சனி, 30 ஜனவரி, 2010

எண் விளையாட்டுகளும் நம் புதிர் அவிழ்க்கும் திறமையும்



சில நேரங்களில் ஓவராக போரடிக்கும் போது நம் மனதையும் அறிவையும் ஆரோக்கியமான அதே சமயம் விறுவிறுப்பான ஒரு விஷயத்தை நோக்கி திசை திருப்புவது ரொம்ப முக்கியம். இல்லையேல் வாழ்கையில் தொய்வோ அல்லது மன அழுத்தமோ உண்டாக வாய்ப்பிருக்கிறது.

பள்ளிக்காலங்களில் சுவாரஸ்யமாக விளையாடி மகிழ்ந்த எண் விளையாட்டுகளை பதின்ம வயதுகளிலேயே மறந்து போய்விடுகிறோம். எந்த வயதிலும் எண் விளையாட்டு விளையாடுவது நம்மை சுறுசுறுப்புக்குள்ளாக்கும் விஷயமே.அந்த வகையில் ஒரு நல்ல எண் விளையாட்டு கீழே.



தொடக்கத்தில் 1 முதல் 15 வரையிலான எண்கள் மாற்றி மாற்றி அடுக்கப்பட்டிருக்கும். இது தவிர ஒரே ஒரு எண்ணுக்கான இடம் மட்டும் காலியாக இருக்கும். இந்த காலி இடத்தைப் பயன்படுத்தி எண்களை இடம் மாற்றி எண்களை 1 முதல் 15 வரை வரிசையாக அடுக்க வேண்டும்.



இந்த கேமை அதிர்ஷ்ட அடிப்படையில் குருட்டாம்போக்காக விளையாட முடியாது. அப்படி விளையாடினால் கடைசி Step-ல் வந்து முழிக்க வேண்டி வரும்.நான் முழித்த மாதிரி! அப்புறம் கேம் விளையாடும் போது வலது பக்கம் Moves எண்ணிக்கை காண்பிக்கப் படுகிறது. அதை வைத்து எவ்வளவு குறைவான Moves- ல் கேமை முடிக்கிறீர்கள் என நீங்கள் உங்கள் திறமையை எடை போடலாம்.

லிங்க்: http://www.6to60.com/games/1178-Absolutis%20Puzzle%2002.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக