செவ்வாய், 8 ஜூன், 2010

English - வார்த்தை வளம் வளர்க்க . . .






ஒரு மொழியை நாம் சரளமாக பேசும் திறமை, அந்த மொழியில் நாம் தெரிந்து வைத்திருக்கும் மற்றும் தினசரி உபயோகப்படுத்தும் வார்த்தைகளின் எண்ணிக்கையை பொறுத்தது.

English கிளாஸ் போனீங்கன்னா Vocabulary power என்று சொல்வார்கள். அதாவது வார்த்தை வளம். English வார்த்தைகளை நினைவு கொள்ள உதவும் பல விளையாட்டுகளில் ஒரு தனித்துவமான விளையாட்டு தான் இந்த Wordz.


திரையில் சில அர்த்தமற்ற வார்த்தைகள் இருக்கும். அந்த வார்த்தைகளில் இருக்கும் வெள்ளை நிற எழுத்துகளை மட்டும் கவனியுங்கள். அந்த எழுத்துகளை மட்டும் நீங்கள் இடம் மாற்ற முடியும்.

இரண்டு வெள்ளை நிற எழுத்துகளை மவுஸால் கிளிக்கும் போது அவை இரண்டும் மாறிக்கொள்ளும். இவ்வாறு எழுத்துகளை இடம்மாற்றி அர்த்தமுள்ள வார்த்தைகளை உருவாக்க வேண்டும்.

அடுத்தடுத்த Level-களில் அதிகமான வெள்ளை நிற எழுத்துகள் தோன்றி நமக்கு சவால் விடுகின்றன. நிறைய words தெரிந்து கொள்ள உதவுகிறது இந்த Wordz.

லின்க் : http://www.6to60.com/games/1224-Wordz.html

திங்கள், 7 ஜூன், 2010

ப்ளீஸ்! என்னை கொஞ்சம் காப்பாத்துங்களேன் : சிக்கன்



எப்படி இருந்த நான் . . .



இப்படி ஆயிட்டேன்!




இன்னிக்கு தேதி வரைக்கும் நாம் தின்று தீர்த்த கிலோ கணக்கான சிக்கன்களுக்கு ஒரு சின்ன பிராயச்சித்தம் செய்யலாம்.

Rescue a Chicken அப்படீங்கிற பெயரிலேயே ஒரு விளையாட்டு இருக்கு.



ஒரு ஊரில் ஒரு கோழி இருக்கிறது. அந்த கோழிக்கு ஒரு பிள்ளை இருக்கிறது. இல்லை இல்லை . . . மூன்று பிள்ளைகள் இருக்கின்றன. மூன்று பேருக்கும் உயரம்னாலே பயம்.

இந்த மூன்று கோழிகளும் ஏதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்திருக்கும். அதை சரியாக கூட்டுக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்ப்பது தான் நம் வேலை.

அங்கங்கே இருக்கும் மஞ்சள் நிற வைக்கோல்களை கிளிக்கினால் அவை மறைந்து போகும். வேறு எந்த பொருளையும் நம்மால் எதுவும் செய்ய முடியாது. இதை விளையாட மவுஸே போதுமானது.

கதை தான் சிறுபிள்ளைத்தனமானது. ஆனால் விளையாட்டு அவ்வளவு சுலபமல்ல.

மொத்தம் 42 Level-கள். எல்லாமே வித விதமான இயற்பியல் புதிர்கள். விளையாடி முடிப்பதற்குள் "கோழியே சமைக்க வேணாம்!" என கத்தத் தான் போகிறீர்கள்.

லின்க் : http://www.6to60.com/games/9701-Rescue%20a%20Chicken.html