வியாழன், 25 ஜூன், 2009
முட்டை சுண்டெலி திருவிழா - ஒரு விக்கிபீடியாவாவது போட வேண்டும்
பழைய தமிழ் சினிமாக்களில் கதாநாயகர்கள் சிங்கம் அல்லது புலியுடன் ஆவேசமாக சண்டையிட்டு அதை வீழ்த்துவார்கள். அவர்களை அழைத்து ஒரு சுண்டெலியை அடிக்கச் சொன்னால் நிச்சயம் திக்கு முக்காடிப் போவார்கள்.
சுண்டெலியை அடிப்பது எளிதான வேலை அல்ல. அது ஒரு கலை.(கொலை எப்படி மன்னா கலையாக முடியும்?). எலிப்பொறி முதல் எலிமருந்து வரை நாம் வைத்த எதிலும் சிக்காமல் எட்ட நின்று பல்லைக் காட்டும்.
பெண்களிடம் தப்பி பிழைத்தவர்கள் கூட வாழ்க்கையில் ஒரு சில நேரங்களில் எலியிடம் மாட்டிக் கொண்டு அவதிப்பட்டிருப்பார்கள். எலிக்கும் எனக்குமான பாரம்பரியமான உறவைப்பற்றி எழுதுவதானால் குறைந்த பட்சம் ஒரு விக்கிபீடியாவாவது போட வேண்டும்.
இப்படி இருக்கப்ப தான் Cyber Mice Party(முட்டை சுண்டெலி திருவிழா?!) -ன்னு ஒரு செம ஜாலியான கேம் பார்த்தேன். கேமின் துவக்கத்தில் ஒரு பாலாடைக்கட்டியும் பத்து முதல் இருபது சுண்டெலிகளும் இருக்கும்.
இந்த கேம்ல உங்க வேலை சுண்டெலிகளை கொல்வது அல்ல!! மாறாக சுண்டெலிகளை காப்பாற்றி பத்திரமாக பாலாடைக்குள் அனுப்ப வேண்டும்.அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள்.
ஒவ்வொரு Level-லயும் அங்கங்கே சில பள்ளங்கள் இருக்கும். பள்ளத்தில் விழுந்தால் அந்த எலி காலி! மேலே படத்தில் உள்ளது போல இடது பக்கம் சில தீக்குச்சிகள், தீப்பெட்டிகள் அல்லது தட்டுகள் இருக்கும். அதை வேகமாக பொருத்தமான இடத்தில் வைத்து சுண்டெலியை காப்பாற்ற வேண்டும்.
Level ஏற ஏற கேம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கிறது. எவ்வளவோ பண்றீங்க . . . இதைப் பண்ண மாட்டீங்களா?
லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=1267&cyb=1
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சுவாரசியமான பதிவு
பதிலளிநீக்குநன்றி. உங்களது கருத்துக்களை வரவேற்கிறோம்
பதிலளிநீக்கு