ஞாயிறு, 21 ஜூன், 2009
கோபுரப் புதிர் - உங்கள் புத்திக் கூர்மையை இரண்டு நிமிடத்தில் பரிசோதியுங்கள்
நீங்கள் டிகிரி முடித்தவரானால் Tower of Hanai அல்லது Tower of brahma என்று அழைக்கப்படும் இந்த புதிரை கண்டிப்பாக ஏதாவது ஒரு பரிட்சையில் சந்தித்திருப்பீர்கள். இனிமேல் தான் டிகிரி படிக்கப் போகிறீர்கள் என்றால் இந்தப் பதிவு உங்களுக்கு மிகவும் உபயோகமானது.
கோபுரப் புதிர் விளக்கம் :
படத்தில் உள்ளது போல் மூன்று ராடுகள் இருக்கும். முதல் ராடில் சிறிய தட்டு மேலே இருக்குமாறு தட்டுகள் வரிசையாக கோபுரம் போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.இந்த அனைத்து தட்டுகளையும் இதே மாதிரி மூன்றாவது தட்டுக்கு மாற்ற வேண்டும். இதற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன.
1.ஒரு நேரத்தில் ஒரு தட்டைத்தான் உங்களால் இடம் மாற்ற முடியும்.
2.மேலே இருக்கும் தட்டைத் தான் முதலில் உங்களால் இடம் மாற்ற முடியும்.
3.எப்பொழுதும் சிறிய தட்டின் மீது பெரிய தட்டை உங்களால் வைக்க முடியாது.
கோபுரப் புதிரின் Flash வடிவம் கீழே உள்ளது.
எத்தனை தட்டுகளை வைத்து விளையாட வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்யலாம்.
லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=8835&tow=1
கூடிய வரை குறைந்த Moves -ல் நீங்கள் தீர்வை எட்ட வேண்டும்.
நான் ஐந்து தட்டுகளை ஐம்பத்து மூன்று Moves -ல் இடம் மாற்றினேன். கணக்குப் புலிகள் டிரை பண்ணிட்டு பின்னூட்டம் போடுங்களேன் :)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக