புதன், 3 பிப்ரவரி, 2010

டிராபிக் போலிஸின் வேலை - ஒரு சவால் - முயன்று பாருங்கள்



"சே! போட்டான்டா ரெட்டு" -என டிராபிக் போலிஸை பழிப்பவரா நீங்கள். ஆம் என்றால் உங்களுக்குத் தான் இந்த பதிவு. டிராபிக் போலிஸ் வேலையின் நுட்பத்தை உணர ஒரு சவாலான விளையாட்டு தான் I Love Traffic.


ரொம்ப புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு Online பயிற்சி விளையாட்டு இது.அடுத்தடுத்த Level-கள் வரும் போது உங்கள் தலையை உங்கள் கையாலேயே பிய்த்துக் கொள்ள போவது நிஜம்.

எப்படி விளையாடுவது?

இதை விளையாட மவுஸே போதுமானது. ஒவ்வொரு Level-லையும் ஒரு சிக்னல் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சிக்னல்கள் இருக்கலாம்.ஒவ்வொரு சிக்னல் பக்கத்திலும் ஒரு Arrow குறி அது எந்த திசைக்கான சிக்னல் என்பதை தெரிவிக்கும்.

ஒரு சிக்னலில் ஒரு சிவப்பு விளக்கும் ஒரு பச்சை விளக்கும் இருக்கும். மவுஸை அதன் மேல் வைத்து கிளிக் செய்வதன் மூலம் எரியும் விளக்கை தேர்வு செய்யலாம். சிவப்பை எரியவிட்டால் வண்டிகள் நிற்கும். பச்சையை எரிய விட்டால் வண்டிகள் ஒடும்.அவ்வளவே!

எல்லா ரோடுகளிலும் விதவிதமான வண்டிகள் தொடர்ந்து ஓடிய படி இருக்கின்றன.இரண்டு வண்டிகள் மோதிக் கொள்ளப் போகின்றன என நீங்கள் கணித்த உடனேயே சிவப்பை கிளிக்கி ஒரு திசையை நிறுத்த வேண்டும். ஆபத்து இல்லாத தருணம் பார்த்து மீண்டும் பச்சையை கிளிக்கி அந்த திசையில் உள்ள வண்டிகளை அனுமதிக்க வேண்டும்.



கொஞ்சம் சிவப்பை போட மறந்தால் ஒரு விபத்து நடக்கும்.Game Over.கொஞ்சம் பச்சையை போட மறந்தால் அங்கு உடனே ஒரு டிராபிக் உருவாகி விடும்.Game Over.

யோசிக்காம விளையாடினால் ஜெயிக்கவே முடியாது. அதுக்காக ரூம் போட்டு யோசிச்சீங்கன்னா அப்பவும் ஜெயிக்க முடியாது. தெளிவான முடிவுகள் உடனுக்குடன் எடுத்தா வெற்றி உங்களுக்கு . . .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக