ஞாயிறு, 31 ஜனவரி, 2010

பருவை வைத்து ஒரு கேம் ஆ - அடடே !!!!


அட என்னைய விடுங்க, அட அவன விடுங்க, சொல்றேன்ல அவள் கூட விட்டுவிடுங்க... மொத்ததில சின்ன வாண்டுல இருந்து குமரி வரை (சாரி கிழவிகளா) :-( எல்லோரும் கண்ணாடி முன்னாடி மணிக்கண்க்கா பருவை கிள்ளி வீட்டுல நம்ம செல்ல அம்மா கிட்ட திட்டு வாங்கி இருக்கோம்.

யாரு திட்டுனாலும் நம்ம அந்த பழக்கத்த விட போறது இல்ல... ஆனா அம்மா பாக்குறதுக்குள்ள எப்படி பருவை கிள்ளி escape ஆகுறது :-(...

கவலைபடவேண்டாம் அதற்காகத்தான் இந்த அற்புத கேம்னு சொல்றேங்கிறேன் :-)..

களத்துல சீக்கிரம் இறங்கி ஒரு கை பாருங்க.

லின்க்: http://www.6to60.com/games/749-Acne%20Be%20Gone.html

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை!!!! - ஆனா பாருங்க கண் பார்வை முக்கியங்கோ :-)


அனைத்து வயதினரும தங்களது பார்வையை சரி பார்க்கும் அருமையான வினோத கேம்ங்கோ....

குறிப்பு: நல்லா பாட்டு கேட்டு கிட்டே கேம் ENJOY பண்ணூங்க....

வேக மாக சீறி பாயும் Character-a சும்மா பத்து நாள் சாப்பிடாம கிடந்து சோறு பாத்தா எப்படி சாப்பிடுவோமோ அத விட வேகமா டைப் பண்ணுங்கோ!!! அதுக்குப்பிறகு தெரியும் உங்க வண்ட வாலம் :-)

லின்க் : http://www.6to60.com/games/470-Type%20Type%20Revolution.html

சனி, 30 ஜனவரி, 2010

மேரியோவுக்கே Spoof-ஆ?? -கெட்ட பசங்க சார் இவங்க



ஹாலிவுட் பெரிய பட்ஜெட் படங்களை துவைத்து காயப் போடும் Spoof படங்கள் ரொம்ப நாளாக நடக்கிற விஷயம் தான். இப்போது தமிழ் படம் என்று ஒரு படம் இங்கேயும் வந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.ஆனால் ஒரு குழந்தைகள் கேமுக்கு கூடவா Spoof போடுவார்கள்.முடியல.

நம்மில் பலர் Joystick பட்டன் உடைந்து வெளிவரும் வரை விளையாண்டு தீர்த்த Mario கேமை மறக்கவே முடியாது. இது வரைக்கும் எத்தனை வகையான Mario கேம்ஸ் வந்திருக்கிறது என்று கணக்கு வழக்கே கிடையாது. இன்று தற்செயலாக Mario விற்கே Spoof ஆன ஒரு கேம் பார்த்தேன். அரை நிமடம் தான் ஆனாலும் கண்ணைக் கட்டுது. ஒரு முறை பார்த்து விடுங்கள்.

இது ஒரு வேளை 18+ ஆகவும் இருக்கலாம்(?!). ஜாக்கிரதை.

லிங்க் : http://www.6to60.com/games/373-Mario%20Bloopers.html



எண் விளையாட்டுகளும் நம் புதிர் அவிழ்க்கும் திறமையும்



சில நேரங்களில் ஓவராக போரடிக்கும் போது நம் மனதையும் அறிவையும் ஆரோக்கியமான அதே சமயம் விறுவிறுப்பான ஒரு விஷயத்தை நோக்கி திசை திருப்புவது ரொம்ப முக்கியம். இல்லையேல் வாழ்கையில் தொய்வோ அல்லது மன அழுத்தமோ உண்டாக வாய்ப்பிருக்கிறது.

பள்ளிக்காலங்களில் சுவாரஸ்யமாக விளையாடி மகிழ்ந்த எண் விளையாட்டுகளை பதின்ம வயதுகளிலேயே மறந்து போய்விடுகிறோம். எந்த வயதிலும் எண் விளையாட்டு விளையாடுவது நம்மை சுறுசுறுப்புக்குள்ளாக்கும் விஷயமே.அந்த வகையில் ஒரு நல்ல எண் விளையாட்டு கீழே.



தொடக்கத்தில் 1 முதல் 15 வரையிலான எண்கள் மாற்றி மாற்றி அடுக்கப்பட்டிருக்கும். இது தவிர ஒரே ஒரு எண்ணுக்கான இடம் மட்டும் காலியாக இருக்கும். இந்த காலி இடத்தைப் பயன்படுத்தி எண்களை இடம் மாற்றி எண்களை 1 முதல் 15 வரை வரிசையாக அடுக்க வேண்டும்.



இந்த கேமை அதிர்ஷ்ட அடிப்படையில் குருட்டாம்போக்காக விளையாட முடியாது. அப்படி விளையாடினால் கடைசி Step-ல் வந்து முழிக்க வேண்டி வரும்.நான் முழித்த மாதிரி! அப்புறம் கேம் விளையாடும் போது வலது பக்கம் Moves எண்ணிக்கை காண்பிக்கப் படுகிறது. அதை வைத்து எவ்வளவு குறைவான Moves- ல் கேமை முடிக்கிறீர்கள் என நீங்கள் உங்கள் திறமையை எடை போடலாம்.

