செவ்வாய், 16 ஜூன், 2009

உலகத்திலேயே மிகவும் கடினமான அதே நேரம் சுலபமான புதிர்?





மிகவும் எளிமையானதைப் போன்று தோற்றமளிக்கும் இந்த புதிரை நீங்கள் Solve செய்யும் போது நிச்சயம் உங்கள் மூளை குழம்ப போவது நிச்சயம்.

முதல் படத்தில் ஏழு கற்களும் அதன் மேல் இடது பக்கம் மூன்று பச்சை தவளைகளும் வலது பக்கம் மூன்று பிரவுன் தவளைகளும் உள்ளன.

இடது பக்கம் உள்ள தவளைகளை வலது புறமும் வலது பக்கம் உள்ள தவளைகளை இடது புறமும் இரண்டாவது படத்தில் உள்ளதைப் போல மாற்ற வேண்டும்.

ஒரு நேரத்தில் ஒரு தவளையால் ஒரு கல் அல்லது இரண்டு கல் மட்டுமே தாண்ட முடியும். தவளையால் ரிவர்ஸில் தவ்வ முடியாது என்பது இன்னொரு ஆப்பு.

லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=1204&fro=1

அரை நிமிடத்தில் தீர்க்க முடிகிற இந்த சீனப் புதிரை கண்டுபிடிக்க எனக்கு முழுதாக முக்கால் மணிநேரம் ஆயிற்று. உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆயிற்று என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

விடையை கண்டுபிடிக்காமல் கண்டுபிடித்து விட்டேன் என்று பொய் சொன்னவர்கள் அடுத்த ஜென்மத்தில் தவளைகளாக பிறப்பார்களாக . . .

3 கருத்துகள்: