திங்கள், 1 பிப்ரவரி, 2010

நெப்போலியனின் கவனக் கூர்மையும் ஒரு சிறிய பயிற்சியும்




மன்னர் நெப்போலியனின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவம். ஒரு முறை நெப்போலியன் தன் அரண்மனையில் தடல் புடலான விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் கலந்து கொண்ட நண்பர்களில் சிலர் மன்னருக்கு தெரியாமல் ஒரு ரகசிய ஏற்பாட்டை செய்திருந்தனர்.

விழா தொடங்கியது. எல்லாரும் கொண்ட்டாட்டத்தில் மூழ்கி இருந்தனர். நெப்போலியன் கையில் ஒரு மது கிண்ணத்தை பிடித்தவாறு நின்றிருந்தார்.அப்பொழுது யாரும் எதிர்பாராத சமயம் திடீரென்று ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டது. விழாவுக்கு வந்தவர்கள் ஒரு நிமிடம் அரண்டு போனார்கள். நெப்போலியனை பயமுறுத்தி பார்ப்பதற்காக நண்பர்கள் செய்த விளையாட்டு தான் அது.

அப்பாடா என்று பெருமூச்சு விட்டு நெப்போலியனை பார்த்தவர்களுக்கு ஆச்சர்யம். நெப்போலியன் விரல் நுனியில் மது நிரம்பிய கிண்ணம் இருந்தது. ஒரு துளி கூட சிந்தவில்லை.ஆனால் உண்மையில் வெடிச்சத்தம் கேட்ட போது நெப்போலியன் ரொம்பவே பயந்து போய் இருந்த இடத்தில் இருந்து ஒரு அடி குதித்திருந்தார்.அப்படியும் மது சிந்தாமலிருந்தது தான் மற்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இதைப் பற்றி பின்னாளில் ஒரு முறை அவரை கேட்ட போது அவர் சொன்ன பதில்."நான் எந்த வேலையை செய்தாலும் என் முழுக்கவனமும் அதில் மட்டும் தான் இருக்கும்.எப்பொழுதும் ஒரு வேலையை செய்யும் போது என் மனம் இன்னொரு வேலையை பற்றி சிந்தித்து கொண்டிருக்காது.அதனால் தான் நான் அன்று பயந்த போதும் என் கை அசையவில்லை". இன்றைக்கு நம்மில் பலர் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இது.


அப்புறம் முழுக்கவனத்துடன் விளையாட வேண்டிய ஒரு சின்ன பயிற்சி விளையாட்டு தான் Drum Beats. மேலே படத்தில் உள்ளது போல் நம் பக்கம் இரண்டு டிரம்களும் அந்த பக்கம் இரண்டு டிரம்களும் இருக்கும். முதலில் அந்தப்பக்கம் உள்ள இரண்டு டிரம் களும் எதாவது ஒரு வரிசையில் அடித்து காண்பிக்கப்படும்.

பின் அடுத்த முறை "repeat the beats" என்று திரையில் தோன்றும் போது அந்தப்பக்கம் உள்ள டிரம்கள் முன்னே பார்த்த அதே வரிசையில் அடிக்கப்படும். ஆனால் இம்முறை நம் பக்கம் உள்ள டிரம்மை நாமும் சரியாக அதே நேரத்தில் அடிக்க வேண்டும்.இடது டிரம்மை அடிக்க Left Arrow key மற்றும் வலது டிரம்மை அடிக்க Right Arrow key.

நொடியில் அடிக்க வேண்டிய கேம் இது. விளையாடுவது எளிது தான் நீங்கள் கவனமாக இருக்கும் பட்சத்தில் . . .

லின்க் : http://www.6to60.com/games/5510-Drum%20Beats.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக