும் ரிப்போர்ட் சகிதம் உங்களை வார்த்தைகளால் வறுத்தெடுக்கிறார். உங்கள் அறை முழுவதும் இருக்கும் நிறைந்திருக்கும் பொருட்களில் 19 பொருட்களை நீங்கள் ஒவ்வொன்றாக கண்டுபிடிக்க வேண்டும்.

ஒரு பொருளை நீங்கள் மவுஸால் கிளிக்கிய மறு நிமிடம் நம்ம ஹீரோ தன்னோட பாஸ்-ஐ அடி பின்னுகிறார். எல்லாம் நல்லபடியாக முடிந்தவுடன்(?!) கீழே உள்ள "Cleaner"-ஐ அழுத்துங்கள். எச்சரிக்கை : உங்க பாஸ் மீது நீங்கள் செம காண்டில் இருந்தால் மட்டும் இதை விளையாடுங்கள்.

ஏன்னா இதில் சில காட்சிகள் ஹாலிவுட் டார்ச்சர் வகைப்படங்கள் அளவுக்கு இருக்கிறது. அதிகமாக இரத்தம் செலவிட்ட விளையாட்டுகள் என ஒரு லிஸ்ட் தயார் செய்தால் நிச்சயம் முதல் பத்து இடத்திற்குள் இதற்கு ஒரு இடம் உண்டு.

செம காமெடியான விளையாட்டு இது. இதை ஆபிஸில் வைத்து விளையாடிக் கொண்டு இருக்கும் போது உங்கள் பாஸிடமே நீங்கள் சிக்கினால் அதைவிட பெரிய காமெடியாக இருக்கும்.

லின்க் : http://www.6to60.com/games/610-Whack%20Your%20Boss.html

புதன், 10 மார்ச், 2010

உங்களுக்கு எவ்வளவு ஆங்கில வார்த்தைகள் தெரியும்? தெரிந்து கொள்ளுங்கள்





தாய் மொழியைத் தவிர எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ளலாம். அந்நிய மொழிகளை சரளமாக பேச வேண்டும் என நீங்கள் பிரியப்பட்டால் உங்களுக்கு கண்டிப்பாக தேவையானது வார்த்தை வளம்.

ஆங்கிலத்தில் Vocabulary என சொல்வார்கள். அதாவது உங்களுக்கு தெரிந்திருக்கிற மற்றும் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளின் தொகுப்பு. Spoken English படிப்பவர்களுக்கு முக்கியமாக வலியுறுத்தப்படும் விஷயங்களில் ஒன்று இந்த Vocabulary.

தினசரி நீங்கள் ஆங்கில வார்த்தைகளை உபயோகிக்கத் தவறினால் உங்களுக்கு தெரிந்த சில வார்த்தைகள் கூட மறந்து போய் சில சமயங்களில் திரு திருவென முழிக்க நேரிடும். Vocabulary வளர்த்துக் கொள்வதற்கு பலர் Hindu பேப்பர் படிப்பார்கள். ஏன்னா ஷேக்ஸ்பியருக்கு கூட தெரியாத வார்த்தைகளை எல்லாம் உபயோகிக்கும் பத்திரிக்கை அது. மொத்த Dictionary-யையே மனப்பாடம் செய்யும் சூரர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

ஏதாவது ஒரு வழியில் நீங்கள் வளர்த்துக் கொள்ளும் ஆங்கில வார்த்தைகளை தொடர்ந்து நினைவில் வைத்துக் கொள்ள உதவும் ஒரு தரமான விளையாட்டு தான் Must pop words.



விளையாட்டு ஆரம்பித்ததில் இருந்து பல ஆங்கில எழுத்து பந்துகள் விழுந்து கொண்டே இருக்கின்றன. நீங்கள் பார்க்கும் எழுத்துகளை வைத்து ஏதாவது ஒரு ஆங்கில வார்த்தையை கண்டுபிடித்து அதை டைப் பண்ணுங்கள். பிறகு ENTER-ஐ தட்டுங்கள்.நீங்கள் டைப் அடித்தது உண்மையிலேயே ஆங்கில வார்த்தையாக இருந்தால் மட்டும் அந்த எழுத்துகள் மறையும். நீங்கள் வார்த்தைகள் கண்டுபிடிக்க தாமதித்தால் பந்துகள் முழுவதும் நிறைந்து விடும். Game Over.

இது சாதாரணமாக நாம் விளையாடும் டைப்பிங் விளையாட்டு அல்ல. உங்களுக்கு ஆங்கில வார்த்தைப் புழக்கம் இருந்தால் தான் விளையாட்டை நீண்ட நேரம் தொடர முடியும்.

லின்க் : http://www.6to60.com/games/9625-Must%20pop%20words.html

புதன், 3 மார்ச், 2010

முத்தான இரண்டு விளையாட்டுகள் ஆண்களுக்கு மட்டும் (18 +/-)



இந்த பதிவில் இரண்டு விளையாட்டுகளை இணைத்திருக்கிறேன். ஒன்று 18+ ஆண்களுக்கு மட்டும். மற்றது இன்னும் கல்யாணம் ஆகாதவர்களுக்கு.

முதல் விளையாட்டின் பெயர் Blocking and Kissing. பெயரே விளையாட்டை பற்றி சொல்லிவிட்டதுன்னு நினைக்கிறேன். உங்கள் காதலி உங்கள் மீது ரொம்ப கோபமாக உட்கார்ந்திருக்கிறாள். திடீர் திடீரென்று உங்கள் பக்கம் திரும்பி உங்களை அடி வெளுக்கிறாள்.



இங்கே தான் உங்களுக்கு வேலையே. சரியாக காதலி திரும்பும் நேரம் திரையில் ஏதாவது ஒரு Arrow கீ தோன்றும். முந்திக் கொண்டு நீங்கள் அந்த Arrow கீயை அமுக்கி விட வேண்டும். டைமிங்கில் அமுக்கினால் காதலியிடம் அடிவாங்காமல் கமல்ஹாசனைப் போல் கிஸ்ஸடிக்கலாம். உங்க romance score கூடும். இல்லைன்னா அடி வாங்குவீங்க. health குறையும். அவ்வளவே!!! உங்க காதலியை பக்கத்தில் வைத்துக் கொண்டு இதை விளையாடினால் நிஜமான அடியே விழ வாய்ப்பிருக்கு!.

லின்க் : http://www.6to60.com/games/9623-blocking%20and%20kissing.html



இரண்டாவது விளையாட்டு Cooking Show. கல்யாணமாகாத எல்லா ஆண்களும் கண்டிப்பா விளையாட வேண்டிய விளையாட்டு. இப்பவே எதிர்காலத்துக்கு தயாராகணும் இல்லையா?!.ஒரு Cheese Cake எப்படி சமைக்கிறது என்பதை முட்டையை உடைப்பதில் இருந்து எலுமிச்சைப் பழம் பிழிவது வரை விலாவரியாக உங்களுக்கு சொல்லிக் கொடுத்து மவுஸின் உதவியுடன் உங்களையே பண்ண வைக்கிறார்கள் . . . அதுவும் Flash வடிவில்.

லின்க் : http://www.6to60.com/games/9624-Cooking%20Show.html