வெள்ளி, 30 ஏப்ரல், 2010

நிறங்களை பற்றிய உங்கள் அறிவு சரியானது தானா? - பரிட்சை




சிவப்பு, பச்சை மற்றும் நீல வண்ணங்களை நிறக்குருடு உள்ளவர்களைத் தவிர்த்து நம் அனைவராலும் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இந்த வண்ணங்களின் கலவையில் உண்டாகும் பல வண்ணங்களை பற்றிய அறிவு பலருக்கு குறைவே. உதாரணம் மெஜந்தா, சியான், பிரவுன் முதலியன.

சில நேரம் இந்த வண்ணங்களை நாம் அறிந்திருந்தாலும் அவை எந்த வண்ணங்களின் கலவையால் உண்டானது என்பது பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம்.

பற்பல வண்ணங்களை விளையாட்டாக தெரிந்து கொள்ள உதவுகிறது இந்த Chroma.

விளையாட்டின் பின்னணியில் ஏதோ ஒரு வண்ணம் தெரிகிறது. அந்த வண்ணத்தை மையத்தில் உள்ள வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும். மைய வட்டத்தில் எத்தனை வண்ணங்கள் கலக்க வேண்டும் என்ற எண்ணும் இருக்கிறது.

அதைச் சுற்றி உள்ள பல்வேறு நிற வட்டங்களில் இருந்து சரியான நிற வட்டங்களை மவுஸால் drag செய்து நடுவில் விட வேண்டும். அவ்வளவே!

லின்க் : http://www.6to60.com/games/9682-Chroma.html

ஒரு ரொமான்ஸ் புதிர் - இந்த காதலர்களை சேர்த்து வையுங்கள்!





பிரிந்திருக்கும் இரு காதலர் கரடிகளை சேர்த்துவைக்கும் ஒரு புதிர் விளையாட்டு தான் Dude Bear Love Adventure.

இந்த காதலர்களை சேர்த்து வைக்க நீங்கள் நாடோடிகள் பாணியில் எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டியதில்லை. கொஞ்சம் கம்ப்யூட்டர் அறிவும் கொஞ்சம் லாஜிக்கல் திங்கிங் திறமையும் இருந்தாலே போதும்.

விளையாட்டு தொடங்கும் போது இரு கரடிகளும் இரு வேறு இடங்களில் உட்கார்ந்திருக்கும். இவை தவிர அங்கும் இங்கும் சில இதயங்களும் கிடக்கின்றன. கரடி எல்லா இதயங்களையும் சேகரித்து விட்டு இன்னொரு கரடியை அடைய வேண்டும். அவ்வளவே!



நாம் பார்க்கும் பொருட்களில் மென்மையான பொருட்களும் கடினமான பொருட்களும் கலந்திருக்கின்றன.மென்மையான பொருட்களை கிளிக்கினால் அவை மறைந்து போகும். சரியான பொருட்களை தேர்ந்தெடுத்து சரியான வரிசையில் கிளிக்குவதன் மூலம் மட்டுமே இரு கரடிகளையும் சேர்க்க முடியும்.

லின்க் : http://www.6to60.com/games/9681-Dude%20Bear%20Love%20Adventure.html

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

உங்களின் துப்பறியும் திறன் எவ்வளவு? - பரிட்சை





Sherlock holmes புத்தகம் முதல் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வரை துப்பறியும் கருவை மையமாக கொண்ட விஷயங்கள் நம்மை அப்படியே கட்டிப்போடும் திறன் படைத்தவை.

துப்பறியும் வேலை பார்ப்பதற்கு தேவைப்படும் விஷயங்களில் முக்கியமான ஒன்று அதீத கவனக் கூர்மை. சரித்திரப் புகழ் பெற்ற பல துப்பறியும் நிபுணர்கள் இந்த விஷயத்தில் பார்த்ததை அப்படியே மனதில் பதிய வைத்துக் கொள்ளும் ஆற்றல்(Photographic memory) பெற்றிருந்தனர்.

நம்முடைய கவனக் கூர்மை எவ்வளவு தூரம் இருக்கிறது என சோதித்துப் பார்க்க உதவுகிறது இந்த Scene memory.



ஒரு சில வினாடிகளுக்கு மட்டும் உங்கள் கண்முன்னால் ஒரு இடம் காண்பிக்கப் படுகிறது. அந்த இடத்தில் எங்கு வேண்டுமானாலும் எத்தனை பொருட்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். அவற்றை உடனே மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

நேர அவகாசம் முடிந்தவுடன் திரும்பவும் திரையில் தோன்றும் இடத்தில் சில பொருட்கள் மறைந்து போயிருக்கலாம் அல்லது புதிதாக பொருள் ஏதாவது முளைத்திருக்கலாம். அது எந்தெந்த இடங்கள் என்பதை மட்டும் மவுஸால் கிளிக்கி சுட்டிக் காட்ட வேண்டும். அவ்வளவே!

உங்கள் துப்பறியும் திறமையை நீங்கள் இதன் மூலம் சரியாகவே எடை போட முடியும்.

லின்க்: http://www.6to60.com/games/9677-Scene%20Memory.html

வியாழன், 22 ஏப்ரல், 2010

எடை போடுவதன் மூலம் உங்கள் திறமையை எடை போடலாம்





உங்களுடைய லாஜிக்கல் திங்கிங் திறமையை பரிசோதிக்க / வளர்க்க உங்களிடம் இப்பொழுது ஒரு ஐந்து நிமிடம் இருக்குமானால் உங்களுக்காகத்தான் இந்த பதிவு.

ஏதாவது ஒரு பாடத்தை அதிகமாக படிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு தேவையானது ஓப்பிடும் திறமை. பக்கம் பக்கமாக தொடர்ந்து படிப்பது கண்களுக்கும் மூளைக்கும் சோர்வை மட்டுமே எப்பொழுதும் தரும்.

அதே விஷயத்தை மற்றொரு விஷயத்துடன் ஒப்பிட்டு படிக்கும் பொழுது புரிதல் அதிகமாவதுடன் அந்த விஷயம் நம் மனதில் ஆழமாக பதிந்தும் போகும்.


Seasaw logic என்ற இந்த விளையாட்டு உங்களுடைய ஒப்பிட்டு புரிந்து கொள்ளும் திறமை எவ்வளவு என தெரிந்து கொள்ள உதவுகிறது.

ஒவ்வொரு Level-களிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தராசுகள் திரையில் தோன்றும். ஒவ்வொரு தராசின் இருபுறமும் வெவ்வேறு வடிவங்களில் எடைக்கற்கள் இருக்கின்றன. அவற்றை வைத்துக் கொண்டு இருப்பதிலேயே எந்த எடைக்கல் அதிக எடை கொண்டது என கண்டுபிடித்து அதே வடிவத்தில் கீழே உள்ள கல்லை கிளிக்க வேண்டும். அவ்வளவே.

மொத்தம் 20 Level-கள் தான். ஏழாவது Level-க்கு அப்புறம் விளையாட்டு சூடு பிடிக்கிறது. ஐந்து நிமிடங்களில் மொத்த விளையாட்டையும் முடித்து விடலாம்.

லின்க் : http://www.6to60.com/games/9676-Seesaw%20logic.html

2 நிமிடம் போதும்.நாடுகளின் கொடிகளை அறிந்து கொள்ளுங்கள்




இன்னும் ஒரு பத்து வருடங்களுக்கு பின்னர் நம்முடைய வீட்டு குழந்தைகள் எல்லாம் புத்தகங்களை எல்லாம் தூக்கிப் போட்டு விட்டு இணைய விளையாட்டுகள் மூலம் மட்டுமே கல்வி கற்கப் போகிறார்கள் என நினைக்கிறேன்.