லிங்க்: http://www.6to60.com/games/1178-Absolutis%20Puzzle%2002.html

புத்திசாலி கிராமத்துக்காரன்களை கொல்லுங்கள் - Pillage the Village



பில்லாவில் ஒரு வசனம்."நாம வாழனும்னா யாரை வேணும்னாலும் எத்தனை பேரை வேணும்னாலும் கொல்லலாம்".இந்த தீம் வச்சு உருவான ஒரு அதகளமான கேம் தான் Pillage the Village.


ஒவ்வொரு Level லையும் ஒவ்வொரு கிராமம் வருது.அதில் ஒளிஞ்சு பதுங்கி இருக்கிற ஆட்களை அப்படியே அலேக்காகத் தூக்கி(Mouse-ஆல் Drag செய்யவும்) உயரத்தில் இருந்து விட வேண்டும்.ஆள் காலியானவுடன் கீழே விழும் தங்க காயின்களை பொறுக்கி கொள்ள வேண்டும்.கொஞ்சம் தாமதித்தால் ஆள் ஓடி விடுவான் அப்புறம் நீங்க காலி.


இப்படியாக கிராமத்தில் ஒருவர் விடாமல் காலி செய்ய வேண்டும்.Level-ஏற ஏற கிராமத்தான்கள் சில புத்திசாலித்தனமான விளையாட்டுகளைச் செய்து உங்களிடமிருந்து தப்பிக்க முயற்சிப்பார்கள்.

லிங்க் : http://www.6to60.com/games/9519-Pillage%20The%20Village.html

சனி, 23 ஜனவரி, 2010

உங்கள் கண்ணையும் கவனக்கூர்மையையும் பரிசோதிக்க . . .





கேள்வி கேட்டால் பதில் கண்டுபிடிப்பது நடைமுறை. ஆனால் கேள்வி கேட்காமல் பதிலை சொல்லிவிட்டு பதிலை கண்டுபிடிக்கச் சொன்னால்? அப்படி ஒரு வித்தியாசமான கேம் தான் இந்த Tv Game Show.

ஒரு பதில் வார்த்தை இடது பக்கத்தில் சொல்லப்படும். அதை வலது புறம் கொடுக்கப்பட்ட எழுத்துக் கலவையில் உடனே அடையாளம் கண்டு அதை மவுஸால் select பண்ண வேண்டும். நேரம் கூட கூட Cash counter-ல் டாலர்கள் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது.வார்த்தையை கண்டுபிடிப்பதை விட அதை எவ்வளவு சீக்கிரத்தில் கண்டுபிடிக்கிறோம் என்பதில் தான் நம் திறமை அடங்கியிருக்கிறது.


லிங்க் : http://www.6to60.com/games/1907-Tv%20Game%20Show.html

நோட்டுப்புத்தகத்தால் ஆன ஒரு வித்தியாசமான விளையாட்டு



சிறு வயதுகளில் பள்ளிக்கு கொண்டுசெல்லும் நோட்,புத்தகங்களை வைத்து எவ்வளோவோ விளையாண்டிருப்போம். கொஞ்சம் கிரிடிவிட்டி மிஞ்சிப் போய் முழுக்க முழுக்க நோட் புத்தகத்தில் உருவான ஒரு Adventure game தான் DOODLE.

நோட்டுப் புத்தகத்தில் குறுக்கும் நெடுக்குமாக போடப்பட்ட கோடுகளில் ஏறி நோட்டில் கொடி வரையப்பட்ட இடத்தை அடைய வேண்டும். நடுவில் எதிரிகள் வந்தால் ஸ்பேஸ் பாரை தட்டினால் போதும்.உடனே ஒரு ரப்பர் வந்து எதிரிகளை அழிக்கிறது(?!).



கேம் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவை உணர்வுடனும் உருவாக்கப் பட்டுள்ளது.

லிங்க் : http://www.6to60.com/games/173-Doodle.html

செவ்வாய், 19 ஜனவரி, 2010

டிராபிக்கில் வண்டி ஓட்டுவது எப்படி? ஒரு பாட விளையாட்டு





பெரு நகரங்களில் கார் ஓட்டுவது பேய் ஓட்டுவதை விட கஷ்டமான காரியம் என்பது ஓட்டிப் பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.ஏழு சிக்னல் எழுபத்தெட்டு டிராபிக்குகளைத் தாண்டி வீட்டை அடைவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.

அதிலும் டிராபிக் ரொம்ப முத்திப் போய்விட்டால் நடந்து செல்பவர்கள் கூட ஓவர்டேக் பண்ணுவதை மெளனமாக வேடிக்கை பார்க்க வேண்டிவரும். அந்த வகையில் வெளிவந்த ஒரு ரியல் டைம் கேம் தான் Yellow out.



கேம் விளையாட மவுஸே போதுமானது. கேமில் வரும் மஞ்சள் நிற கார் தான் நம்முடைய கார். நம்முன்னால் இருக்கும் மற்ற கார்,லாரிகளை முன்னும் பின்னுமாக நகற்றி மஞ்சள் நிற காரை கதவுக்கு வெளியே கொண்டு வர வேண்டும்.Level ஏற ஏற டிராபிக்கும் சுவாரஸ்யமும் கூடிக் கொண்டே செல்கிறது.

லிங்க் : http://www.6to60.com/games/1225-Yellow%20Out.html