வெள்ளி, 12 மார்ச், 2010

ஒரு கிளாஸிக் புதிர் - உங்க மூளையை Refresh செய்வதற்கு!




உங்களிடம் ஒரு நிமிடமும் ஒரு மூளையும் இருந்தால் போதும். ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பல வடிவங்களில் நம்மை துரத்தும் ஆடு-நரி-முட்டைகோஸ் புதிருக்கு நிச்சயம் உங்களால் விடை சொல்ல முடியும். Flash வடிவத்தில் இருக்கும் இந்த புதிருக்கு விடை கண்டுபிடிக்க ஒருவருக்கு ஆகும் அதிக பட்ச நேரமே ஒரு நிமிடம் தான்.

இனி புதிர்.

ஆற்றின் ஒரு கரையில் ஒரு ஆடு,ஒரு நரி மற்றும் ஒரு முட்டைகோஸ் இருக்கிறது. இந்த மூன்றையும் பத்திரமாக மறு கரையில் சேர்க்க வேண்டும். ஒரு சமயத்தில் ஏதாவது ஒன்றை மட்டுமே உங்களால் படகில் வைக்கவும் மறுகரைக்கு கொண்டு செல்லவும் முடியும்.இதில் என்ன சிரமம், ஒவ்வொன்றாக மூன்றையும் வரிசையாக கொண்டு சென்று விடலாமே என நீங்கள் நினைத்தால் முக்கியமான டுவிஸ்ட் அடுத்த பாராவில்.

நீங்கள் பக்கத்தில் இல்லாவிட்டால்(அதாவது மறுகரையில் இருந்தால்) ஆடு முட்டைக்கோஸை விழுங்கி விடும். நரி ஆட்டை விழுங்கி விடும். இந்த மாதிரி எதுவும் நடக்காமல் சரியான வழியில் மூன்றையும் கரை சேர்ப்பதில் தான் உங்கள் திறமை அடங்கி இருக்கிறது.




படத்தில் உள்ளது போல் நீங்கள் ஒரு கரையில் முதலில் இருப்பீர்கள். மேலே உள்ள மூன்று வட்டங்களில் ஒன்றை மவுஸால் கிளிக்குவதன் மூலம் மூன்றில் ஏதாவது ஒன்றை படகில் ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியும். அதே மாதிரி Go வை அழுத்துவதன் மூலம் படகை இடம் வலமாக இரு கரைக்கும் கொண்டு சொல்ல முடியும்.

உங்களால் எவ்வளவு குறைந்த நேரத்தில் மற்றும் எவ்வளவு குறைந்த முயற்சிகளில் புதிரை அவிழ்க்க முடிகிறது என பரிட்சீத்து பாருங்களேன்.

லின்க் : http://www.6to60.com/games/8830-Wolf,%20Sheep%20and%20Cabbag.html

1 கருத்து: