திங்கள், 15 ஜூன், 2009
நான் கோழி இல்லை!
ஒரு சின்ன அக்பர் பீர்பால்-கதை . . .
ஒரு முறை அக்பர் பீர்பாலை முட்டாளாக்கி அழகு பார்க்க வேண்டுமென்று ஆசைப் பட்டார். அதற்காக பிரமாதமாக திட்டம் ஒன்றும் போட்டார்.
பீர்பால் அவைக்கு வருவதற்கு முன்னால் ஒவ்வொரு அமைச்சரையும் அழைத்து அவர்களுக்கு ஒவ்வொரு முட்டை கொடுத்தார்.
பின்னர் பீர்பால் அவைக்கு வந்த பின் ஒன்றுமே நடவாதது போல் எல்லா அமைச்சர்களையும் அக்பர் அழைத்தார். தான் நேற்று இரவு ஒரு கனவு கண்டதாகவும் அதன் படி அரசவைத் தோட்டத்தில் இருந்து தலா ஒரு முட்டையை கண்டெடுக்கும் அமைச்சர்கள் மட்டுமே நேர்மையான அமைச்சர்கள் எனவும் கூறினார்.
உடனே ஒவ்வொரு அமைச்சராக தோட்டத்திற்குள் சென்று தாங்கள் ஏற்கனவே கையில் ஒளித்து வைத்திருந்த முட்டையுடன் திரும்பினர்.
கடைசியாக வந்தது பீர்பாலின் முறை.
பீர்பால் தோட்டத்திற்குள் சென்று தேடிய போது ஒன்றும் அகப்படவில்லை. பீர்பால் இது அக்பரின் சூழ்ச்சியாக இருக்குமென்று யூகித்தார்.
உடனே அவர் ஒரு சேவலைப் போல குரல் கொடுத்துக் கொண்டே அரசவைக்கு வந்தார். அக்பர் அந்த குரலை கேட்க சகிக்காமல் சத்தம் போடுவதை நிறுத்தி விட்டு முட்டையை கொடுங்கள் என்று கூறினார்.
அதற்கு பீர்பால் புன்னகையோடு பதில் சொன்னார் : "நான் ஒரு சேவலாக இருக்கின்ற காரணத்தினால் என்னால் முட்டை போட முடியவில்லை"
பீர்பாலை அவ்வளவு எளிதில் முட்டாளாக்கி விட முடியாது என்பதை அக்பர் உணர்ந்தார்.
--------------------------------------------------------------------------------------------
பழைய கதை தான். ஆனால் என்று படித்தாலும் சிரிப்பை வரவழைக்கக் கூடியது.
நெட்டில் சுட்ட இடம் : 6to60.com
அக்பர் பீர்பால் கதைகள், தெனாலி ராமன் கதைகள், ஈசாப் கதைகள்,ஜென் கதைகள் மற்றும் பல கதைகளின் மொத்த தொகுப்புக்கு கீழே கிளிக்கவும்.
லிங்க் : http://www.6to60.com/story.php?sto=1
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக