வியாழன், 11 மார்ச், 2010
உங்க BOSS-ஐ அடித்து துவைத்து காயப்போட 19 வழிகள்
நீங்களே ஒரு BOSS-ஆக இருக்கும் பட்சத்தில் இங்கேயே ஓடிவிடுங்கள். பதிவு உங்களுக்கானது அல்ல. மீறி படித்து மன உளைச்சலுக்கு ஆனால் கம்பெனி பொறுப்பேற்காது(யார் கம்பெனி?). மீதிப்பேர் தொடருங்கள்.
நமக்கும் நம்ம பாஸுக்கும் இடையிலான பாரம்பரிய உறவு டாம் & ஜெர்ரி தொடரைப் போல முடிவில்லாதது. இதில் யார் டாம் யார் ஜெர்ரி என்பது இடம், நேரம் மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து மாறக்கூடிய விஷயம். ஆனாலும் பல நேரங்களில் கைப்புள்ள மாதிரி சிக்குவது நாம் தான்.
நம்ம பாஸுக்கு மூடு சரியில்லைன்னா ஏதாவது ஒரு அட்டு காரணம் சொல்லி நம்மை திட்டி தீர்த்து அவருடைய கோபத்தை தணித்துக் கொள்ள அவருக்கு வழி இருக்கிறது.ஆனா நம்ம நிலைமை? சாவுகிராக்கின்னு வாயில் வந்தாலும் சார் ஓகே சார்-னு பம்ம வேண்டியது தான்.
உங்கள் தீராத கோபத்தை குறைக்க வழி செய்யும் ஒரு விவகாரமான விளையாட்டு தான் Dont Whack Your Boss.
உங்கள் அறைக்கு உங்கள் பாஸ் வருகிறார். கையில் இருக்கும் ரிப்போர்ட் சகிதம் உங்களை வார்த்தைகளால் வறுத்தெடுக்கிறார். உங்கள் அறை முழுவதும் இருக்கும் நிறைந்திருக்கும் பொருட்களில் 19 பொருட்களை நீங்கள் ஒவ்வொன்றாக கண்டுபிடிக்க வேண்டும்.
ஒரு பொருளை நீங்கள் மவுஸால் கிளிக்கிய மறு நிமிடம் நம்ம ஹீரோ தன்னோட பாஸ்-ஐ அடி பின்னுகிறார். எல்லாம் நல்லபடியாக முடிந்தவுடன்(?!) கீழே உள்ள "Cleaner"-ஐ அழுத்துங்கள். எச்சரிக்கை : உங்க பாஸ் மீது நீங்கள் செம காண்டில் இருந்தால் மட்டும் இதை விளையாடுங்கள்.
ஏன்னா இதில் சில காட்சிகள் ஹாலிவுட் டார்ச்சர் வகைப்படங்கள் அளவுக்கு இருக்கிறது. அதிகமாக இரத்தம் செலவிட்ட விளையாட்டுகள் என ஒரு லிஸ்ட் தயார் செய்தால் நிச்சயம் முதல் பத்து இடத்திற்குள் இதற்கு ஒரு இடம் உண்டு.
செம காமெடியான விளையாட்டு இது. இதை ஆபிஸில் வைத்து விளையாடிக் கொண்டு இருக்கும் போது உங்கள் பாஸிடமே நீங்கள் சிக்கினால் அதைவிட பெரிய காமெடியாக இருக்கும்.
லின்க் : http://www.6to60.com/games/610-Whack%20Your%20Boss.html
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக