வியாழன், 18 பிப்ரவரி, 2010

ஓரு கீபோர்டே ஒரு கீபோர்டை விளையாடுகிறதே! அடடே!






Akeelah and the bee என்ற புகழ் பெற்ற ஆங்கில திரைப்படம். வருடத்திற்கு ஒரு முறை நாடளவில் ஒரு Spelling போட்டி நடக்கும். ஆங்கிலத்தில் எந்த வார்த்தையை கேட்டாலும் அந்த வார்த்தையில் உள்ள எழுத்துகளை பிழை இல்லாமல் சொல்ல வேண்டும். முதன் முறையாக அந்த போட்டிக்கு செல்லும் ஒரு கருப்பின சிறுமியின் பயணத்தைப் பற்றிய அழகான feel-good படம் அது.போட்டிக்கு தயார் செய்யும் போது அவள் பெரிய வார்த்தைகளைப் பார்த்து பயப்படுவதைப் பார்க்கும் அவளின் குரு ஒரு கேள்வி கேட்பார்.

"பெரிய வார்த்தைகள் எங்கிருந்து வருகின்றன என நினைக்கிறாய்?"
"ம்ம்ம். பெரிய மனிதர்களின் மூளையில் இருந்தா?"
"இல்லை. சிறிய வார்த்தைகளில் இருந்து . . ."

இப்படியாக நீளும் அந்த உரையாடல் மிக சுவாரஸ்யமாக இருக்கும். உண்மையில் வாழ்க்கையில் எந்தவொரு சிறந்த விஷயத்தையும் அடையும் வழி கஷ்டமாக இருக்காது.எளிமையாகவே இருக்கும். சிறந்த மனிதர்கள் எளிமையானவர்களாகவே இருப்பார்கள். தனக்குத் தெரிந்ததை எல்லாருக்கும் புரியும் படி எளிமையாக சொல்வதே ஒரு பெரிய கலை.



அந்த மாதிரி எளிமையான அணுகுமுறையால் பல விளையாட்டு பிரியர்களின் நேரத்தை தினமும் கொல்லும் ஒரு நகைச்சுவை உணர்வு மிக்க விளையாட்டுதான் Jelly Jumper.விளையாட்டு நடக்கும் இடம் நீங்கள் மேலே பார்ப்பது போல் ஒரு கீபோர்டே தான். கீபோர்டின் மேல் நிற்கும் பச்சை ஜெல்லி மனிதன் தான் ஹீரோ. கீபோர்டில் அங்கும் இங்கும் இருக்கும் சில பச்சை கீகளை கைப்பற்றுவது தான் நம் வேலை.



Arrow கீகள் தான் நான்கு திசைகளில் நகர்வதற்கும். ஏதாவது ஒரு Arrow கீயை தொடர்ந்து அழுத்துவதன் மூலம் அந்த திசையில் ஒரு high-jump பண்ணலாம். சிவப்பு கீகள் மீது பட்டால் ஜெல்லி சட்னி ஆகி விடும். அடுத்தடுத்த Level-களில் வேறு சில வண்ண கீகளும் வந்து சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துகின்றன. அவற்றை நீங்களே விளையாடி தெரிந்து கொள்ளுங்களேன்.

லின்க் : http://www.6to60.com/games/9617-Jelly%20Jumper.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக