வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

தீப்பறக்க கீபோர்ட் வாசிங்க - அடடே இசை விளையாட்டு




நீங்க தீப்பறக்க கீபோர்ட் வாசிக்கனும்.இல்லாட்டி உங்களை நோக்கி தக்காளி பறக்கும். இப்படியும் ஒரு ஜாலி விளையாட்டு.

ASD JKL எழுத்துகளின் மீது கைவிரல்களை தயாரா வச்சிக்கங்க. உங்களை நோக்கி வண்ணமயமான மண்டை ஒடுகள் அணிவகுத்து வருகிறது. எந்த எழுத்துக்கு நேரா மண்டை ஓடு வருதுன்னு குறு குறுன்னு பாத்துகிட்டே இருங்க. சரியா மண்டை ஓடு எழுத்தை தொடும் சமயம் பார்த்து அந்த எழுத்துக்கான கீயை அமுக்கிருங்க.அவ்வளவு தான்!

சரியான வரிசையில் அழுத்திக் கொண்டே இருந்தால் பின்னணியில் ஒலிக்கும் பாட்டு தொடர்ந்து ஒலிக்கும்.இல்லாட்டி உங்களை நோக்கி தக்காளி பறக்கும். டைமிங் ரைமிங் விளையாட்டு இது.

லின்க் : http://www.6to60.com/games/9622-Guitar%20Master.html


லாஜிக்கல் திங்கிங் பயிற்சி - ஒயிட் காலர் ஜாப் வேண்டும் என்பவர்களுக்கு





ஒயிட் காலர் ஜாப் வகையை சார்ந்த தொழில் நுட்பம் சார்ந்த வேலைகளின் முக்கிய அம்சம் என்னவெனில் எவ்வளவு தூரம் உங்களின் மூளை சார்ந்த உழைப்பைக் கூட்டுகின்றீர்களோ அந்தளவுக்கு உடல் சார்ந்த உழைப்பை குறைக்க முடியும் என்பதே ஆகும்.

இந்த வகை வேலைகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்கும் போது உங்களிடம் நடத்தப்படும் பரிட்சைகளில் அதிகளவிலான கேள்விகள் Logical Thinking அல்லது Logical Reasoning வகையை சார்ந்ததாகவே இருக்கும். இந்த கேள்விகளின் மூலமே சிக்கலான சூழ்நிலைகளை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள் என்று உங்களை கணிப்பார்கள்.

உங்களின் Logical Thinking திறமையின் அளவை கணிக்க உதவும் ஒரு விளையாட்டு தான் Cover Orange.



விளையாட்டின் ஒவ்வொரு Level-லயும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேட்டைக்கார குட்டி ஸ்மைலிகள் இருக்கும். நீங்கள் பயன்படுத்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் மேல் இடது ஓரத்தில் இருக்கும். மவுஸால் கிளிக்கி வரிசையாக ஒவ்வொரு பொருளாக கீழே இறக்கலாம். அந்த பொருள்களை சரியாக பயன்படுத்தி ஸ்மைலிகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.



நீங்கள் எல்லா பொருள்களையும் பயன்படுத்தியவுடன் ஒரு வில்லன் மேகம் வேகமாக வந்து பேய் மழையை(?!) கொட்டுகிறது. நீங்கள் ஸ்மைலியை பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தால் மட்டுமே மழையிலிருந்து அது தப்பிக்கும். இல்லாட்டி புஸ்வானம் ஆகி விடும். சில Level-கள் உண்மையிலேயே உங்கள் மூளைக்கு அதிகம் வேலை வைக்கின்றன. விளையாடி பாருங்களேன் . . .

லின்க் : http://www.6to60.com/games/8150-Blue%20Midget%20Stalker.html

ஏதாவது ஒரு Level-ல வந்து மாட்டிகிட்டு முழிச்சீங்கன்னா இதோ உங்க பிட் : http://www.youtube.com/watch?v=Uy_MIcwaeUA

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

நீங்க டம்மி பீஸா இல்ல பாஸா? உங்கள் ஆளுமையின் அளவு எவ்வளவு?





"உங்கள் முதலாளியை எப்போதும் திட்டாதீர்கள். ஏனென்றால் போதுமான அளவு பிரச்சினைகள் அவருக்கு ஏற்கனவே இருக்கிறது."
என்று இணையத்தில் ஒரு மேற்கோள் பார்த்தேன். நிஜம் தான்! பன்னிங்க மாதிரி கூட்டமாக இருக்கும் வேலை பார்ப்பவர்களை சிங்கம் மாதிரி சிங்கிளா சமாளிக்கிறது ஒன்னும் லேசுப்பட்ட வேலை இல்லை.

வேலை பார்ப்பவர்களுடைய வளர்ச்சி நிலை எப்பவும் பாஸிடிவ் ஆனது தமிழிஷ் மாதிரி . . . வந்தால் அளவான லாபம்.(சம்பளம்) இல்லாவிட்டால் பூஜ்ஜியம்( வேலை இல்லைனா). ஆனால் முதலாளியோட வளர்ச்சி நிலை ஏற்ற இறக்கமானது தமிழ் மணம் மாதிரி(மைனஸ் ஓட்டு?) வந்தால் பெரிய லாபம்.இல்லாவிட்டால் அசலுக்கே ஆப்பாகி நஷ்டப்பட்டு கையை சுட்டுக் கொள்ள நேரிடும்.

ஒரு ஆபிஸில் பாஸாக இருக்க மூன்று முக்கியமான விஷயங்கள்.
  1. Knowledge - கடந்த காலத்தை பற்றிய அறிவு.
  2. Planning - எதிர் காலத்தில் செய்ய வேண்டியவை பற்றிய திட்டமிடல்
  3. Implementation - திட்டமிட்டவற்றை திட்டமிட்டவாறு நடைமுறைப் படுத்துவது.
உங்களிடம் எவ்வளவு ஆளுமை செய்யும் திறமை இருக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க துல்லியமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சுயபரிசோதனை விளையாட்டு தான் Rabbit Wants Cake.



ஒரு இடத்தில் இருக்கும் சுண்டெலியை இன்னொரு இடத்தில் இருக்கும் கேக்கை Arrow கீகளின் உதவியுடன் கொண்டு செல்ல வேண்டும். இந்த ஒன்லைன் தான் கேம் மொத்தமும். இதில் எங்கப்பா ஆளுமையெல்லாம் வருகிறது என்று கேட்டால் பதில் அடுத்த பாராவில்.



விளையாட்டு தொடங்கியவுடன் எலியை ஓட வைக்க Arrow - கீகளை அமுக்கினால் எலி வரும்ம்ம் . . . ஆனா வராது. ஏன்னா நீங்க அப்படி விளையாடக் கூடாது. முதலில் நீங்கள் மேலே உள்ள RECORD பட்டனை அழுத்த வேண்டும்.பின் செல்ல வேண்டிய இடத்திற்கு யூகத்தின் அடிப்படையில் சரியான Arrow -கீகளை சரியான அளவு நேரம் சரியான காம்பினேசனில் அழுத்த வேண்டும். முடிந்ததா? இப்பொழுது PLAYBACK பட்டனை அழுத்துங்கள். உங்கள் யூகம் சரியாக இருந்தால் எலி கேக்கை பிடிக்கும்.இல்லாவிட்டால் திரும்பவும் RECORD - PLAYBACK.

இப்படியாக 25 படிகளை(Levels) நீங்கள் தாண்ட வேண்டும். யோசிச்சு விளையாடாம பிங்கி பிங்கி பாங்கி போட்டு கீபோர்டை அமுக்கி விளையாடினா மூணு படிக்கு மேல சத்தியமா தாண்ட முடியாது. மினிமம் 15 படிகள் தாண்டினா நீங்கள் பாஸாகும் வாய்ப்பு இருக்கிறது. 25 படிகளும் தாண்டினா நீங்க தான் பிக் பாஸ்.

லின்க் : http://www.6to60.com/games/9620-Rabbit%20Wants%20Cake.html


திங்கள், 22 பிப்ரவரி, 2010

சுத்தியலுடன் துரத்தி அடிக்கும் பொண்ணு - அலற வைக்கும் சவால்





'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே"-அப்படிங்கிற வாழ்க்கை தத்துவத்தில் கடைசி இரண்டு வார்த்தையில் உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா உங்களுக்குத்தான் இந்த பதிவு.

கீபோர்டில் மூன்றே மூன்று Arrow கீகளால் விளையாடும் விளையாட்டு ஒரு கஷ்டமான விளையாட்டாக இருக்க முடியுமா? கண்டிப்பாக இருக்க முடியும். உலகில் உள்ள Flash விளையாட்டுகளில் கஷ்டமான விளையாட்டுகள் என இணையத்தில் தேடினால் பெரும்பாலும் வருவது புதிர்(puzzle) வகையிலான விளையாட்டுகள் மட்டுமே. அந்த வகையில் இருந்து கொஞ்சம் விலகி உங்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் ஒரு சேஸிங் - ரேஸிங் விளையாட்டு தான் Runnaway Telly.



Mario-காலத்தில் இருந்து ரொம்ப பரிச்சயமான RPG கேம் வகையில் தான் இதுவும் வருகிறது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த விளையாட்டை சுவாரஸ்யப்படுத்துவது இதில் வரும் உங்கள் தோழி(?!) தான். விளையாட்டில் உங்கள் கதாப்பாத்திரம் ஒரு டிவி பெட்டிதான். வேகமாக ஓடி,தேவையானால் குதித்து கடைசியில் இருக்கும் டைமண்ட் வடிவத்தை அடைவது தான் உங்கள் வேலை.இதில் என்ன கஷ்டம் என்று நீங்கள் நினைத்தால் ஆப்பு உங்கள் தலைக்கு பின்னால் இருந்து வருகிறது.



உங்கள் மீது அளவில்லாத பிரியம் கொண்ட உங்கள் தோழி கடைசி வரை உங்களை துரத்து துரத்துன்னு துரத்துகிறாள் . . . கையில் ஒரு சுத்தியலோடு! விளையாட்டு ஆரம்பமான நொடியில் இருந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.கொஞ்சம் டைமிங் மிஸ்ஸானால் சுத்தியலால் உடனே அடி வாங்க வேண்டியது தான். முதல் இரண்டு Level-களை ஜஸ்ட் லைக் தட் கடந்த நான் மூன்றாவது Level-லிலேயே கைப்புள்ள மாதிரி மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டி இருந்தது. இந்த விளையாட்டில் வரும் வில்லியிடம் SAW பட வில்லனே தோற்று விடுவான் போங்கள். டிவிப்பெட்டியை ஒரு பொண்ணு கடைசி வரை துரத்துகிறாள். மெகா சீரியல் பாதிப்பான்னு தெரியலை.

விளையாட்டு ரொம்ப Entertaining-ஆ இருக்கு மிஸ் பண்ணாதிங்க!

லின்க் : http://www.6to60.com/games/9619-Runnaway%20Telly.html


வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

புதிர்-7 வழிகள் கண்டு பிடியுங்கள்-ஆபிஸை பீஸ் பீஸாக்க ( 18 +/-)



ஆளாளுக்கு 18+ பதிவு போடுகிறார்கள்.இது 18 +/- பதிவு. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் மேற்படாதவர்களுக்குமான(?!) பதிவு.இரண்டு படம் கொடுத்து இரண்டுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கச் சொல்வதெல்லாம் பழைய ஃபேஷன்.


மேலே படத்தில் காண்பது போல ஹீரோ லேப் டாப்பில் எதையோ நோண்டிக் கொண்டிருக்க எதிரில் இருக்கும் பெண்மணி ஏதோ மார்க் போட்டுக் கொண்டிருக்கிறாள்.நீங்கள் இந்த இடத்தில் ஒளிந்திருக்கும் ஏழு பொருள் / ஆப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். ஒரு பொருளைக் கண்டுபிடித்தவுடன் ஹீரோ எந்திரித்து ஆபிஸை பீஸ் பீஸாக்குகிறார். விளையாடுவதற்கு ஒரு மவுஸும் சிரிப்பதற்கு ஒரு வாயும் போதுமானது.

லின்க் : http://www.6to60.com/games/9618-Love%20the%20computer.html

வியாழன், 18 பிப்ரவரி, 2010

ஓரு கீபோர்டே ஒரு கீபோர்டை விளையாடுகிறதே! அடடே!






Akeelah and the bee என்ற புகழ் பெற்ற ஆங்கில திரைப்படம். வருடத்திற்கு ஒரு முறை நாடளவில் ஒரு Spelling போட்டி நடக்கும். ஆங்கிலத்தில் எந்த வார்த்தையை கேட்டாலும் அந்த வார்த்தையில் உள்ள எழுத்துகளை பிழை இல்லாமல் சொல்ல வேண்டும். முதன் முறையாக அந்த போட்டிக்கு செல்லும் ஒரு கருப்பின சிறுமியின் பயணத்தைப் பற்றிய அழகான feel-good படம் அது.போட்டிக்கு தயார் செய்யும் போது அவள் பெரிய வார்த்தைகளைப் பார்த்து பயப்படுவதைப் பார்க்கும் அவளின் குரு ஒரு கேள்வி கேட்பார்.

"பெரிய வார்த்தைகள் எங்கிருந்து வருகின்றன என நினைக்கிறாய்?"
"ம்ம்ம். பெரிய மனிதர்களின் மூளையில் இருந்தா?"
"இல்லை. சிறிய வார்த்தைகளில் இருந்து . . ."

இப்படியாக நீளும் அந்த உரையாடல் மிக சுவாரஸ்யமாக இருக்கும். உண்மையில் வாழ்க்கையில் எந்தவொரு சிறந்த விஷயத்தையும் அடையும் வழி கஷ்டமாக இருக்காது.எளிமையாகவே இருக்கும். சிறந்த மனிதர்கள் எளிமையானவர்களாகவே இருப்பார்கள். தனக்குத் தெரிந்ததை எல்லாருக்கும் புரியும் படி எளிமையாக சொல்வதே ஒரு பெரிய கலை.



அந்த மாதிரி எளிமையான அணுகுமுறையால் பல விளையாட்டு பிரியர்களின் நேரத்தை தினமும் கொல்லும் ஒரு நகைச்சுவை உணர்வு மிக்க விளையாட்டுதான் Jelly Jumper.விளையாட்டு நடக்கும் இடம் நீங்கள் மேலே பார்ப்பது போல் ஒரு கீபோர்டே தான். கீபோர்டின் மேல் நிற்கும் பச்சை ஜெல்லி மனிதன் தான் ஹீரோ. கீபோர்டில் அங்கும் இங்கும் இருக்கும் சில பச்சை கீகளை கைப்பற்றுவது தான் நம் வேலை.



Arrow கீகள் தான் நான்கு திசைகளில் நகர்வதற்கும். ஏதாவது ஒரு Arrow கீயை தொடர்ந்து அழுத்துவதன் மூலம் அந்த திசையில் ஒரு high-jump பண்ணலாம். சிவப்பு கீகள் மீது பட்டால் ஜெல்லி சட்னி ஆகி விடும். அடுத்தடுத்த Level-களில் வேறு சில வண்ண கீகளும் வந்து சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துகின்றன. அவற்றை நீங்களே விளையாடி தெரிந்து கொள்ளுங்களேன்.

லின்க் : http://www.6to60.com/games/9617-Jelly%20Jumper.html


புதன், 17 பிப்ரவரி, 2010

யாவரும் நலம் படமும் ஒரு உளவியல் ரீதியான புதிரும்





யாவரும் நலம் படத்தில் அருமையான காட்சி ஒன்று இரண்டாம் பாதியில் வரும். மாதவன் இரவில் கொட்டும் மழையில் தன்னுடைய அபார்ட்மென்ட்டுக்குத் திரும்புவார்.அப்போது அங்கே யாரோ இருக்கும் உணர்வு வர மாதவன் மெல்ல மாடிப்படிகளை நெருங்குவார்.தனக்கு முன்னால் யாரோ ஒருவன் கையில் சுத்தியலுடன் நடப்பதைப் பார்க்கும் மாதவன் அவனை வேகமாக துரத்த படிகளில் ஏறத் துவங்குவார்.

மாதவன் மூன்றாம் மாடி ஏறி விட்டு நம்பரைப் பார்த்தால் அது இரண்டாம் மாடி என்று இருக்கும். மாதவன் திரும்பவும் வேகமாக படி ஏற மீண்டும் மீண்டும் இரண்டாம் மாடிக்கே வந்து கொண்டிருப்பார்."என்ன நடக்குது இங்க?" என்று மாதவன் குழம்பி போவார்.மிக அருமையாக அந்த காட்சியை படமாக்கி இருப்பார்கள்.

அதே மாதிரி உங்களை உளவியல் ரீதியாக குழப்பியடிக்கும் ஒரு புதிர் விளையாட்டு தான் This is The Only Level. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக சூப்பர் ஹிட்டான புதிர் விளையாட்டு இது. இந்த எளிமையான புதிர் விளையாட்டு பற்றி மட்டும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் Youtube-ல் குவிந்து கிடக்கிறது. அப்படி என்னய்யா இதில் விஷேசம் என்பவர்கள் மேலும் தொடர்ந்து படியுங்கள்.


மேலே படத்தில் இருப்பது தான் முதல்(?!) Level. முதல் பைப்பில் இருந்து ஒரு குட்டி யானை கீழே குதிக்கிறது. அந்த குட்டி யானையை வலது ஓரத்தில் இருக்கும் இரண்டாவது பைப்பிற்கு கொண்டு போய் சேர்ப்பது தான் உங்கள் வேலை.இரண்டாம் பைப்பிற்கு முன்னால் ஒரு கதவு இருக்கிறது. அந்த கதவை திறக்க நடுவில் உள்ள பெரிய சிவப்பு பட்டனை முதலில் அடைய வேண்டும். நகர்வதற்கும் Jump பண்ணுவதற்கும் Arrow கீகள் மட்டும் தான். இந்த ஜுஜூபி கேமெல்லாம் நாங்கள் இஸ்கூலில் படிக்கிற காலத்திலேயே விளையாண்டுட்டோம் என்பவர்கள் மேலும் தொடர்ந்து படியுங்கள்.

முதல் Level முடிந்தவுடன் இரண்டாம் Level வரும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது தப்பு. மீண்டும் முதல் Level தான் வருகிறது. சரின்னு நீங்க இரண்டாவது முறை முதல் Level ஐத் தாண்டினால் மீண்டும் முதல் Level தான் வருகிறது. அது எப்படின்னு சொல்றேன். ஒரே Level திரும்ப திரும்ப வந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கும். அது தான் twist.



என்னென்ன மாதிரி twist-கள் வரும்?
  1. Left Arrow வை அமுக்கினால் குட்டி யானை வலது பக்கம் நகரும்
  2. குட்டி யானை மிக மெதுவாக நகரும்.
  3. குட்டி யானை விடாமல் குதித்துக் கொண்டே இருக்கும்.
  4. கீபோர்டுக்கு பதில் மவுஸ் பயன்படுத்த வேண்டி வரும்.
  5. குட்டி யானை தரையிலேயே நிற்காமல் மிதக்கும்.


இது மாதிரி இன்னும் பல. கண் இரண்டையும் திறந்து வைத்துக் கொண்டு இருக்கும் போதே ரொம்ப எளிமையாக உங்களை குழப்பி விடும் விளையாட்டு இது. இந்த புகழ் பெற்ற புதிர் விளையாட்டை வடிவமைத்தவர்கள் இதை பத்து நிமிடத்திலேயே முடித்து விட முடியும் என்கிறார்கள். எனக்கு என்னமோ நம்பிக்கை இல்லை சார்!

லின்க் : http://www.6to60.com/games/9616-This%20is%20The%20Only%20Level.html


புதன், 3 பிப்ரவரி, 2010

டிராபிக் போலிஸின் வேலை - ஒரு சவால் - முயன்று பாருங்கள்



"சே! போட்டான்டா ரெட்டு" -என டிராபிக் போலிஸை பழிப்பவரா நீங்கள். ஆம் என்றால் உங்களுக்குத் தான் இந்த பதிவு. டிராபிக் போலிஸ் வேலையின் நுட்பத்தை உணர ஒரு சவாலான விளையாட்டு தான் I Love Traffic.


ரொம்ப புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு Online பயிற்சி விளையாட்டு இது.அடுத்தடுத்த Level-கள் வரும் போது உங்கள் தலையை உங்கள் கையாலேயே பிய்த்துக் கொள்ள போவது நிஜம்.

எப்படி விளையாடுவது?

இதை விளையாட மவுஸே போதுமானது. ஒவ்வொரு Level-லையும் ஒரு சிக்னல் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சிக்னல்கள் இருக்கலாம்.ஒவ்வொரு சிக்னல் பக்கத்திலும் ஒரு Arrow குறி அது எந்த திசைக்கான சிக்னல் என்பதை தெரிவிக்கும்.

ஒரு சிக்னலில் ஒரு சிவப்பு விளக்கும் ஒரு பச்சை விளக்கும் இருக்கும். மவுஸை அதன் மேல் வைத்து கிளிக் செய்வதன் மூலம் எரியும் விளக்கை தேர்வு செய்யலாம். சிவப்பை எரியவிட்டால் வண்டிகள் நிற்கும். பச்சையை எரிய விட்டால் வண்டிகள் ஒடும்.அவ்வளவே!

எல்லா ரோடுகளிலும் விதவிதமான வண்டிகள் தொடர்ந்து ஓடிய படி இருக்கின்றன.இரண்டு வண்டிகள் மோதிக் கொள்ளப் போகின்றன என நீங்கள் கணித்த உடனேயே சிவப்பை கிளிக்கி ஒரு திசையை நிறுத்த வேண்டும். ஆபத்து இல்லாத தருணம் பார்த்து மீண்டும் பச்சையை கிளிக்கி அந்த திசையில் உள்ள வண்டிகளை அனுமதிக்க வேண்டும்.



கொஞ்சம் சிவப்பை போட மறந்தால் ஒரு விபத்து நடக்கும்.Game Over.கொஞ்சம் பச்சையை போட மறந்தால் அங்கு உடனே ஒரு டிராபிக் உருவாகி விடும்.Game Over.

யோசிக்காம விளையாடினால் ஜெயிக்கவே முடியாது. அதுக்காக ரூம் போட்டு யோசிச்சீங்கன்னா அப்பவும் ஜெயிக்க முடியாது. தெளிவான முடிவுகள் உடனுக்குடன் எடுத்தா வெற்றி உங்களுக்கு . . .



திங்கள், 1 பிப்ரவரி, 2010

நெப்போலியனின் கவனக் கூர்மையும் ஒரு சிறிய பயிற்சியும்




மன்னர் நெப்போலியனின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவம். ஒரு முறை நெப்போலியன் தன் அரண்மனையில் தடல் புடலான விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் கலந்து கொண்ட நண்பர்களில் சிலர் மன்னருக்கு தெரியாமல் ஒரு ரகசிய ஏற்பாட்டை செய்திருந்தனர்.

விழா தொடங்கியது. எல்லாரும் கொண்ட்டாட்டத்தில் மூழ்கி இருந்தனர். நெப்போலியன் கையில் ஒரு மது கிண்ணத்தை பிடித்தவாறு நின்றிருந்தார்.அப்பொழுது யாரும் எதிர்பாராத சமயம் திடீரென்று ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டது. விழாவுக்கு வந்தவர்கள் ஒரு நிமிடம் அரண்டு போனார்கள். நெப்போலியனை பயமுறுத்தி பார்ப்பதற்காக நண்பர்கள் செய்த விளையாட்டு தான் அது.

அப்பாடா என்று பெருமூச்சு விட்டு நெப்போலியனை பார்த்தவர்களுக்கு ஆச்சர்யம். நெப்போலியன் விரல் நுனியில் மது நிரம்பிய கிண்ணம் இருந்தது. ஒரு துளி கூட சிந்தவில்லை.ஆனால் உண்மையில் வெடிச்சத்தம் கேட்ட போது நெப்போலியன் ரொம்பவே பயந்து போய் இருந்த இடத்தில் இருந்து ஒரு அடி குதித்திருந்தார்.அப்படியும் மது சிந்தாமலிருந்தது தான் மற்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இதைப் பற்றி பின்னாளில் ஒரு முறை அவரை கேட்ட போது அவர் சொன்ன பதில்."நான் எந்த வேலையை செய்தாலும் என் முழுக்கவனமும் அதில் மட்டும் தான் இருக்கும்.எப்பொழுதும் ஒரு வேலையை செய்யும் போது என் மனம் இன்னொரு வேலையை பற்றி சிந்தித்து கொண்டிருக்காது.அதனால் தான் நான் அன்று பயந்த போதும் என் கை அசையவில்லை". இன்றைக்கு நம்மில் பலர் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இது.


அப்புறம் முழுக்கவனத்துடன் விளையாட வேண்டிய ஒரு சின்ன பயிற்சி விளையாட்டு தான் Drum Beats. மேலே படத்தில் உள்ளது போல் நம் பக்கம் இரண்டு டிரம்களும் அந்த பக்கம் இரண்டு டிரம்களும் இருக்கும். முதலில் அந்தப்பக்கம் உள்ள இரண்டு டிரம் களும் எதாவது ஒரு வரிசையில் அடித்து காண்பிக்கப்படும்.

பின் அடுத்த முறை "repeat the beats" என்று திரையில் தோன்றும் போது அந்தப்பக்கம் உள்ள டிரம்கள் முன்னே பார்த்த அதே வரிசையில் அடிக்கப்படும். ஆனால் இம்முறை நம் பக்கம் உள்ள டிரம்மை நாமும் சரியாக அதே நேரத்தில் அடிக்க வேண்டும்.இடது டிரம்மை அடிக்க Left Arrow key மற்றும் வலது டிரம்மை அடிக்க Right Arrow key.

நொடியில் அடிக்க வேண்டிய கேம் இது. விளையாடுவது எளிது தான் நீங்கள் கவனமாக இருக்கும் பட்சத்தில் . . .

லின்க் : http://www.6to60.com/games/5510-Drum%20Beats.html