கல்வி சம்பந்தமாக வரும் இந்த சிறு இணைய விளையாட்டுகள் மிக சுவாரஸ்யமாகவும் நமக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டி விடும் வகையிலும் உள்ளன.


World Flags Quiz என்ற இந்த விளையாட்டு உலகில் உள்ள அனைத்து முக்கிய நாடுகளின் தேசிய கொடிகளை அறிந்து கொள்ள உதவுகிறது. இடது பக்கம் தோன்றும் தேசியக்கொடி எந்த நாட்டை சேர்ந்தது என்று வலது பக்கம் உள்ள நான்கு நாடுகளில் இருந்து ஒன்றை பத்து வினாடிகளுக்குள் தேர்வு செய்ய வேண்டும்.

தப்பானதை கிளிக்கினால் உடனே சரியான நாட்டை அப்போதே காட்டுவது ரொம்ப சிறப்பு. அது சரி. இந்த பதிவில் முதல் படத்தில் இருக்கும் கொடி யாருடையதுன்னு சொல்லுங்க பார்ப்போம்!

லின்க் : http://www.6to60.com/games/9675-World%20Flags%20Quiz.html


புதன், 21 ஏப்ரல், 2010

ரஜினிக்கும் கமலுக்கும் பிடித்த விளையாட்டு - NO COMMENT !!!





தான் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக கையில் மாட்டுவரை எல்லாம் படுத்தி எடுக்கும் துறை ஒன்று உண்டென்றால் அது கண்டிப்பாக பத்திரிக்கைத் துறை தான். "நாங்கல்லாம் பிரஸ் தெரியும்ல" என இவர்கள் செய்யும் அலும்பல் சொல்லி மாளாது.

சாதாரணமாய் உலா வருவபவர்களை பிரபலமாக்கி விடுவதும் அவர்கள் பிரபலமான பின் அவர்களை கண்ட நேரங்களில் மைக்கும் கேமராவுமாக துரத்துவதும் ஏதாவது டீல் ஒத்து வரவில்லையென்றால் கடைசி பக்க கிசுகிசுவில் கிழித்து தொங்க போடுவதும் தினசரி நடப்பு.

சரி.உலகத்தில் ஒரு நாள் பத்திரிக்கைகாரர்களுக்கு ஒரு செய்தியுமே கிடைக்காமல் போனால்? உலகத்தில் பிரபலங்களே இல்லாமல் போக ஆரம்பித்தால்?



வேறு வழியில்லாமல் பத்திரிக்கை காரர்கள் சாதாரண குடிமகன்களை துரத்த ஆரம்பித்தால்? இந்த ஐடியாவில் உதயமான ஒரு மன அழுத்ததை குறைக்கும் விளையாட்டு தான் No Comment.

நகரத்தின் நடுவில் நின்று கொண்டு இருக்கிறீர்கள். நாலாபுறத்தில் இருந்தும் பத்திரிக்கைகாரர்கள் உங்கள் மீது படை எடுக்கிறார்கள். அவர்களிடம் இருந்து உங்களால் அதிகபட்சம் எவ்வளவு நேரம் தப்பித்து தாக்குப்பிடிக்க முடிகிறது என்பதில் தான் உங்கள் திறமை அடங்கி இருக்கிறது.

நான்கு புறமும் நகர்வதற்கும் நான்கு புறமும் தட்டுகளை தூக்கி போடுவதற்கும் நான்கு Arrow-கீகள் மற்றும் W,A,S,D கீகளை பயன்படுத்தவும். தப்பித் தவறி அவர்களிடம் நீங்கள் மாட்டினால் விடாமல் கீகளை அழுத்தி No Comment என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால் விளையாட்டு முடிந்து விடும். மறுநாள் பேப்பரின் முதல் பக்கத்தில் நீங்கள் வந்து விடுவீர்கள்.Game Over.



ரஜினிக்கும் கமலுக்கும் இந்த விளையாட்டு மிகவும் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஏன் விஜய்க்கு கூட(சைலன்ஸ்!). நீங்களும் பிரபல பதிவராக இருந்தால் தினசரி விடாமல் இப்போதே விளையாட ஆரம்பித்து விடுங்கள்.

லின்க் : http://www.6to60.com/games/9674-No%20Comment.html


செவ்வாய், 20 ஏப்ரல், 2010

கோபத்தில் பெண் தோழிகள் : ஒரு ஜாலி டைம் பாஸ்






உலகம் முழுவதும் இன்று நேரடியாகவும் சில இடங்களில் மறைமுகமாகவும் பின்னி எடுக்கும் விஷயம் ஒன்று உண்டு. அது ரீமிக்ஸ் கலாசாரம். புதிய மொந்தையில் பழைய கள் என்று சொல்லலாம்.

ரொம்ப காலத்துக்கு முன்னாடியே ஏதாவது ஒரு விஷயத்தில் நம் முன்னோர்கள் பழம் தின்று கொட்டை போட்டிருப்பார்கள். கால மாற்றத்தில் அந்த விஷயம் கொஞ்சம் வழக்கொழிந்து போயிருக்கும். அதை எவனாவது ஒரு அதிமேதாவி நிகழ்காலத்திற்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் அங்கும் இங்கும் பாலிஸ் பண்ணி வெளியிட்டால் அது சூப்பர் ஹிட்!

இன்று தமிழ் ரீமிக்ஸ் பாடல்கள் தமிழையும் தமிழ்நாட்டையும் படுத்திக் கொண்டிருப்பதை குறிப்பிடாமல் விட முடியாது. ரீமிக்ஸ் பாடல்கள் கவர்ந்த ரசிகர்களின் எண்ணிக்கையை விட வாங்கிக் கட்டிக் கொண்ட வசவுகள் தான் அதிகம்.

ஆனால் ரீமிக்ஸ்களால் தினமும் வளர்ந்து கொண்டே போகும் விஷயம் ஒன்று உண்டு. அது இணைய விளையாட்டுகள் தான். ஒரு விளையாட்டு இணையத்தில் ஹிட்டடித்து விட்டால் அவ்வளவு தான். அதே கருவை வைத்து வெவ்வேறு மாதிரியாக நூற்றுக் கணக்கான விளையாட்டுகள் இணையமெங்கும் உலா வர தொடங்கி விடும்.


அந்த வகையில் பைத்தியம் பிடித்தாற்போல் தொடர்ந்து விளையாட வைக்கும் அரதப் பழைய விளையாட்டான Galaxy-யின் கருவை மையமாக வைத்து இப்பொழுது உலா வரும் பல விளையாட்டுகளில் ஒரு ஜாலி ரகளை விளையாட்டு தான் Angry girlfriend.

ஒரு சாலையில் நீங்கள் நிற்கிறீர்கள். உங்களுக்கு முன்னால் குமரிகள் முதல் கிழவிகள் வரை பலரும் எதிரே வருகிறார்கள். அவர்களுக்கு Arrow கீகளை அழுத்தி கவனமாக வழிவிடுங்கள். நடு நடுவே திடீரென்று உங்கள் மேல் கோபமாக இருக்கும் உங்கள் பெண் தோழிகள் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஓடி வருகிறார்கள். அவர்களுக்கு மட்டும் Spacebar அழுத்தி குண்டு போடுங்கள். அவ்வளவே.

பல நேரங்களில் உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கவும்(?!) இந்த விளையாட்டை நீங்கள் விளையாடலாம்.

லின்க் : http://www.6to60.com/games/9673-Angry%20Girlfriend.html


திங்கள், 12 ஏப்ரல், 2010

திறமையை எடை போட - இயல்பாய் ஒரு இயற்பியல் புதிர்





உலகின் மிகச் சிறந்த இயற்பியல் புதிர் விளையாட்டுகளில் ஒன்றாக தன் பெயரை தக்க வைத்திருக்கும் Shrink It பற்றியது தான் இந்த பதிவு.

பொதுவாக இயற்பியல் புதிர் விளையாட்டுகள் மற்ற சாதாரண புதிர் விளையாட்டுகளைப் போல் இல்லாமல் மிகுந்த கவனத்துடன் அமைக்கப்பட்டிருக்கும். விளையாட்டுகளின் ஒவ்வொரு அசைவும் உண்மையில் நடப்பதைப் போன்றே ஒரு உணர்வைத் தருவதாக இருக்கும்.

இந்த விளையாட்டின் இலக்கு ஒரு வரிக்கதை தான். நீல வண்ண சிரிப்பழகனை(Smiley??) வெள்ளைப் பெட்டிக்குள் கொண்டு செல்ல வேண்டும். அவ்வளவே.


திரையில் தெரியும் எந்தவொரு பொருளையும் உங்களால் கீபோர்ட் மூலமாகவோ மவுஸ் மூலமாகவோ நகற்ற முடியாது. அப்புறம் எப்படி விளையாடுவது?

நீங்கள் ஒரு பொருளை ஒவ்வொரு முறை கிளிக்கும் போதும் அந்த பொருள் இருக்கும் அளவை விட கொஞ்சம் சிறிதாகிறது. பொருள் சிறிதாகும் போது உங்கள் சக்தியானது(MASS) அதிகரிக்கும். அதே மாதிரி ஒரு பொருளை Space bar அழுத்திக் கொண்டு கிளிக்கினால் பொருள் பெரிதாகும். இப்பொழுது உங்கள் சக்தி குறையும். கவனிக்க : உங்களிடம் சக்தி(MASS) இருக்கும் போது மட்டுமே பொருளை பெரியதாக்க முடியும்.

இப்படியாக இருக்கும் பொருட்களை சிறிதாக்கியோ அல்லது பெரிதாக்கியோ சிரிப்பழகனை வெள்ளைப் பெட்டிக்கு கொண்டு செல்ல வேண்டும். விளையாட்டின் முதல் சில Level-களை தாண்டுவது கஷ்டம் இல்லை. அதன் பின் வரும் Level-களை தாண்டுவது சுலபம் இல்லை.

லின்க் : http://www.6to60.com/games/9642-Shrink%20It.html


வெள்ளி, 9 ஏப்ரல், 2010

இது சிரிக்க வைக்கும் மாத்திரை - நான் கியாரண்டி




முன்குறிப்பு

இந்த மாத்திரைகளுக்கு Expiry Date எல்லாம் கிடையாது.

நடுகுறிப்பு(?!)

மணிக்கணக்காக உங்களை அப்படியே addict செய்யும் தன்மை கொண்ட ஒரு சின்ன விளையாட்டு தான் இந்த Happy pill.

திரையில் அங்கும் இங்கும் சில உம்மண்ணா மூஞ்சிகள் உள்ளன. உங்கள் கையில் இருப்பது ஒரே ஒரு மாத்திரை தான்.அந்த மாத்திரையை சரியாக ஏதாவது ஒரு இடத்தில் இருந்து குறிபார்த்து விட்டுவிடுங்கள். அந்த மாத்திரை திரையில் உள்ள அத்தனை முகங்கள் மீதும் படவேண்டும்.அவ்வளவே.



மாத்திரை பட்டவுடன் புன்னகை புரிகின்றன முகங்கள். ஏன்னா அது Happy pill. மாத்திரை மீண்டும் அதே முகத்தின் மேல் பட்டால் இன்னும் நன்றாக பல்லை இளிக்கின்றன. அடுத்தமுறை பட்டால் நாக்கு வெளியே தள்ளி செத்து விடும். ஜாக்கிரதை.

லின்க் : http://www.6to60.com/games/9641-Happy%20pill.html

பின்குறிப்பு

பிடிச்சிருந்தா பின்னூட்டம் போடுங்க.

போக்கிரி பிரகாஷ் ராஜ் விளையாட்டு - சிந்திக்க, பொழுதுபோக்க




போக்கிரி படம் ஹிட்டானதில் விஜய்க்கு அடுத்து முக்கிய காரணமாக இருந்தது பிரகாஷ் ராஜின் நடிப்பு தான். அதிலும் நெப்போலியனிடம் வசமாக சிக்கி அன்று நாள் முழுவதும் "நான் தூங்கலை நான் தூங்கலை" என பிரகாஷ் ராஜ் செய்யும் அலட்டல் நகைச்சுவையை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது.


Wake the Royalty - என்ற இந்த அசத்தல் புதிர் விளையாட்டின் கருவும் இதே தான். விளையாட்டின் ஒவ்வொரு Level-லிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ராஜ குடும்பத்தினர் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இவர்களை தூக்கத்தில் இருந்து உசுப்பி விடுவது தான் உங்கள் வேலையே.

திரையின் மேல் இடது ஓரத்தில் உங்கள் கையிருப்பில் உள்ள பொருட்கள் தெரியும். அந்த பொருட்களை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் திரையில் உள்ள அனைத்து ராஜ குடும்பத்தினரையும் உசுப்பி விட வேண்டும்.

நீங்கள் வைக்கும் பொருட்களை ஏற்கனவே உள்ள ஏதாவது ஒரு பொருளின் மீது மட்டும் தான் வைக்க முடியும். அந்தரத்தில் வைக்க முடியாது. நீங்கள் கையில் வைத்திருக்கும் பொருளின் மீது X குறி தோன்றினால் அந்த பொருளை அந்த இடத்தில் வைக்க முடியாது என்று அர்த்தம்.

எல்லா Level-களும் இரண்டு அல்லது மூன்று கிளிக்குகளிலேயே முடிந்து விடுகிறது. ஆனாலும் எங்கே வைத்து கிளிக்குவது எப்போது கிளிக்குவது என்பதில் தான் சூட்சுமமே அடங்கி இருக்கிறது.

இது இயற்பியல் விளையாட்டு (Physics Game) வகையை சேர்ந்தது. விளையாட்டை மிக சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள்.

லின்க் : http://www.6to60.com/games/9640-Wake%20the%20Royalty.html

புதன், 7 ஏப்ரல், 2010

வாங்க நல்லா குண்டு போடலாம்! ஜாலி புதிர்




"வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல்" என்று ஒரு சொற்றொடர் வழக்கத்தில் உண்டு. நல்ல விஷயங்களை அலுப்பூட்டாமல் சுவாரஸ்யமாக சொல்வது என்பது ஒரு சவால் தான்.

நம் மூளையை சிந்திக்க வைக்கும் ஒரு சிறிய புதிர் விளையாட்டை ரொம்ப சிரமமாகவோ ரொம்ப சுலபமாகவோ அமைக்காமல் நகைச்சுவை உணர்வுடன் குழந்தைகளுக்கும் புரியும் மாதிரி தரும் ஒரு அசத்தல் விளையாட்டு தான் Fragger.

விளையாட்டின் கரு இது தான். ஒவ்வொரு Level-லையும் நம்மிடம் அளவான குண்டுகள் தரப்படுகின்றன. அந்த குண்டுகளை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் நிற்கும் எல்லா கொள்ளைக்காரர்களின் மேலும் குண்டைப் போட வேண்டும்.அவ்வளவே.

இதை விளையாட மவுஸே போதுமானது. மவுஸால் குண்டு எறியும் திசையை தேர்வு செய்வதுடன் எறியும் வேகத்தையும் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் எறிந்த சில நொடிகளில் குண்டு வெடிக்கும். குண்டை வெடிக்க விடாமல் செயலிழக்கச் செய்ய Spacebar அழுத்துங்கள்.

மிக சுலபமான முதல் Level-லில் ஆரம்பித்து படிப்படியாக மூளையை காய வைக்கும் முப்பதாவது Level வரை சுவாரஸ்யமாக பயணிக்கிறது விளையாட்டு.