நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பிரம்மாண்டமான விஷயங்களை விட நம்மை புன்முறுவல் செய்ய வைக்கும் சில எளிமையான விஷயங்கள் தான் நம் மனதில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துவிடுகின்றன.
Hasee Bounce என்ற இந்த விளையாட்டு நீங்கா புகழ் பெற்றதன் காரணமும் இது தான்.
- இந்த விளையாட்டின் எளிமை
- இதில் வரும் கார்ட்டூன் கேரக்டர்
- சிரிப்பை வரவழைக்கும் பின்னணி இசை(?!)
மேலே படத்தில் உள்ளது போல் இரண்டு குண்டு நண்பர்கள் எதிரெதிரே இருக்கின்றனர். மவுஸை அழுத்துவதன் மூலம் ஒரு குண்டு நண்பரை கீழே தள்ளி விடலாம். உடனே அது சீஸா-வில் குதிக்க மற்றொரு குண்டு நபர் இப்போது மேலே சென்று விடுவார். அவ்வளவு தான் விளையாட்டே!
தொடர்ந்து வரும் பழங்களை மாறி மாறி பிடிக்க வேண்டும். இடையிடையே வரும் வினோத உருவங்களை தவிர்க்கவும். அவ்வப்போது வரும் "H" "a" "s" "e" எழுத்துகளை தவறாமல் பிடிக்க வேண்டும்.பிடிக்காவிட்டால் என்ன ஆகிறது என்று நீங்களே பாருங்களேன்.
லின்க்: http://www.6to60.com/games/9631-Hasee%20Bounce.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக