வெள்ளி, 21 மே, 2010

உயிர் நண்பன் Vs குட்டி ராட்சஷி - கலக்கல்





சில ஜாலியான சினிமாக்கள் வரும் போது friends-ஸோட சேர்ந்து போங்கப்பா என சொல்வதுண்டு. ஏன்னா அந்த படங்களை தனியாக பார்ப்பதை விட சேர்ந்து பார்க்கும் போது இன்னும் பல மடங்கு உற்சாகமாக இருக்கும். சேர்ந்து சிரிக்கிறதுங்கிறதே ஒரு ஆரோக்கியமான விஷயம் தானே?

அந்த மாதிரி நீங்க friends-ஸோட சேர்ந்து உட்கார்ந்து ஜாலியாக விளையாட ஒரு கலக்கல் விளையாட்டை இங்க அறிமுகப்படுத்துறேன்.

விளையாட்டின் பெயரே "A Friend In Need" தான்.

சின்ன பிள்ளையாக இருக்கிறப்ப Monkey Catch அப்படீன்னு ஒரு விளையாட்டு அடிக்கடி விளையாண்டிருக்கிறோம். ஞாபகம் இருக்கிறதா? அப்படியே கீழே இருக்கும் படத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே ஒரு Flash Back போங்கள்.



ரைட்! மூன்று பேர் சேர்ந்து விளையாடும் விளையாட்டு அது. உதாரணத்திற்கு மூன்று பேரின் பெயர்கள் A,B,C என வைத்துக் கொள்வோம். இதில் A-யும் C-யும் எதிரெதிரே இருக்க B மட்டும் நட்ட நடுவில் இருப்பார். அவர் தான் Monkey.

A தன் கையில் இருக்கும் பந்தை சரியாக C-ஐ நோக்கி எறிவார். அதே மாதிரி C அதை Catch பிடித்து A-ஐ நோக்கி எறிவார். நடுவில் இருக்கும் B கைக்கு பந்து கிடைத்து விடாமல் இருவரும் மாறி மாறி எறிய வேண்டும்.

ஓகே. இப்ப எதுக்கு வேலை வெட்டியில்லாம இந்த கதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கேன்னு கேட்டீங்கன்னா . . . இந்த கதையும் நாம பார்க்கப் போகிற விளையாட்டின் கருவும் ஒரே மாதிரி தான்.



உங்களுடைய உயிர் நண்பருடைய நீல வண்ணக்குழந்தையை ஒரு குட்டி அடங்காப்பிடாரி ராட்சஷியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

இரண்டு நண்பர்கள் எதிரெதிரே நிற்கிறார்கள். நடுவில் இருப்பது குட்டி ராட்சஸி. குட்டி ராட்சஷி யார் கையில் குழந்தை இருக்கிறதோ அவர்களை துரத்து துரத்தென்று துரத்துகிறாள்.

குட்டி ராட்சஷி ரொம்ப பக்கத்தில வர்றதுக்கு முன்னாடி குழந்தையை இன்னொரு பக்கம் தூக்கிப் போட்றணும். அவ்வளவே!. ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை. ஏன்னு நீங்க விளையாடறப்ப தெரியும்!

இதை விளையாட மவுஸே போதுமானது. தூக்கிப் போடறதுக்கு மவுஸை கிளிக்கினால் போதும். மொத்தம் மூணு வகையான Speeds இருக்கிறது. மவுஸை எங்கே வைத்து கிளிக் பண்றீங்களோ அதுக்கேத்த மாதிரி Speed வரும்.

லின்க் : http://www.6to60.com/games/9698-A%20Friend%20In%20Need.html

ரொம்ப ஜாலியான விளையாட்டு இது. எவ்வளவு நேரம் சமாளிக்கிறீங்களோ அது தான் உங்க Score. விளையாடி பார்த்து Score-ஐ பின்னூட்டம் போடுங்களேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக