செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

நீங்க டம்மி பீஸா இல்ல பாஸா? உங்கள் ஆளுமையின் அளவு எவ்வளவு?





"உங்கள் முதலாளியை எப்போதும் திட்டாதீர்கள். ஏனென்றால் போதுமான அளவு பிரச்சினைகள் அவருக்கு ஏற்கனவே இருக்கிறது."
என்று இணையத்தில் ஒரு மேற்கோள் பார்த்தேன். நிஜம் தான்! பன்னிங்க மாதிரி கூட்டமாக இருக்கும் வேலை பார்ப்பவர்களை சிங்கம் மாதிரி சிங்கிளா சமாளிக்கிறது ஒன்னும் லேசுப்பட்ட வேலை இல்லை.

வேலை பார்ப்பவர்களுடைய வளர்ச்சி நிலை எப்பவும் பாஸிடிவ் ஆனது தமிழிஷ் மாதிரி . . . வந்தால் அளவான லாபம்.(சம்பளம்) இல்லாவிட்டால் பூஜ்ஜியம்( வேலை இல்லைனா). ஆனால் முதலாளியோட வளர்ச்சி நிலை ஏற்ற இறக்கமானது தமிழ் மணம் மாதிரி(மைனஸ் ஓட்டு?) வந்தால் பெரிய லாபம்.இல்லாவிட்டால் அசலுக்கே ஆப்பாகி நஷ்டப்பட்டு கையை சுட்டுக் கொள்ள நேரிடும்.

ஒரு ஆபிஸில் பாஸாக இருக்க மூன்று முக்கியமான விஷயங்கள்.
  1. Knowledge - கடந்த காலத்தை பற்றிய அறிவு.
  2. Planning - எதிர் காலத்தில் செய்ய வேண்டியவை பற்றிய திட்டமிடல்
  3. Implementation - திட்டமிட்டவற்றை திட்டமிட்டவாறு நடைமுறைப் படுத்துவது.
உங்களிடம் எவ்வளவு ஆளுமை செய்யும் திறமை இருக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க துல்லியமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சுயபரிசோதனை விளையாட்டு தான் Rabbit Wants Cake.



ஒரு இடத்தில் இருக்கும் சுண்டெலியை இன்னொரு இடத்தில் இருக்கும் கேக்கை Arrow கீகளின் உதவியுடன் கொண்டு செல்ல வேண்டும். இந்த ஒன்லைன் தான் கேம் மொத்தமும். இதில் எங்கப்பா ஆளுமையெல்லாம் வருகிறது என்று கேட்டால் பதில் அடுத்த பாராவில்.



விளையாட்டு தொடங்கியவுடன் எலியை ஓட வைக்க Arrow - கீகளை அமுக்கினால் எலி வரும்ம்ம் . . . ஆனா வராது. ஏன்னா நீங்க அப்படி விளையாடக் கூடாது. முதலில் நீங்கள் மேலே உள்ள RECORD பட்டனை அழுத்த வேண்டும்.பின் செல்ல வேண்டிய இடத்திற்கு யூகத்தின் அடிப்படையில் சரியான Arrow -கீகளை சரியான அளவு நேரம் சரியான காம்பினேசனில் அழுத்த வேண்டும். முடிந்ததா? இப்பொழுது PLAYBACK பட்டனை அழுத்துங்கள். உங்கள் யூகம் சரியாக இருந்தால் எலி கேக்கை பிடிக்கும்.இல்லாவிட்டால் திரும்பவும் RECORD - PLAYBACK.

இப்படியாக 25 படிகளை(Levels) நீங்கள் தாண்ட வேண்டும். யோசிச்சு விளையாடாம பிங்கி பிங்கி பாங்கி போட்டு கீபோர்டை அமுக்கி விளையாடினா மூணு படிக்கு மேல சத்தியமா தாண்ட முடியாது. மினிமம் 15 படிகள் தாண்டினா நீங்கள் பாஸாகும் வாய்ப்பு இருக்கிறது. 25 படிகளும் தாண்டினா நீங்க தான் பிக் பாஸ்.

லின்க் : http://www.6to60.com/games/9620-Rabbit%20Wants%20Cake.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக