திங்கள், 29 ஜூன், 2009

நீங்கள் IT -க்கு எந்த அளவுக்கு தகுதியானவர்? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்






IT துறையினர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் சந்தித்தே ஆக வேண்டிய தலைவலி ஒன்று உண்டு. அது ஆப்டிடுயூட் அல்லது லாஜிக்கல் டெஸ்ட்.

நீங்கள் IT படிப்பவரானால் டிகிரி கடைசி வருடம் ஆர்.எஸ்.அகர்வாலின் Quantitative Aptitude போன்ற தலைவலி புத்தகத்தையெல்லாம் படித்து தலையில் ஏற்ற வேண்டியதிருக்கும்.

உங்களுக்காக ஒரு அருமையான ஆப்டிடுயூட் டெஸ்ட் கீழே.

பத்தே பத்து கேள்விகள்.இதில் ஏழு பதில் சரியாக சொன்னால் நீங்க ஜீனியஸ் என்று அர்த்தம்.
இரண்டாம் முறை திரும்ப விளையாடியதில் எனக்கு எட்டு தேறியது. நானும் ஜீனியஸ் தானே?

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=9579&apt=1

பின்குறிப்பு : நாங்களும் பத்து கேள்வி பதிவு போடுவோம்ல!


வியாழன், 25 ஜூன், 2009

முட்டை சுண்டெலி திருவிழா - ஒரு விக்கிபீடியாவாவது போட வேண்டும்







பழைய தமிழ் சினிமாக்களில் கதாநாயகர்கள் சிங்கம் அல்லது புலியுடன் ஆவேசமாக சண்டையிட்டு அதை வீழ்த்துவார்கள். அவர்களை அழைத்து ஒரு சுண்டெலியை அடிக்கச் சொன்னால் நிச்சயம் திக்கு முக்காடிப் போவார்கள்.

சுண்டெலியை அடிப்பது எளிதான வேலை அல்ல. அது ஒரு கலை.(கொலை எப்படி மன்னா கலையாக முடியும்?). எலிப்பொறி முதல் எலிமருந்து வரை நாம் வைத்த எதிலும் சிக்காமல் எட்ட நின்று பல்லைக் காட்டும்.

பெண்களிடம் தப்பி பிழைத்தவர்கள் கூட வாழ்க்கையில் ஒரு சில நேரங்களில் எலியிடம் மாட்டிக் கொண்டு அவதிப்பட்டிருப்பார்கள். எலிக்கும் எனக்குமான பாரம்பரியமான உறவைப்பற்றி எழுதுவதானால் குறைந்த பட்சம் ஒரு விக்கிபீடியாவாவது போட வேண்டும்.

இப்படி இருக்கப்ப தான் Cyber Mice Party(முட்டை சுண்டெலி திருவிழா?!) -ன்னு ஒரு செம ஜாலியான கேம் பார்த்தேன். கேமின் துவக்கத்தில் ஒரு பாலாடைக்கட்டியும் பத்து முதல் இருபது சுண்டெலிகளும் இருக்கும்.









இந்த கேம்ல உங்க வேலை சுண்டெலிகளை கொல்வது அல்ல!! மாறாக சுண்டெலிகளை காப்பாற்றி பத்திரமாக பாலாடைக்குள் அனுப்ப வேண்டும்.அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள்.

ஒவ்வொரு Level-லயும் அங்கங்கே சில பள்ளங்கள் இருக்கும். பள்ளத்தில் விழுந்தால் அந்த எலி காலி! மேலே படத்தில் உள்ளது போல இடது பக்கம் சில தீக்குச்சிகள், தீப்பெட்டிகள் அல்லது தட்டுகள் இருக்கும். அதை வேகமாக பொருத்தமான இடத்தில் வைத்து சுண்டெலியை காப்பாற்ற வேண்டும்.

Level ஏற ஏற கேம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கிறது. எவ்வளவோ பண்றீங்க . . . இதைப் பண்ண மாட்டீங்களா?

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=1267&cyb=1



ஸ்லம்டாக் மில்லியனர் ஆன்லைன் விளையாட்டும் செம ஹிட் பாஸ்!!!






எட்டு ஆஸ்கார் விருதுகளையும் IMDB யில் 8.5 ரேட்டிங்கையும் வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தைப்பற்றி யார் என்ன வேண்டுமென்றாலும் விமர்சனம் செய்து விட்டு போகட்டும்.

உங்களுக்கு 15 கேள்விகளுக்கு விடை அளிக்க நேரம் இருக்கா? அப்ப கீழே கிளிக்குங்க . . .




லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=9577&cro=1

அமிதாப் பச்சன் நடத்திய குரோர்பதி புரோகிராமில் உள்ள அனைத்து Option களும் பின்னணி இசை உட்பட இந்த கேம்லயும் இருக்கு.

நான் 15 கேள்விகளுக்கும் சரியான விடை அளித்தேன் Google துணையோடு . . . யாரும் சிரிக்க வேணாம்! Google-ல விடை கண்டுபிடிக்கவும் திறமை வேணும் பாஸ்.


செவ்வாய், 23 ஜூன், 2009

நீங்க ஹீரோவா இல்லாட்டி ஜீரோவா? ஒரே ஒரு நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்!






பள்ளியில் படிக்கும் காலத்தில் வகுப்பறையில் நாம் தூங்கி விழும் போது வாத்தியார் நம்மை எழுப்பி விட ஒரு சுவாரஸ்யாமான விளையாட்டை விளையாடுவார். "Up" "Down" என்று மாறி மாறி சொல்வார். நாமும் "Up" சொல்லும் போது எந்திருப்போம். "Down" சொல்லும் போது உட்காருவோம்.

திடீரென்று அவர் இரண்டு முறை "Up" சொல்லும் போது பாதிப் பேர் பழக்கத்தில் டக்கென்று உட்கார்ந்து விடுவோம் அல்லது இரண்டு முறை "Down" சொல்லும் போது டக்கென்று எழுந்து விடுவோம். ஒரு நிமிடத்தில் வகுப்பை உற்சாகமாக்கி விடுவார்.

அதைவிடவும் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமான விளையாட்டு இது.

இந்த கேமின் முதல் Level-ன் பெயர் Complete Idiot!!!!

அடுத்தடுத்த Level-களின் பெயர்கள் Idiot,Dump,Stupid,Average என்ற போக்கில் செல்கிறது.

மேலே படத்தில் உள்ளது போல ஒவ்வொரு Level-லிலும் மூன்று நான்கு கேள்விகள் கேட்கப்படும்.கேள்விக்கு ஏற்ப சரியான பொருளை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.

சதுரத்தை கிளிக் செய்யவும்
எண் 4-ஐ இரண்டு முறை கிளிக் செய்யவும்
சிரிக்கும் முகத்தை கிளிக் செய்யவும்
சிவப்பு பட்டனை கிளிக் செய்ய வேண்டாம்
முக்கோணத்தை உடனடியாக கிளிக் செய்யவும்.

இந்த மாதிரி கேள்விகள் அடுத்தடுத்து வரும். பதிலை சரியாகவும் வேகமாகவும் அளிக்க வேண்டும். நான் Average Level வரைக்கும் எக்கித் தக்கி வந்தேன். அதற்கடுத்து என்ன வரும் என்று தெரியவில்லை. பின்னூட்டத்தில் சொல்லுங்களேன் . . .

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=4638&idi=1


திங்கள், 22 ஜூன், 2009

Prince of Persia-வை ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு?





நாம் எல்லோரும் ஒரு காலத்தில் விளையாண்டு தீர்த்த முதல் பெரிய DOS Adventure கேமான Prince of Persia-வை யாரும் மறந்திருக்க முடியாது.

இந்த கேமோட FLASH version-ஐ இன்று கண்டு பிடித்தேன்.கிராபிக்ஸ் இன்னும் நன்றாக இருந்தது.

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=823&pri=1


கிழவன் பல்லை உடைக்கலாம். நீங்க ரெடியா?




ஏற்கனவே அனிமேஷன் டெவலப்பர்கள் டெவலப் பண்ண வேண்டிய ஒரு கேம்(?!) பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன். அதன் தொடர்ச்சி தான் இதுவும்.





விதவிதமான கிழவர்கள் ஒவ்வொரு Level-லிலும் திறந்த வாயுடன் தோன்றுவார்கள். உங்கள் பேட் கீழே இருக்கும். அதை இடது புறமும் வலது புறமும் மட்டும் Move பண்ணலாம். நீங்கள் அடிக்கும் பந்து கிழவனின் பல்லை உடைத்து விட்டு திரும்பும் போது வேகமாக உங்கள் பேட்டை நகற்றி பந்தைத் தொட வேண்டும்.

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=6325&bre=1

இப்படியே தொடர்ந்து விளையாடி கிழவன் வாயை பொக்க வாய் ஆக்க வேண்டும்.




இதே மாதிரி கருணாநிதிக்கும் கூட ஒரு கேம் உருவாக்கலாம். அது மாசிலாமணியை விட பெரிய ஹிட் ஆக வாய்ப்பிருக்கிறது.கேம் திருட்டு DVD-யில் கூட விற்று தீரும்.


ஞாயிறு, 21 ஜூன், 2009

கோபுரப் புதிர் - உங்கள் புத்திக் கூர்மையை இரண்டு நிமிடத்தில் பரிசோதியுங்கள்






நீங்கள் டிகிரி முடித்தவரானால் Tower of Hanai அல்லது Tower of brahma என்று அழைக்கப்படும் இந்த புதிரை கண்டிப்பாக ஏதாவது ஒரு பரிட்சையில் சந்தித்திருப்பீர்கள். இனிமேல் தான் டிகிரி படிக்கப் போகிறீர்கள் என்றால் இந்தப் பதிவு உங்களுக்கு மிகவும் உபயோகமானது.

கோபுரப் புதிர் விளக்கம் :

படத்தில் உள்ளது போல் மூன்று ராடுகள் இருக்கும். முதல் ராடில் சிறிய தட்டு மேலே இருக்குமாறு தட்டுகள் வரிசையாக கோபுரம் போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.இந்த அனைத்து தட்டுகளையும் இதே மாதிரி மூன்றாவது தட்டுக்கு மாற்ற வேண்டும். இதற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன.

1.ஒரு நேரத்தில் ஒரு தட்டைத்தான் உங்களால் இடம் மாற்ற முடியும்.
2.மேலே இருக்கும் தட்டைத் தான் முதலில் உங்களால் இடம் மாற்ற முடியும்.
3.எப்பொழுதும் சிறிய தட்டின் மீது பெரிய தட்டை உங்களால் வைக்க முடியாது.

கோபுரப் புதிரின் Flash வடிவம் கீழே உள்ளது.
எத்தனை தட்டுகளை வைத்து விளையாட வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்யலாம்.







லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=8835&tow=1

கூடிய வரை குறைந்த Moves -ல் நீங்கள் தீர்வை எட்ட வேண்டும்.


நான் ஐந்து தட்டுகளை ஐம்பத்து மூன்று Moves -ல் இடம் மாற்றினேன். கணக்குப் புலிகள் டிரை பண்ணிட்டு பின்னூட்டம் போடுங்களேன் :)


புட்பால் தெரியும்.ஹெட்பால் தெரியுமா உங்களுக்கு?






காலால் உதைத்து விளையாடும் புட்பால் பற்றி நமக்கு நல்லாவே தெரியும். தலையால் விளையாடும் விளையாட்டு தான் இந்த கேம். டென்னிசை ஒத்த இந்த கேம் ரொம்ப நன்றாக இருக்கும். டிரை பண்ணி பாருங்களேன். 'தல' பத்திரம்!

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=2325&hea=1


விஜய் டாக்டர் விஜய் ஆனது இப்படித் தானாம்! அடப்பாவிகளா






பழைய தளபதி . . .ச்சீ இளைய தளபதி விஜய்க்கு எப்படி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதுன்னு நாட்டில் பல பேருக்கு பல சந்தேகங்கள் இருக்குது. இது சம்பந்தமா பல வதந்திகளும் நெட்டில் உலா வருது. அதுல ஒன்னு தான் இந்த பதிவு.

விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுக்கும் முன் இரண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் பாஸ் பண்ண பிறகு தான் அவருக்கு முறையாக டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அந்த தேர்வுகள் கீழே.

தேர்வு 1 :




உங்கள் கையில் இருக்கும் ஆயுதத்தை வைத்துக் கொண்டு ஒவ்வொரு சொத்தைப் பல்லாக பார்த்து பிடுங்க வேண்டும்.

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=7502&doc=1

தேர்வு 2 :



முகத்தில் உள்ள ஒவ்வொரு பருவையும் மவுசினால் கிளிக்கி குணப்படுத்த வேண்டும். உங்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் நேரம் 99 வினாடிகள்.

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=749&doc=1

அப்புறம் இந்த பதிவில் மருத்துவர் ராமதாஸை பற்றி எந்த உள்குத்தும் இல்லை.


வெள்ளி, 19 ஜூன், 2009

எந்திரன் கிராபிக்ஸ் காட்சிகள் கசிந்தது







சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சூப்பர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் விளம்பரதாரர்கள் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவரப் போகும் எந்திரன் படத்தில் இரண்டு கிராபிக்ஸ் காட்சிகள் லீக் ஆகி உள்ளன(?!). காட்சிகளின் முன்னோட்டம் கீழே

காட்சி1 :




ரஜினி : வாங்க பழகலாம்.

ஐஸ் : இல்லை . . . அது சரியா வராது! சொன்னா வருத்தப் படுவீங்க

ரஜினி : ஹே ஏன்? என்ன காரணம்னாலும் எங்கிட்ட மறைக்காம சொல்லு.

ஐஸ் : உங்க கையை நீட்டுங்க

(ரஜினி கையை நீட்டுகிறார். ஐஸ்வர்யா ராயும் தன் கையை நீட்டுகிறார் . அந்தக் கை இரும்புக் கை! ஐஸ் ஒரு ரோபோ)

ஐஸ் : எங்கேயாவது பொருந்துதா பாருங்க

ரஜினி ஷாக்காகி இன்னும் ஒரு வாரத்தில் நானும் ரோபோவாக மாறி வருவேன் என்று சவால் செய்து விட்டு செல்கிறார். தன் கையில் இருக்கும் ஒரு ரூபாயால் இந்தியாவிலுள்ள அனைத்து பழைய இரும்பு கடைகளையும் விலைக்கு வாங்குகிறார். அதன் பின் மேல்காணும் ரோபோவை வடிவமைக்கிறார்.

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=3145&rob=1

காட்சி 2: (கிளைமாக்ஸ்)



ஸ்பேஸ் ஷிப்பில் ஒளிந்திருக்கும் வில்லனை தீர்த்துக்கட்ட ரஜினி தனியாளாக செல்கிறார். அங்கு ரஜினியை நேரம் பார்த்து சுற்றி வளைக்கிறார்கள். அடியாட்களில் ஒருவர் ரஜினியை நோக்கி வருகிறார்.

அடியாள் : முட்டாள் தனமா தனியா வந்து மாட்டிகிட்டியேடா?

ரஜினி : கண்ணா! மனுஷங்க தான் கூட்டமா வருவாங்க. ரோபோ சிங்கிளா தான் வரும்.

அதன் பிறகு நட்ட நடு வானில் எந்த உலக சினிமாவிலும் இல்லாத அளவுக்கு
புதுமையான சண்டைக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ரஜினி தன்னை நோக்கி வரும் வில்லன்களை லேசர் கன் வைத்து டுப் டுப்பென்று சுடுகிறார். லேசர் கன்னில் புல்லட்(?!) தீர்ந்த பிறகு மீதமிருப்பவர்களை பஞ்ச் டையலாக் பேசியே சாவடிக்கிறார்.

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=79&rob=1


வியாழன், 18 ஜூன், 2009

இந்தியன் புரூஸ்லீ தனுஷின் குறும்படம்



இரண்டு அட்டகாசமான குறும்படங்கள் உங்கள் பார்வைக்கு.

இந்த குச்சி மனிதர்கள் தமிழ் சினிமா கதாநாயகர்களுக்கு சவால் விடும் அளவுக்கு ஆக்சனில் பட்டையை கிளப்புகிறார்கள்.

சன் பிக்சர்ஸ் இது மாதிரி படங்களையாவது புரொமோட் செய்யலாம். தமிழ் மக்கள் பிழைப்பார்கள்.

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=4594&dha=1




லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=4593&dha=1

செவ்வாய், 16 ஜூன், 2009

வேகமாக டைப் பண்ணுங்க. இல்லாட்டி பேய்கிட்ட பிடிச்சு கொடுத்துருவேன்!





உலகத்திலேயே ரொம்ப போரடிக்கிற விஷயம் எதுவென்று என்னிடம் கேட்டால் கண்டிப்பாக டைப்பிங் கிளாஸ் போவது தான் என்பேன்.

படிக்கட்டு போல் இருக்கும் டைப்பிங் மிஷின் கீபோர்டில் நொட்டு நொட்டுன்னு டைப் பண்றது கால கொடுமை சார்.

ஆனால் நம்மோட டைப்பிங் வேகத்தை அதிகரிப்பதிற்கு நல்ல கேம்கள் உள்ளன. அதில் கொஞ்சம் வித்தியாசமான(!) கேம் இது.

ஸ்கிரீனில் தெரியும் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலேயும் ஒரு குட்டி பிசாசு ஒளிந்திருக்கும். ஒவ்வொரு செகண்டும் அந்த குட்டி பிசாசு வளர்ந்து கொண்டே வரும். அது முழுதும் வளரும் முன் நீங்கள் அந்த வார்த்தையை டைப் பண்ணிவிட வேண்டும்.

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=8904&gho=1


உலகத்திலேயே மிகவும் கடினமான அதே நேரம் சுலபமான புதிர்?





மிகவும் எளிமையானதைப் போன்று தோற்றமளிக்கும் இந்த புதிரை நீங்கள் Solve செய்யும் போது நிச்சயம் உங்கள் மூளை குழம்ப போவது நிச்சயம்.

முதல் படத்தில் ஏழு கற்களும் அதன் மேல் இடது பக்கம் மூன்று பச்சை தவளைகளும் வலது பக்கம் மூன்று பிரவுன் தவளைகளும் உள்ளன.

இடது பக்கம் உள்ள தவளைகளை வலது புறமும் வலது பக்கம் உள்ள தவளைகளை இடது புறமும் இரண்டாவது படத்தில் உள்ளதைப் போல மாற்ற வேண்டும்.

ஒரு நேரத்தில் ஒரு தவளையால் ஒரு கல் அல்லது இரண்டு கல் மட்டுமே தாண்ட முடியும். தவளையால் ரிவர்ஸில் தவ்வ முடியாது என்பது இன்னொரு ஆப்பு.

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=1204&fro=1

அரை நிமிடத்தில் தீர்க்க முடிகிற இந்த சீனப் புதிரை கண்டுபிடிக்க எனக்கு முழுதாக முக்கால் மணிநேரம் ஆயிற்று. உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆயிற்று என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

விடையை கண்டுபிடிக்காமல் கண்டுபிடித்து விட்டேன் என்று பொய் சொன்னவர்கள் அடுத்த ஜென்மத்தில் தவளைகளாக பிறப்பார்களாக . . .

குடிகாரனின் ஒட்ட பந்தயம்





ரொம்ப வித்தியாசமான பொழுதுபோக்கு கேம் இது.

மேலே படத்தில் உள்ள தள்ளாடும் குடிகாரனை இருபக்கமும் கீழே விழாமல் இருபுறமும் மவுஸை மாற்றி மாற்றி கிளிக் செய்து அவனை அதிக தூரம் ஓடச்செய்ய வேண்டும்.

அதிக தூரம் ஓட வைப்பவர்களுக்கு ஒரு குவார்ட்டர் பரிசளிக்கப்படும் அவரவர் சொந்த செலவில் . . .

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=9346&dru=1

இன்னும் நிறைய http://www.6to60.com/


திங்கள், 15 ஜூன், 2009

காதலிக்கு உடை அணிவிப்பது வெளிநாடுகளில் இவ்வளவு பிரபலமாஆஆஆஆ?


பொதுவாக ரேஸ் வகை கேம்கள் தான் உலகில் அதிக அளவில் விளையாடப்படும் கேம்கள் என்று எனக்கொரு அபிப்பிராயம் இருந்து வந்தது.

என்னோட அபிப்பிராயத்தை ஆர்குட் அன்பர் ஒருத்தர்கிட்ட சொன்ன போது அவர் அதை முற்றிலுமாக மறுத்ததுடன் டிரஸ்-அப் கேம்கள் தான் மிகவும் அதிகம் விளையாடப் படுகிறது என அடித்துச் சொன்னார்.

அவர் சொன்னதை சோதனை செய்யலாம்னு 6to60.com-இல் வந்து dress-ன்னு டைப் பண்ணி தேடினேன்.இந்த வெப்சைட்ல பக்கம் பக்கமாக நீண்ட லிஸ்ட்டை பார்த்து சத்தியமாக அதிர்ந்து தான் போனேன்.

இந்த வகை விளையாட்டுகளோட கான்செப்ட் உண்மையில் ரொம்பவே சின்னது.அழகான பெண் சிலை ஒன்று நடுவே நிற்க இரண்டு புறமும் பல வகையான ஆடைகள்,நகைகள்,சூ,ஹாண்ட் பேக்,தலைமுடி செட்(!) என குவிந்து கிடக்கும். உங்களுக்கு பிடித்ததை பெண் சிலைக்கு அணிவித்து நீங்கள் அழகு பார்க்கலாம்.



லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=1690&dre=1

இது பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட கேம் என்றாலும் இதை விளையாட அதிக ஆர்வம் காட்டுவது என்னமோ ஆண்கள் தான் :)


இன்னும் கொஞ்சம் ஓவராக சில கேம்களில் ஒரு பெண்ணுக்கு பதில் பல ஜோடிகள் இருப்பார்கள். அதில் ஒரு ஜோடியை முதலில் செலக்ட் செய்து பின் அந்த ஜோடி நம்பர் 1 க்கு நீங்கள் காஸ்ட்யூம் டிசைன் பண்ணலாம்.

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=1474&dre=1




மற்றும் சில கேம்களில் சர்பிரைசாக சில ஹாலிவுட் பிரபலங்கள் பங்குபெறுவார்கள்.மேலே இருப்பவர் ஹாலிவுட் நடிகை கேமரூன் டயஸ்.இவரை ஞாபகம் இருக்கிறதா? ஜிம் கேரி நடித்த The Mask என்ற படம் தமிழ்நாட்டிலும் சக்கை போடு போட்டதே. அந்த பட ஹீரோயினி தான். இவரைப் போல ஹாலிவுட் பிரபலங்கள் டிரஸ்-அப் விளையாட்டுகளில் உலா வருகிறார்கள்.

http://www.6to60.com/playgame.php?id=1622&dre=1


என்னது நமீதா டிரஸ்-அப் கேம் வேணுமா? ஆள விடுங்க சார் . . .


நான் கோழி இல்லை!




ஒரு சின்ன அக்பர் பீர்பால்-கதை . . .

ஒரு முறை அக்பர் பீர்பாலை முட்டாளாக்கி அழகு பார்க்க வேண்டுமென்று ஆசைப் பட்டார். அதற்காக பிரமாதமாக திட்டம் ஒன்றும் போட்டார்.

பீர்பால் அவைக்கு வருவதற்கு முன்னால் ஒவ்வொரு அமைச்சரையும் அழைத்து அவர்களுக்கு ஒவ்வொரு முட்டை கொடுத்தார்.

பின்னர் பீர்பால் அவைக்கு வந்த பின் ஒன்றுமே நடவாதது போல் எல்லா அமைச்சர்களையும் அக்பர் அழைத்தார். தான் நேற்று இரவு ஒரு கனவு கண்டதாகவும் அதன் படி அரசவைத் தோட்டத்தில் இருந்து தலா ஒரு முட்டையை கண்டெடுக்கும் அமைச்சர்கள் மட்டுமே நேர்மையான அமைச்சர்கள் எனவும் கூறினார்.

உடனே ஒவ்வொரு அமைச்சராக தோட்டத்திற்குள் சென்று தாங்கள் ஏற்கனவே கையில் ஒளித்து வைத்திருந்த முட்டையுடன் திரும்பினர்.

கடைசியாக வந்தது பீர்பாலின் முறை.

பீர்பால் தோட்டத்திற்குள் சென்று தேடிய போது ஒன்றும் அகப்படவில்லை. பீர்பால் இது அக்பரின் சூழ்ச்சியாக இருக்குமென்று யூகித்தார்.

உடனே அவர் ஒரு சேவலைப் போல குரல் கொடுத்துக் கொண்டே அரசவைக்கு வந்தார். அக்பர் அந்த குரலை கேட்க சகிக்காமல் சத்தம் போடுவதை நிறுத்தி விட்டு முட்டையை கொடுங்கள் என்று கூறினார்.

அதற்கு பீர்பால் புன்னகையோடு பதில் சொன்னார் : "நான் ஒரு சேவலாக இருக்கின்ற காரணத்தினால் என்னால் முட்டை போட முடியவில்லை"

பீர்பாலை அவ்வளவு எளிதில் முட்டாளாக்கி விட முடியாது என்பதை அக்பர் உணர்ந்தார்.

--------------------------------------------------------------------------------------------

பழைய கதை தான். ஆனால் என்று படித்தாலும் சிரிப்பை வரவழைக்கக் கூடியது.

நெட்டில் சுட்ட இடம் : 6to60.com

அக்பர் பீர்பால் கதைகள், தெனாலி ராமன் கதைகள், ஈசாப் கதைகள்,ஜென் கதைகள் மற்றும் பல கதைகளின் மொத்த தொகுப்புக்கு கீழே கிளிக்கவும்.

லிங்க் : http://www.6to60.com/story.php?sto=1

ஞாயிறு, 14 ஜூன், 2009

இளம்பெண் கண்ட கனவின் அர்த்தம்


ஒரு காதலர் தினத்தன்று மதிய நேரத்தில் மனைவி ஒரு கனவு கண்டாள். அதனை தன் கணவனிடமும் சொன்னாள் - "நீ எனக்கு ஒரு நெக்லஸ் பரிசளிப்பதாக கனவு கண்டேன். அதற்கு என்ன அர்த்தம்?".

கணவன் புன்னகையுடன் பதில் சொன்னான் - "இன்று இரவு அர்த்தம் தெரிந்து கொள்வாய்"

அன்று இரவு கையில் சின்ன கிப்ட்பேக்கோடு கணவன் திரும்பி வந்தான். மனைவி ஆவலுடன் அந்த கிப்டை பிரித்தாள். அதில் நெக்லசுக்கு பதில் ஒரு புத்தகம் இருந்தது. அது "பகலில் கண்ட கனவுக்கான பலன்கள்"

--------------------------------------------------------------------------------------

ஒரு தத்துவம்

கேள்வி : திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றதென்றால்,நரகத்தில் நிச்சயிக்கப்படுவது எது?

பதில் : திருமணத்திற்கு பிறகு வரும் நாட்கள்

--------------------------------------------------------------------------------------

இந்த இரண்டு ஜோக்கும் 6to60 யில் இருந்து சுட்டது. மொழிபெயர்ப்பு மட்டும் அடியேனுடையது.

இந்த மாதிரி எக்கச்சக்க ஜோக்குகள் இங்கிலீசில் குவிந்து கிடக்கிறது 6to60 யில்.

மொத்த ஜோக்குகளின் தொகுப்பு : http://www.6to60.com/jokehome.php?jok=1


மாஸ் ஹீரோக்களின் புது கெட்டப்

ஹாலிவுட்டில் நடிகர்கள் அனிமேஷன் படங்களில் நடிப்பதும் வீடியோ கேம்களில் ஒரு Role ஆக வருவதும் சர்வ சாதாரணம்.

அது போல சில Flash game-கள் விளையாடும் போது அவை நம்மோட மாஸ் ஹீரோக்களுக்கு பொருத்தமாக இருந்தது போல பீல் பண்ணேன். அந்த கேம்கள் கீழே :





இந்த கேமில் வரும் குச்சி மனிதனாக தனுஷ் வரலாம்.பொடியனா இருந்தாலும் அவர் இடி மாதிரி அடிப்பார் . என்ன ஒரே ஒரு வித்தியாசம் . . . நம்ம தனுஷ் இந்த குச்சி மனிதனை விட ஒரு இன்ச் கலர் கூட!

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=5654&mas=1



இந்த கேமில் நினைத்த படி எல்லாம் கெட்டப்பை மாற்றலாம். அதனால் இது விக்ரம் அல்லது கமலுக்கு சூட்டாகும்னு நினைக்கிறேன்.

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=7280&mas=1



இந்த கேமில் Dance பட்டனை கிளிக்கினால் இந்த கழுதை டான்ஸ் ஆடாமல் ஜிம்னாஸ்டிக் எல்லாம் செய்கிறது.அதனால் இது கன்பார்மா சிம்பு தான்.சிம்பு எப்ப மாஸ் ஹீரோ ஆனார்னு எங்கிட்ட கிராஸ் கொஸ்டினெல்லாம் நீங்க கேட்க கூடாது!

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=4930&mas=1



இந்த கேமை நீங்க கண்டிப்பா பார்த்தே ஆகனும். இந்த வினோத ஜீவராசியின் ஒவ்வொரு expression-ஐயும் பார்த்தால் டி.ஆர்,விஜயகாந்த்,J.K.ரித்தீஸ்(நாயகன் புகழ்?!) என பல பேர் முகம் ஞாபகத்துக்கு வருவதால் இதை உங்கள் சாய்ஸ்க்கே விடுகிறேன். பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=8696&mas=1


சனி, 13 ஜூன், 2009

தேவதை அல்லது மீன் - இரண்டில் எதை காப்பாற்ற போகிறீர்கள்?


இரண்டு அட்டகாசமான Game-களை உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகிறேன்.

இந்த இரண்டு கேம்கள் விளையாட மவுஸ் மட்டுமே போதுமானது. ஓகேவா?

முதலாவது கேமில் ஒரு தேவதையும் ஒன்று முதல் மூன்று குட்டி சாத்தான்களும் வருவார்கள். குட்டி சாத்தான்கள் வேகமாக தேவதையை முட்ட வருவார்கள் அல்லது நெருப்பை கக்குவார்கள்.

மவுஸை வேகமாக மூவ் பண்ணி அவர்களிடமிருந்து தேவதையை காப்பாற்றுவது தான் உங்கள் வேலையே! தேவதையை "கேர்புல்லா ஹாண்டில்" பண்ணுங்க சார். பெண்பாவம் பொல்லாதது.

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=445&ang=1




அப்புறம் இரண்டாவது கேமில் கண்ணாடித் தொட்டியில் இருந்து ஒவ்வொரு தங்க மீனாக எடுத்து அடுப்பில் போடுவார்கள். உடனே நீங்கள் அதை உங்கள் மவுஸினால் கேட்ச் பண்ணி அதை பழைய படி தொட்டிக்குள் போட வேண்டும். கொஞ்சம் மிஸ்ஸானால் மீன் கருகி மேலே படத்தில் உள்ளதைப் போல் ஆவி ஆகி விடும்.

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=772&ang=1


இன்னும் நிறைய

http://www.6to60.com/



மனைவி மேல் கோபப்பட்டு பொம்மைக்கத்தி தூக்குவோர் சங்கம்



உங்க Concentration Power-ஐ வளர்க்க மிக அருமையான கேம் இது.

சதா சுற்றிக் கொண்டே இருக்கும் மேஜை மீது இருக்கும் நான்கு டார்கெட் புள்ளிகள் மேல் உங்கள் கத்தியை குறி பார்த்து எறிய வேண்டும்.

இது எளிதான வேலை அல்ல.

நான் ஒரு மணி நேரம் விளையாடி டார்கெட்டைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் குறி தவறாமல்(?!) அடித்தேன்.

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=467&kni=1

இந்த கேமை இன்னொரு வகையாக விளையாடலாம்.

உங்கள் மனைவி மீது கோபம் வரும்போது அந்தப் பெண்ணை உங்கள் மனைவியாக கற்பனை செய்து கொண்டு குறி பார்த்து எறியலாம்.

பின்விளைவாக பூரிக்கட்டை எதுவும் உங்கள் தலை மீது விழுந்தால் கம்பெனி பொறுப்பாகாது.

குரு . . . அம்பானி மற்றும் "கவனம்"



மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடித்த குரு திரைப்படத்தில் பிரமாதமான காட்சி ஒன்று பட துவக்கத்தில் வரும்.

சிறு வயது அபிஷேக் பச்சன் Turkey-யில் ஒரு வெள்ளைக்காரன் நடத்தும் சூதாட்டம் ஒன்றில் கலந்து கொள்வார்.

வெள்ளைக்காரன் மூன்று கிண்ணங்கள் மற்றும் பந்துகள் வைத்திருப்பான். அதில் ஒரு கிண்ணத்தின் அடியில் பந்துகளை வைத்து விட்டு அசுர வேகமாக மூன்று கிண்ணங்களையும் சுற்றி சுற்றி இடம் மாற்றுவான்.

கடைசியில் எந்த கிண்ணம் என்று கேட்கும் போது ஒவ்வொரு முறையும் சிறுவன் சரியான கிண்ணத்தையே சொல்வான்!!

கடைசியில் ஆட்டம் முடிந்து கை நிறைய பணத்துடன் திரும்பும் போது கூட இருப்பவர் இது எப்படி சாத்தியப்பட்டது என ஆச்சரியமாக கேட்க "கவனம்" என்று பதில் வரும்.

இந்த Observation Power இருந்ததனால் தான் அம்பானி ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவானார்.

உங்களின் Observation Power எவ்வளவு என தெரிந்து கொள்ள கீழே உள்ள கேமை முயற்சி பண்ணி பாருங்கள்.

All the best




லிங்க் : Play now

மேலும் நிறைய

http://www.6to60.com/

வெள்ளி, 12 ஜூன், 2009

தல அஜீத்துக்கு இந்த ரேஸ் தெரியுமா?



19 வயதில் தொடங்கிய அஜீத்தின் கார் ரேஸ் பயணம் பற்றி அஜீத் ரசிகர்கள் எல்லோருக்கும் தெரியும்.

F3 race-க்காக UK வரை சென்று கலக்கியவர் நம்ம தல!

அஜீத்துக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத இரண்டு ரேஸ்கள்(?!) கீழே . . .

Action Driving



http://www.6to60.com/playgame.php?id=5848


Mercedes Drift



http://www.6to60.com/playgame.php?id=9569


இன்னும் நிறைய

http://www.6to60.com/

வியாழன், 11 ஜூன், 2009

ஜார்ஜ் புஷ் மேல கோபமா? இங்க வாங்க பாஸ்!

நீங்க flash game பிரியரா?

Office timeல கேம் விளையாடி உங்க அதிர்ஷ்டத்தையும் பக்கத்தில் இருப்பவரோட பொறுமையையும் சோதிக்கிற ஆளா நீங்க?

அப்ப உங்களுக்காகத் தான் இந்த பிளாக்.

நான்கு மாதத்துக்கு முன்னால் விகடன் கொடுத்த அறிமுகத்தால 6to60யில விளையாடுற பழக்கம் ஆரம்பமாச்சு.

பலதரப்பட்ட கேம்ஸை ஒரே இடத்தில் தொகுத்து தருவதில் 6to60 ஒரு நடப்பு சாம்பியன்.

என்னோட நேரத்திற்கு வில்லனாக இருக்கும் சில கேம்கள் கீழே . . .

Dancing Bush



இன்றைய அமெரிக்காவின் பொருளாதர வீழ்ச்சிக்கு காரணமான புஷ் மீது கோபப்பட்ட ஒரு டெவலப்பர் செய்த வேலை இது. நீங்களும் கூட விளையாடலாமே

http://www.6to60.com/playgame.php?id=4239

Spinning Bubbles


Tetrix என்ற பெயரில் நாம் விளையாண்ட பள்ளி பருவத்து வீடியோ கேமின் அழகான பதிப்பு தான் இந்த கேம்.

http://www.6to60.com/playgame.php?id=9556


Bash the Computer



ஓவராக stress ஆன சாப்ட்வேர் சிகாமணிகள் கம்ப்யூட்டரை உடைக்கும் வீடியோஸ் youtube-ல பார்த்திருப்பீங்க. உங்களுக்கும் stress ஆனா இந்த கேம் விளையாடுங்கள்

http://www.6to60.com/playgame.php?id=615



இன்னும் நிறைய விளையாட

http://www.6to60.com/