புதன், 1 பிப்ரவரி, 2012

கிராமத்து வாசத்துடன் ஒரு வீர விளையாட்டு! விளையாட அழைப்பது வீரர்களை மட்டும்!


என்னதான் நாகரீக மோகமும், பட்டணத்து பகட்டும் நம்மை ஆட்கொண்டாலும் பச்சை பட்டு உடுத்திய வயல்வெளியும், வீர விளையாட்டும், மாறாத மனம்கொண்ட கிராமத்து மக்களையும் நம்மால் மறக்க முடியாது.

வீர விளையாட்டு என்றாலே நம் எல்லோரின் நினைவில் வருவது ஜல்லிக்கட்டு, குதிரை வண்டி பந்தயம் இன்னும் சில...

இது போன்ற விளையாட்டுகளில் பெரியவர்களுக்கு மட்டுமல்ல சிறுவர்களுக்கும் மிகவும் பிடித்த விரும்பி விளையாடும் விளையாட்டு கவட்டை கொண்டு மரங்களில் இருக்கும் இளநீர், மாங்கனிகளை அடிப்பது.

இந்த விளையாட்டு சிறுவர்களிடையே பெயர் போன விளையாட்டு யார் அதிக இளநீர், மாங்கனிகளை அடிக்கின்றனரோ அவர்களே சிறந்த வீரர் எனக் கருதப்படுவதோடு மட்டுமல்லாமல் அந்த பழங்களை பகிர்ந்து உன்பார்கள்.

என்னங்க நான் சொல்வதைக் கேட்கும்போது பழைய நினைவுகள் உங்களை தட்டி எழுப்புகிறதா?! மீண்டும் அந்த நாட்கள் வருமா என்ற ஏக்கம் வருகிறதா?! கவலை வேண்டாம் !

உங்களின் இளமை பருவத்தையும், கிராமத்து சூழலையும் நாங்கள் தருகிறோம் உங்கள் மனம் மகிழ சென்று விளையாடுங்கள் உங்களின் சிறு வயது நண்பர்கலோடு.

கவனிக்க வேண்டியவை :
உங்கள் மௌஸ் கொண்டு கவட்டையை இழுத்து அடிக்க வேண்டும்.
இளநீர், மாங்கனிகளை மட்டுமே கவட்டை கொண்டு அடிக்க வேண்டும்.
கிளி, காக்கைகளை அடிக்க கூடாது.

கிராமத்து வாசத்துடன் விளையாட, கிளிக் செய்க

லின்க் :http://www.6to60.com/games/9700-Sling%20Shot.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக