"Mind reading" அப்படீன்னு ஒரு சமாச்சாரம் உண்டு. புத்தகம் படிக்கிற மாதிரி சிலர் சர்வ சாதாரணமாக நம் மூளையை அப்படியே படிப்பார்கள்.
ஏதாவது ஒன்றை நினைக்க சொல்லிவிட்டு சம்பந்தமில்லாமல் ஏதாவது சில கேள்விகள் கேட்டு கடைசியில் நம் மனதில் நினைத்ததை பளிச்சென்று பெயருடன் சொல்வார்கள். நாமும் சொல்ல முடியாத ஆச்சர்யத்துடனும் கொஞ்சம் சந்தேகத்துடனும் அவர்களைப் பார்த்து கொட்ட கொட்ட முழிப்போம்.
இது ஒரு பக்கம் இருக்க ஒரு இணைய விளையாட்டு என்னை எந்த கேள்வியும் கேட்காமல் என் மனதில் நினைத்ததை அப்படியே காட்டியது. சத்தியமாக அதிர்ந்து போனேன். இந்த விளையாட்டின் பின்னணியை நாம் அப்புறம் பார்க்கலாம்.
முதல்ல நீங்க பார்க்க வேண்டியது இந்த லின்க் :
http://www.6to60.com/games/9686-Phychic.html
நீங்கள் பண்ண வேண்டியது :
- ஒரு இரண்டிலக்க எண்ணை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். (Ex : 23)
- அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். கிடைக்கும் எண்ணை நினைவில் கொள்ளவும் ( ஏ : 2+3 = 5)
- இப்பொழுது நீங்கள் நினைத்த எண்ணில் இருந்து உங்களுக்கு கிடைத்த எண்ணை கழிக்கவும் (23 - 5).
- இப்பொழுது கடைசியாக ஒரு எண் கிடைத்திருக்கிறதா? இந்த எண்ணுக்கு நேரே திரையில் தெரியும் வடிவத்தை உற்று நோக்குங்கள் . . .
- இப்பொழுது திரையில் உள்ள பெரிய நீல வண்ண பட்டனை கிளிக்குங்கள்.
இது என்னடா கொடுமையா இருக்கு! பட்ட பகல்ல, அதுவும் ஆபிஸ் டயத்துல(?!), ரெண்டு கண்ணையும் திறந்துட்டு விளையாடும் போதே நம்மை இப்படி மடையனாக்கப் பாக்குறாய்ங்களே! என ரொம்ப நொந்து போயிட்டேன்.
இதன் பின்னாடி உள்ள லாஜிக்கை இணையத்தில் மேய்ந்து கண்டுபிடித்த பின் தான் மனம் ஆறுதலாச்சு! அதை நாளைக்கு பின்னூட்டமா போடுறேன். விவரம் தெரிஞ்ச ஆள் எனக்கு முன்னாடியே பின்னூட்டம் போடலாம் . . .
nitchayam a pinnutam podunga enakku sucsses
பதிலளிநீக்குenakku antha murai இணையத்தில் மேய்ந்து கண்டுபிடித்த thu vittam 9 thin......... okwa
பதிலளிநீக்குநீங்கள் எந்தவொரு இரண்டிலக்க எண்ணை எடுத்துக் கொண்டு மேற்சொன்ன கணக்குகளை போட்டாலும் கிடைக்கும் எண் கண்டிப்பாக 9 அல்லது 9-ன் மடங்காகவே இருக்கும். அதாவது 9,18,27 . . .
பதிலளிநீக்குஇப்பொழுது விளையாட்டை நன்கு கவனித்து பார்த்தீர்களானால் இந்த எல்லா எண்களுக்கும் ஒரே Symbol தான் இருக்கும். சரி தானே? இதை முதலிலேயே கண்டுபிடித்து சொன்ன அன்பர் aazeer-க்கு ஒரு ஷொட்டு!
thaxxxxxx விளையாட்டு வீரன் come to googleyoung-aazeer.blogspot.com
பதிலளிநீக்கு