செவ்வாய், 30 மார்ச், 2010

தினம் ஒரு முறை ஒரு தடவை ஒரு நிமிடம் இதை செய்யுங்கள்




நாள் முழுவதும் புத்துணர்வுடணும் சுறுசுறுப்பாகவும் இருக்க பெரியவர்கள் தினமும் காலை தியானம் செய்யச்சொல்வார்கள். ஒரே ஒரு நிமிடம் உங்களால் உங்கள் மனதை அலைபாயாமல் கட்டுப்படுத்த முடிந்தால் அது அந்த நாளையே உற்சாகமாக்கி விடும்.

நிற்க. இது தியானம் பற்றிய பதிவு அல்ல. ஆனால் தியானத்திற்கு நிகராக உங்களை ஒரு நிமிடத்தில் மூளையை உச்சகட்ட சுறுசுறுப்பு அடையச் செய்து விடுகிறது இந்த சவாலான விளையாட்டு.விளையாட்டின் பெயர் Click the Color Not the Word.



விளையாட்டின் பெயரே மொத்த விளையாட்டுக்கும் விளக்கம் தந்துவிட்டது! மேலே படத்தில் உள்ளது போல் ஒரு வார்த்தை நடுவில் தோன்றும். அந்த வார்த்தை எந்த நிறத்தில் இருக்கிறதோ அந்த வார்த்தையை கீழே கொடுத்திருக்கும் ஆறு வார்த்தைகளில் இருந்து கிளிக்க வேண்டும்.

அதாவது green என்ற வார்த்தை blue நிறத்தில் தோன்றினால் நீங்கள் கிளிக்க வேண்டியது blue தான் green அல்ல!! ஒரு கிளிக் பண்ண உங்களுக்கு கொடுக்கப்படும் நேரம் மூன்று வினாடிகள் மட்டுமே. ஒரு தடவை தப்பா கிளிக்கினால் திரும்ப முதல் Level-க்கே வந்துவிடுவீர்கள்.

சத்தியமாக ரொம்ப சுலபமான விஷயம் சார் இது. ஆனா ஒரே ஒரு நிமிடம் இதில் தாக்குப்பிடிக்க முடிந்தால் உங்க காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்.

லின்க் : http://www.6to60.com/games/5555-Click%20the%20Color%20Not%20the%20Word.html


4 கருத்துகள்:

  1. ரொம்ப கஸ்டம் போல இருக்கு சார்.

    படிக்கும் போது ஏற்படும் களைப்பினை நீக்க இப்படியான விளையாட்டுக்களை விளையாடுவதுண்டு. நாளைக்காலை இதை முயற்சிக்கலாம்.

    பகிர்வுக்கு நன்றி )

    பதிலளிநீக்கு