புதன், 17 பிப்ரவரி, 2010

யாவரும் நலம் படமும் ஒரு உளவியல் ரீதியான புதிரும்





யாவரும் நலம் படத்தில் அருமையான காட்சி ஒன்று இரண்டாம் பாதியில் வரும். மாதவன் இரவில் கொட்டும் மழையில் தன்னுடைய அபார்ட்மென்ட்டுக்குத் திரும்புவார்.அப்போது அங்கே யாரோ இருக்கும் உணர்வு வர மாதவன் மெல்ல மாடிப்படிகளை நெருங்குவார்.தனக்கு முன்னால் யாரோ ஒருவன் கையில் சுத்தியலுடன் நடப்பதைப் பார்க்கும் மாதவன் அவனை வேகமாக துரத்த படிகளில் ஏறத் துவங்குவார்.

மாதவன் மூன்றாம் மாடி ஏறி விட்டு நம்பரைப் பார்த்தால் அது இரண்டாம் மாடி என்று இருக்கும். மாதவன் திரும்பவும் வேகமாக படி ஏற மீண்டும் மீண்டும் இரண்டாம் மாடிக்கே வந்து கொண்டிருப்பார்."என்ன நடக்குது இங்க?" என்று மாதவன் குழம்பி போவார்.மிக அருமையாக அந்த காட்சியை படமாக்கி இருப்பார்கள்.

அதே மாதிரி உங்களை உளவியல் ரீதியாக குழப்பியடிக்கும் ஒரு புதிர் விளையாட்டு தான் This is The Only Level. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக சூப்பர் ஹிட்டான புதிர் விளையாட்டு இது. இந்த எளிமையான புதிர் விளையாட்டு பற்றி மட்டும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் Youtube-ல் குவிந்து கிடக்கிறது. அப்படி என்னய்யா இதில் விஷேசம் என்பவர்கள் மேலும் தொடர்ந்து படியுங்கள்.


மேலே படத்தில் இருப்பது தான் முதல்(?!) Level. முதல் பைப்பில் இருந்து ஒரு குட்டி யானை கீழே குதிக்கிறது. அந்த குட்டி யானையை வலது ஓரத்தில் இருக்கும் இரண்டாவது பைப்பிற்கு கொண்டு போய் சேர்ப்பது தான் உங்கள் வேலை.இரண்டாம் பைப்பிற்கு முன்னால் ஒரு கதவு இருக்கிறது. அந்த கதவை திறக்க நடுவில் உள்ள பெரிய சிவப்பு பட்டனை முதலில் அடைய வேண்டும். நகர்வதற்கும் Jump பண்ணுவதற்கும் Arrow கீகள் மட்டும் தான். இந்த ஜுஜூபி கேமெல்லாம் நாங்கள் இஸ்கூலில் படிக்கிற காலத்திலேயே விளையாண்டுட்டோம் என்பவர்கள் மேலும் தொடர்ந்து படியுங்கள்.

முதல் Level முடிந்தவுடன் இரண்டாம் Level வரும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது தப்பு. மீண்டும் முதல் Level தான் வருகிறது. சரின்னு நீங்க இரண்டாவது முறை முதல் Level ஐத் தாண்டினால் மீண்டும் முதல் Level தான் வருகிறது. அது எப்படின்னு சொல்றேன். ஒரே Level திரும்ப திரும்ப வந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கும். அது தான் twist.



என்னென்ன மாதிரி twist-கள் வரும்?
  1. Left Arrow வை அமுக்கினால் குட்டி யானை வலது பக்கம் நகரும்
  2. குட்டி யானை மிக மெதுவாக நகரும்.
  3. குட்டி யானை விடாமல் குதித்துக் கொண்டே இருக்கும்.
  4. கீபோர்டுக்கு பதில் மவுஸ் பயன்படுத்த வேண்டி வரும்.
  5. குட்டி யானை தரையிலேயே நிற்காமல் மிதக்கும்.


இது மாதிரி இன்னும் பல. கண் இரண்டையும் திறந்து வைத்துக் கொண்டு இருக்கும் போதே ரொம்ப எளிமையாக உங்களை குழப்பி விடும் விளையாட்டு இது. இந்த புகழ் பெற்ற புதிர் விளையாட்டை வடிவமைத்தவர்கள் இதை பத்து நிமிடத்திலேயே முடித்து விட முடியும் என்கிறார்கள். எனக்கு என்னமோ நம்பிக்கை இல்லை சார்!

லின்க் : http://www.6to60.com/games/9616-This%20is%20The%20Only%20Level.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக